சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!
வணக்கம்,
நம்மில் பலர், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும, அவை வேலைப் பழு காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ அந்த எண்ணம் நிறைவேறாமல் போய் விடுகிறது.
உங்களின் எண்ணங்களை நிறைவேற்ற சித்தர் பூமி உங்களை அன்போடு வரவேற்கிறது. வலது கையால் கொடுக்கப்படும் உதவி இடது கைக்கே தெரியக்கூடாது என்பார்கள் உண்மைதான். ஆனால், நாங்கள் இந்தச் செய்தியை உங்களோடு பகிர்வதன் முலம், கொடுக்கும் நிலையிலுள்ள அன்பர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவ முன்வரலாம் என்ற உயர்ந்த நோக்கோடு இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும், தமிழ் சகோதரி,
சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர் திருமதி. Thangalledsumy அவர்கள், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் திரு.M.லெட்சுமணன் அவர்களால் ஆதரவற்ற முதியோர் இல்லத்தின் ஒரு வாரத்துக்கான உணவுச் செலவை ஏற்று தர்மம் செய்த அன்பர், வாழ்வில் நோயற்ற வாழ்வுடனும், குறைவற்ற செல்வத்துடனும் என்றென்றும் சீரும் சிறப்புடன் மகிழ்வான வாழ்வு வாழ இறையருள் பரிபூரணமாகட்டும் என்று சித்தர் பூமி வாழ்த்துகிறது.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
அதாவதுஇ பொருளற்றவரது குணங்களை அழிக்கும் பசியை நீக்குக! பொருள் பெற்றவன் தனக்குப் பின்வந்து உதவச் சேமித்து வைக்கும் இடம் அவ்வறமே. என்கிறார் நமது வள்ளுவச் சித்தர்.
ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன,; வீரன், கோழை, நாத்திகன,; ஆத்திகன், கொடுப்பவன், பெறுபவன், குருடன,; செவிடன், நொண்டி, நோக்காளி என பலதரப்பட்ட மக்களை கொண்டுள்ள இவ்வுலகில், நீங்கள் பிறருக்கு கொடுத்து உதவும் நிலைக்கு உயர்ந்தமைக்கு காரணம் வேறு யாருமில்லை, நீங்களே தான்.
நீங்கள் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனே இது. ஓவ்வொரு மனிதனிடத்திலும் இறை குணங்கள் உள்ளது. அவை அன்பு, கருணை, ஈகை, பொறுமை, சாந்தம், சகிப்புத்தன்மை, மன்னித்தல,; விட்டுக் கொடுத்தலாகும். இறை குணங்கள் வெளிப்பட வெளிப்பட நீங்கள் வாழ்வின் உயர்; நிலைக்குச் சென்று இறுதியில் இறைவனோடு கலந்து ஜீவன் முக்தி பெறுவீர்கள். இதுவே மானுடப் பிறப்பின் நோக்கமாகும்.
இறைவன் நமக்கு இப்பிறவியைக் கொடுக்க காரணமே நம் கர்ம வினைகளை கரைக்கத்தான் என்பதை புரிந்து கொண்டு இல்லாதவர்களுக்கு தானம் தர்மம் செய்து வாழ்வின் உயர் நிலைக்குச் சென்று ஜீவன் முக்தி பெற இறைவனை பிராத்திக்கிறோம்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள், சித்தர் அருள் கிடைக்கும்..!
Mobile:+91-7305018180











