அன்பு குழந்தையே…

உனக்குள் பல திறமைகள் இருக்கிறது. ஆனால் அது தெரியாமல் உன்னை ஒதுக்குகி றார்கள். இந்த உலகத்தில் எவரும் எதையும் தெரிந்து கொண்டு வரவில்லை.
எத்தனை தடவை தோற்றாலும் வீழ்ந்து விடமா ட்டாய். உன்னை நீ உணர்ந்து கொள். சாதிக்க போகிறாய். அதற்கான காலம் வந்து விட்டது. அதற்கான வழிமுறைகள் காத்திருக்கிறது.
எதற்கும் ஒரு அனுபவம் வேண்டாமா என்று யூகிக்க நினைப்பாய். தேவை இல்லை.
உனது லட்சியத்தை அடைய எத்தனை தடவை கள் தோற்றாலும் எத்தனை தடைகள் வந்தா லும் உன்னை இழிவாக பேசினாலும் தளர்ந்து போகாதே. அனைத்தும் நன்மைக்கே.
கீழே விழுந்தாலும் எழுந்து ஓட தொடங்கு. வெற்றி உனக்காக காத்திருக்கிறது. உனது கனவு விரைவில் பூர்த்தியாகும். உனது எண்ண ங்கள் நிறைவேறும்.
உன்னைத் தேடி அதிர்ஷ்டம் வரும் நேரம் .இது தெரியாமல் கவலையோடு இருக்கிறாய். நம்பி க்கையோடு இரு. நம்பிக்கைதான் வாழ்க்கை. நான் இருக்கிறேன் நிழலாக….












