அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது,
ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து
பூமிக்கு வருகிறார்கள்.
தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். அவர்களது
வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களைக் கரிசனத்தோடுப் பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும்
செய்கிறார்கள்.
எனவே, பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து
அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும். அன்று
நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம்
என்பதனால், அது நல்லநாளே.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும்
சிறப்புடையது.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை. இது அனைத்து மதத்திற்கும்
பொருந்தும்.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும், ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி
ஏற்படுகிறது.
அமாவாசையன்று, மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை, பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும்
என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று, விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள்.
அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால், சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது.
அதனால், அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி
தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று, ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
சாதாரணமாக, இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும்.
அதுதான் அதற்கு உணவு.
அமாவாசையன்று, சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள்
உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு
வரும்.அப்பொழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல்
செய்கிறார்களா என்று பார்க்கும்.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு, அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அமாவாசையன்றும், தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம்
செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம்
அளிக்கலாம்.
அமாவாசையன்று, பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம்
இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும்
இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசையன்று, தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில்
நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம்.
அமாவாசையன்று:
காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து
தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று
மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி,
கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள், தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.
நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி!
நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று, ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.
இதர தானங்கள் தருவது, அவரவா் வசதியைப் பொறுத்தது.
அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள், ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.
முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.
அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..! தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..!
பாவங்களில் பெரிய பாவம், பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மைப் பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர்.
அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன்,
அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
அமாவாசை வழிபடுவது எப்படி..?
அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும்.
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும்.
தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.
செய்யக் கூடாதவை:
அமாவாசை தினங்களில், மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை
தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக
வாங்கக்கூடாது. தர்ப்பணத்தை, எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க
வேண்டும்.
கிருஷ்ணார்ப்பணம் சுபமஸ்து











