• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்–அவிநாசி

siddharbhoomi by siddharbhoomi
September 7, 2018
in கோயில்கள்
0
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்–அவிநாசி
6
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் – அவிநாசி (திருப்புக்கொளியூர்)

விநாசி என்றால் பெருங்கேடு; அவிநாசி என்றால் பெருங்கேட்டை நீக்க வல்லது என்று

பொருள்.

காசியில் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது, அவிநாசியில் இறைவனை

வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பதஞ்சலி முனிவர் அவிநாசி கங்கையை காசி கங்கை என்று நிரூபிப்பதற்காக தன்

கைதண்டத்தை காசி கிணற்றில் போட்டார். பின்பு அவிநாசி கிணற்றில் அந்த தன்

கைத்தண்டம் கிடைக்க பெற்றார். இதன் மூலம் காசியும் அவிநாசியும் ஒன்றே என

தெரியலாம்.

இத்தலத்தின் தலவிருட்சமான பாதிரிமரம், இத்தலத்தின் பிரம்மோற்ச காலங்களில்

மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில பூக்காது.

பல அற்புதங்கள் நிகழ பெற்றதும் நிகழ்ந்து கொண்டிருப்பதும் இந்த திரு தலத்தில் தான்.

தல புராண வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார்.

ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர்.

மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபனயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர்.

இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார்.

பிறகு 4வது பாடலாக

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே

என்று இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அதனூடே வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை இப்போது பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவஸ்தலம் தான் அவிநாசி என்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூர்.

கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கி.மீ. தொலைவில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும் உள்ளது.

கல்லாலான தீபஸ்(துவஜ)தம்பத்தின் கீழ் தனியே சுந்தரர் உருவம், முதலை பிள்ளையை வெளிப்படுத்தும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது.

இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது.

கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் உள்ளன.

உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

மூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன.

மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன.

ஸ்ரீகாலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது. நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும்.

இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம்.

இறைவி கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள்.

அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர்,

அப்படி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்; விஷ ஜந்துக்களால் வருகிற கனவு, பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.

காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.

பிற அற்புதங்கள்:

உமா தேவியர் பூசித்து வலப்பக்கம் பெறுதல்.
பேய் வடிவம் நீத்து தெய்வம் ஆதல்.
மீன் வாயில் சிவலிங்கம்.
தோற்று ஓடிய மந்திரவாதி.
கங்கையில் இழந்த காசு அவிநாசியில் பெறுதல்.
ப்ரம்மா வழிபாடு செய்த ஸ்தலம்.
புத்திர பேரு பெற்றது.
நாககன்னி நற்பேறு அடைதல்.
முக்தி பெறுதல்.

தீர்த்தங்கள்:

1. காசி கங்கை தீர்த்தம்
2. தெப்ப குளம்
3. நாககன்னி தீர்த்தம்
4. திருநள்ளாறு
5. தாமரை குளம்
6. ஐராவத துறை

அவிநாசியப்பரை வழிபட்டால் அழியாப்புகழ் கிடைக்கும்.

Previous Post

பதினேழாம் நாள் போர் முடிந்த இரவு-இறுதிச்சுற்று

Next Post

மடவலத்துக் கோயில்-நாட்டேரி,திருவண்ணாமலை மாவட்டம்.

Next Post
மடவலத்துக் கோயில்-நாட்டேரி,திருவண்ணாமலை மாவட்டம்.

மடவலத்துக் கோயில்-நாட்டேரி,திருவண்ணாமலை மாவட்டம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »