ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவைகளிலிருந்து விடுபட?
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவைகளிலிருந்து விடுபட இந்த புகையை வீட்டில் போட்டாலே போதும்.
நமக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றலைத் தூண்டி விட்டு,
அந்த ஆற்றலை நம் வீட்டிற்கு முன்பு காற்றோடு காற்றாக கலந்து விட்டு விட்டால், அதன்
மூலம் நமக்கு தொடர் கஷ்டங்கள் வர ஆரம்பிக்கும்.
வீட்டில் என்னதான் பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் காற்றில் கலந்து நம்மை
ஆட்டிப்படைக்கும் இந்த ஏவல் பில்லி சூனிய பிரச்சனையில் இருந்து விடுபடவே முடியாது.
வீட்டில் அடுக்கடுக்காக ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனைகள் வர தொடங்கும்.
வீட்டில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கெட்டுப்போகும். சண்டை சச்சரவுகள் வரத்தொடங்கும்.
வருமானம் தரக்கூடிய வேலையை இழந்து, கடன் பிரச்சனையில் சிக்கி குடும்பமே
சின்னாபின்னமாகும்.
உயிர் சேதாரம் ஏற்படும் அளவிற்குக்கூட காற்றில் கலந்திருக்கும் இந்த எதிர்மறை ஆற்றல்
நம்மை சுற்றி சுற்றி அடிக்கும்.
இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க சித்தர்களால் சொல்லப்பட்ட ஒரு பரிகார
முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். திரிகடுகத்தை
பற்றி நாம் எல்லோரும் கேள்விபட்டிருப்போம்.
மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்தது தான் இந்த திரிகடுகம்.
உடலில் இருக்கும் வியாதிகளை அடித்து விரட்டக் கூடிய மகத்துவ குணம் கொண்ட இந்தப்
பொருளுக்கு எதிர்மறை ஆற்றலை விரட்ட கூடிய சக்தியும் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.
வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம்
போட வேண்டும். அதில் சிறிது வெண் குங்கிலியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
திரிகடுகம் எனப்படும் சுக்கு மிளகு திப்பிலி இந்த மூன்று பொருட்களை சிறிதளவு அந்த
நெருப்போடு சேர்த்து, புகை போட்டு இந்தப் புகையை வீடு முழுவதும், வீட்டிற்கு உள்ளே
இருந்து, வெளியே வரை காண்பித்து வரவேண்டும். வீட்டில் உள்ள அறைகள் அத்தனையிலும்
இந்த புகை நிரம்பியிருக்க வேண்டும்.
இப்படி செய்தால் காற்றின் மூலமாகவும், நீரின் மூலமாகவும் அடுத்தவர்கள் உங்களுக்கு ஏதேனும் செய்வினை வைத்து இருந்தால், அந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
கண்ணுக்குத் தெரிந்த எதிரே நின்று சண்டை போடும் எதிரிகளைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் நமக்கு தெரியாமல் நாம் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து நமக்கு தெரியாமல் ஏவி விடப்படும் எதிர்மறை ஆற்றல்களை சமாளிப்பது கஷ்டம்.
சரி, இப்படிப்பட்ட பிரச்சனை எங்களுக்கு உள்ளது என்பதை நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது. நன்றாக இருக்கின்ற குடும்பத்தில் திடீரென்று ஏதாவது பிரளயம் போல கஷ்டம் வந்து, அந்த பிரச்சனையில் நீங்கள் சிக்கிக் கொள்ளும் போது இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.
ஒருவேளை உங்களுக்கு கெட்ட நேரத்தில் மூலமாகக் கூட கஷ்டம் வந்து இருக்கலாம். அப்படி இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், அந்த கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
ஒருவேளை எங்களுக்கு யாரும் செய்வினை வைக்காமல் இந்த புகையை வீட்டில் போட்டால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் தேவை கிடையாது.
வீட்டில் இருக்கும் கண்திருஷ்டி, எதிர்மறை சக்தியை துரத்தியடிக்கவும் இது ஒரு சுலபமான பரிகார முறை. நம்பிக்கையோடு செய்யுங்கள். நன்மை மட்டுமே நடக்கும்.











