புது வாழ்க்கையை அனுபவிக்க போகிறாய் – ஸ்ரீ சாய் ராம்
இந்த உலகத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் எனது கட்டளைக்கு உட்பட்டவை. அது யாராக இருந்தாலும் விதிக்கப்பட்ட கர்ம பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும் இது உலக நீயதி.
ஆனால் உனது கர்ம பலனையும், அனைத்து ஜீவ ராசிகளின் கர்ம பலன்களையும் சேர்த்து நான் சுமந்து கொண்டு இருக்கிறேன்.
நீ செய்யும் அனைத்திற்கும் கணக்கு வைத்து இருக்கிறேன் எனக்கு தெரியாது என்று மட்டும் நினைக்காதே. ஒவ்வொரு செயலிற்க்கும் தனி தனியாக கணக்கு வைத்து இருக்கிறேன்.
எல்வற்றையும் செய்து விட்டு என்னை எப்படி உன்னால் அழைக்க முடிகிறது. எப்படி எனது நாமத்தை உச்சரித்து கொண்டு இருக்கிறாய்.
உன் மனதில் எந்த சலனமும் இல்லாமலா இருக்கிறாய். நான் உனது பாவ மூட்டையை சுமந்து கொண்டு இருக்கிறேன். நீ செய்த தவறை உணர்ந்து கிடைத்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ கற்றுக்கொள்
என்மீது முழுமையாக பக்தியை செலுத்து உனக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை மாற்றுவதற்கு வழி செய்து கொண்டு இருக்கிறேன் உனது சுபாவத்தை மாற்றி கொள்ள முயற்சி செய்.
உனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களை விரைவில் அகற்றி உனக்குள் இருக்கும் கெட்ட சிந்தனைகளை ஒழிக்க போகிறேன். காத்திரு நீ எனது பிள்ளை உன்னை கன்டிக்க புத்தி புகட்ட எனக்குதான் உரிமை இருக்கிறது.
கவலை படாமல் இரு நீ மாற போகிறாய் . புது வாழ்க்கையை அனுபவிக்க போகிறாய்.
தைரியமாக இரு ஜெயிக்க போகிறாய். அன்று என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்வாய்.
பேச முடியாமல் தவிப்பாய் என்னை தேடி அலைந்து ஓடிவருவாய். ஆனந்தத்தில் என்னை பார்த்து அழுது விடுவாய். உன்னை தோற்க்க விடுவேனா அதற்காகவா நான் உன்னை தேடி வந்திருக்கிறேன்.
கவலை படாதே நிச்சயமாக உன்னை கரை சேர்ப்பேன். இது தெரியாமல் கவலை பட்டு கொண்டு இருக்கிறாய். நம்பிக்கையோடு இரு நம்பிக்கை தான் வாழ்க்கை. அப்பா நான் இருக்கிறேன் நிழலாக.
ஓம் ஸ்ரீ சாய் ராம்.











