பெற்றோரைப் பிறந்தகத்தைப்
பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில்
கடமையறம் ஆற்றப்
பற்றற்ற துறவியெனக்
குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில்
எனைப் பதியாய்க் கொண்டென்
நற்றவத்தால் என் வாழ்க்கைத்
துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை
இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும்
மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கிறேன்.
வாழ்த்தி மகிழ்கின்றேன்.
–அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வளமுடன்!











