நிறைய குடும்பங்கள் மீள முடியாத துயரத்தில் கஷ்டத்தில் தத்தளித்து வருவதை நாம்
பார்த்திருப்போம். அதாவது அந்த குடும்பத்தில் ஒரு நாள் கூட நிம்மதி இருக்காது. ஏதாவது ஒரு
மருத்துவச் செலவு வந்து கொண்டே இருக்கும்.
அந்த மருத்துவ செலவு நிரந்தரமான செலவாக மாறும். வீட்டில் இருப்பவர்கள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிரந்தர குறை இருக்கும். சிலருக்கு திருமணம் நடந்திருக்காது.
சிலருக்கு திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். குழந்தைகள்
இருந்தாலும் அது ஊனமாக இருக்கும். இப்படி பல தலைமுறைகளாக ஒரு குடும்பத்தில்
துயரங்களும் துன்பங்களும் தொடருகிறது என்றால் அதற்கு காரணம் ஏதோ ஒரு முன் ஜென்ம
சாபம் தான்.
இதை நம்மாலேயே உணர முடியும். அப்படி இல்லையென்றால் குடும்பத்தில்
உள்ளவர்களுடைய ஜாதக கட்டத்தை நல்ல ஜோதிடரிடம் காண்பித்தால் அவர்
சொல்லிவிடுவார் குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு என்ன காரணம் என்று.
☘️
நம்முடைய தலைமுறையில் ஏதோ ஒரு ஜென்மத்தில் நம்முடைய முன்னோர்கள் யாருக்கோ
அறியாமல் செய்த பாவத்தினால், சாபத்தை வாங்கி இருக்கலாம். அந்த சாபம் நம்முடைய
குடும்பத்தை பின் தொடரலாம்.
அல்லது நாமே அறியாமல் ஏதாவது ஒரு பாவத்தை செய்து இருந்தாலும் அந்த பாவம்
நம்முடைய பிள்ளைகளை சென்றடையலாம். இதற்கெல்லாம் தீர்வு பெற ஆன்மீக ரீதியாக எந்த
வழிபாட்டை மேற்கொள்வது.
☘️
நாம் எல்லோருக்கும் அப்பனாக இருப்பவன் அந்த சிவபெருமான். அவனுடைய பாதங்களைப்
பற்றிக் கொள்ளுங்கள். ஒரு பிரதோஷ நாளைக் கூட தவற விடாதீர்கள். தொடர்ந்து
சிவபெருமான் கோவிலுக்கு சென்று சிவனின் பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்.
பிரதோஷ நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிவரை சிவன் கோவிலிலேயே அமர்ந்து உங்களுடைய குடும்ப கஷ்டம் தீர வேண்டும். யார் செய்த பாவமாக இருந்தாலும் சரி, அந்த பாவத்திற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டு வரவேண்டும். உங்களுடைய கஷ்டத்தை நந்திதேவரின் காதல் சொல்லுங்கள்.
☘️
இதற்காக நந்திதேவரை தொட்டு காதில் போய் சொல்லாதீங்க. நந்தி தேவருக்கு அருகில் அமர்ந்து தியான நிலையில் உங்கள் கஷ்டங்களை சொல்லுங்கள். நந்திதேவர் உங்களுடைய பிரச்சினைகளை உடனடியாக சிவபெருமானிடம் கொண்டு சென்று சொல்லி பிரச்சினைக்கான தீவினை வாங்கி தருவார்.
கோவிலுக்கு செல்லும்போது வில்வ இலையை வாங்கிச் செல்ல மறக்காதீங்க. இதோடு மட்டுமல்லாமல் தினமும் சிவன் கோவிலுக்கு சென்று கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தால், பல தலைமுறைகளாக உங்களை தொடரக் கூடிய பிரச்சனைகள் உங்களுடைய தலைமுறையில் சரியாகும்.
☘️
இது தவிர விளக்கு பரிகாரம் ஒன்று நமக்கு சொல்லப்பட்டுள்ளது. முழுத் தேங்காய் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதன் மேலே இருக்கும் குடுமியை எடுத்துவிடுங்கள். மூன்று ஓட்டைகள் இருக்கும் அல்லவா.
அதில் ஒரு கண்ணில் ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியே எடுத்து விடுங்கள். அந்த தேங்காய்க்கு உள்ளே நல்லெண்ணெய் ஊற்றி விடுங்கள். அந்த ஓட்டையில் திரி போட்டு தீபம் ஏற்றி பூஜை அறையில் வைத்து மனதார இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டால்,
முன்ஜென்ம பாவங்கள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. (தட்டில் வைத்தால் தேங்காய் நிற்காது அல்லவா. ஒரு சொம்பின் மேலோ அல்லது பச்சரிசியிலோ கலசம் போல இந்த தேங்காயை நிற்க வைத்துக் கொள்ளலாம்.)
☘️
ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தீபத்தை ஏற்றலாம். இத்தனை வாரங்கள்தான் ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இந்த தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை உடைத்து தீபம் போடக்கூடாது.
முழு தேங்காயில் ஓட்டை போட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. சிறிய தேங்காயாக பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். தீபம் எரிந்து முடிந்த பின்பு தேங்காயை உடைத்து உள்ளே இருக்கும் தேங்காயை பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை பின்பற்றலாம்.











