கர்ம தசைகளில் யோகம் தரும் மாதங்கி
கர்ம தசைகள் என சொல்லப்படுபவை ராகு கேது மற்றும் சனி.
மூவரும் கர்ம காரர்கள் மனிதனின் கர்ம கணக்குகளின் மூலம் பலன்கள் கொடுப்பவர்கள் இந்த மூன்றும் ..
மாதங்கி அம்பாள் சக்தி சொரூபமாக விளங்குபவள். சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவமாக இருப்பவள் மாதங்கி ..
அமானுஷ்ய சக்திகளை, தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேவதைகள், மாதங்கி, மூகாம்பிகா, ஸ்ரீவித்யா, பிரித்தியங்கரா, துர்க்கை, சின்னமஸ்தா தேவி போன்றவர்கள் ..
யட்சினி உபாசகர்கள், இவர்களின் அருளைப் பெறும் பொழுது அமானுஷ்ய சக்திகளை தன் வசப்படுத்துவது போன்றவற்றை செய்கின்றனர் ..
மாதங்கி வழிபாடு சமுதாயத்தில் மிகவும் பிரபலமான கடைநிலை மக்கள் மற்றும் ஜன வசியத்தை தரவல்லது குறிப்பாக சனி தசையில், அரசியல் அரசு தொடர்பாக காரியங்களில் வெற்றி பெறுவதற்கு மாதங்கி வழிபாடு மிகப்பெரிய நன்மை தரும் ..
“உச்சிஷ்டா”-சண்டாலினி என்பதும் மாதங்கியின் மறுபெயர் ஆகும் ..
ராகு சனி தசை மட்டுமல்லாது, புதன் தசையில் யோகம் செய்வதற்கு மாதங்கி சிறந்த பரிகாரம் ஆகும் ..
மாதங்கி பச்சைநிறம் உடையவள் மரகதப்பச்சை க்கு அதிபதி ..மாதங்கியின் கைகளில் இருக்கும் மண்டை ஓடு, கிளி ,மற்றும் உடுக்கை வாள் போன்றவையும் காணப்படும் மாதங்கியின் மறுவடிவமே மதுரை மீனாட்சி அம்பாள்
பொதுவாக யட்சிணி போன்ற தேவதைகளின் வழிபாடு ,எதிரிகளின் தொல்லை மற்றும், துர் சக்திகளிலிருந்து காப்பாற்றுதல், எதிலும் ஜெயம், போட்டி தேர்வுகள் அரசு அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி பெறுதல் போன்றவற்றிற்கு மாதங்கி, ஸ்ரீவித்யா போன்ற. யட்சிணி வழிபாடு மிகுந்த நன்மை தரும் .










