இன்ப நிலை நீங்கி துன்பச் சுமையை சுமக்கிறாயே! அனுபவிக்க இன்னும் என்ன இருக்கிறது என்ற அளவில் துன்பத்தின் எல்லை வரைச் சென்றுவிட்டு, வெறுமையாய் நின்று என் முகத்தை உற்றுப்பார்க்கும் உன்னை நான் கண்டுகொள்ளவில்லைஎன்று நினைக்காதே! உன்னை கரிசனத்தோடுதான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். உனது இழப்புகளை திரும்பிப்பார்த்தால் எனது மனம் கூட நடுங்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு முறையும் உன்னை தைரியப்படுத்திக் கொண்டு வருகிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள். இன்னும் நீ கடந்து போக வேண்டிய தூரம் கொஞ்சம் இருக்கிறது . அதுவரை பொறுமையோடு எல்லையற்ற பொறுமையோடு, தீவிர நம்பிக்கையோடு உனது சுமையின் கணம் தெரியாமல் இருப்பதற்காக எனது நாமத்தை உச்சரித்தபடி இருக்க வேண்டும். எனது சத்தத்தை உணர்வுள்ள நீ கவனித்துக் கேட்டு அதன்படி நடந்துகொள். அப்போது உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். எதற்காகவும் கவலைபடாதே நான் கூடவே இருக்கிறேன்.. எதுவந்தாலும் நான் உனக்கு அருள் செய்யக் காத்திருக்கிறேன்..!
The Mother









