திருவள்ளூர் மாவட்டம் (புட்லூர் அருகில்) எண் 76.தண்ணீர் குளம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ ஆபத்சஹாயீஸ்வரர் சன்னதி.
ஒரு சமயம் ராவணன் வடதிசையை ஆண்டு வந்த குபேரன் மீது போர் தொடுத்து அவனுடைய நவநிதிகளை கவர்ந்து சென்றான், குபேரன் சிவபெருமானை வேண்ட பகவான் பூலோகம் சென்று தமக்கு ஆலயம் எழுப்பி பூஜிக்கு மாறு கூறினார்,
அதன் படி பூமிக்கு வந்த குபேரன் இந்த ஊரில் சிவாலயம் எழுப்பி 9 நாள் விரதமிருந்து, 9வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, 9வகை நைவேத்யம் வைத்து, 9வகை மலர்களால் அர்ச்சனை செய்து, 9 தம்பதியருக்கு அன்னமளித்து,
சிவ வழிபாடு செய்து இழந்த நவநிதிகளைப் பெற்று மீண்டும் வட திசைக்கு அதிபரானார். இந்த இறைவனை வணங்குபவர்களுக்கு இழந்த பதவியும் செல்வமும் மீண்டும் வந்தடையும்,
இத்தனை சிறப்பு வாழ்ந்த குபேரன் கட்டிய ஆலயம் மண்ணில் புதைந்து போனது
இங்குள்ள குளத்தை தூர் வாரிய போது சுவாமி மற்றும் நந்தியெம்பெருமான் திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தற்காலிக குடிலில் பிரதிட்டை செய்து நித்திய பூஜைகள் நடந்து வரும்
நிலையில் புதிதாக ஆலயம் அமைக்க வேண்டுமென்று இப்பகுதி அடியார்கள் சிலர் காஞ்சி ஸ்ரீ மடத்தை அணுகினார்கள்.
உடனடியாக ஸ்ரீபால பெரியவா அவர்கள் சில அடியார்களைக் கொண்டு புதிதாக ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்தார்கள், தற்சமயம் ஆலயப் பணிகள் நிறைவு பெறுகிறது .
அடுத்த மாதம் சிதம்பரம் தீட்ஷிதர்களைக் கொண்டு கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,











