உன்னால் முடியும் – ஓம் சாய்ராம்
அன்புக் குழந்தையே! நீ படும் துயரமும், அனுபவிக்கிற மன இறுக்கமும், அழுகிற அழுகையும் என்னை பாடாய் படுத்துகிறது, இனி உன்னை அதிகமாக நேசிக்கப்போகிறேன், இதுவரை உனக்கு நடந்த கெடுபலன்களை மாற்றியமைக்கப்போகிறேன்.
நீ புத்திசாலியாக இருந்து உன் குடும்பத்தை கட்டி எழுப்பு, உன்னால் மட்டுமே, குடும்பத்தில் இழந்துபோன அனைத்தையும் மீட்டு வர முடியும். வீட்டிற்குள் உட்கார்ந்து வீணாக காலத்தை முடக்காமல், உன் குடும்பத்தை எப்படி எல்லாம் மீட்கலாம் என திட்டமிடு.
பிறர் உன்னை கேலி பேசுகிறார்கள், குறை கூறுகிறார்கள், அவமரியாதையாக பார்க்கிறார்கள் என்றெல்லாம் கவலைபடாதே, அவர்களெல்லாம், உன் வளர்ச்சி பிடிக்காமல், மீண்டு வந்துவிடுவாய் என்ற பயத்தில் புலம்புகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு புன்சிரிப்பைத் தவிர வேறெதையும் காட்டாதே. இழப்பிலிருந்து படிப்பைக் கற்றுக் கொள். எழுந்து கால் ஊன்றி நில். உன்னால் முடியும், உன்னால் மட்டுமே முடியும். நிச்சயமாக சறுக்கலில் இருந்து மீண்டு நீ சாதிக்க போகிறாய்.
Tickets are sold for more than 3,000 stations throughout the following 15 countries: #Thailand, #Sri Lanka, #India, #Vietnam, #Laos, #Cambodia, #Malaysia, #Singapore, #Myanmar, #Philippines, #New Zealand, #Indonesia, #Hong Kong, #Macao, and #China.
உன்னை இழந்தவர்களும் கைவிட்டவர்களும், கடன்கொடுத்து சுரண்டியவர்களும், கதவைச் சாத்திக்கொண்டு போனவர்களும் உன்னை பார்த்து பிரமிக்கப்போகிறார்கள்.
அதுவரை நான் சிறிதும் அயராது உனக்காக உழைக்கப்போகிறேன். நான் உன்னை விட்டு விலகவும் மாட்டேன் கைவிடவும் மாட்டேன் – ஓம் சாய்ராம்










