அகத்தியர் சித்தர் வாழ்க்கை வரலாறு
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.
அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை குறிப்புகள் இதோ-
அகத்தியர்
குரு: சிவபெருமான்
காலம்: 4 யுகம் 48 நாட்கள்
சீடர்கள்: போகர், மச்சமுனி
சமாதி: திருவனந்தபுரம்
18 சித்தர்களில் முதன்மையானவர். சித்தர்களின் தலைவர். தமிழுக்கு பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றவர்.
தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர். போகர், மச்சமுனி இவரின் சீடர்களாவர். திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.










