கேட்டதைக் கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் :-
“கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்” இதுதான் நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தின் விதி.; மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து வளங்களும் இந்தப் பிரபஞ்சத்தில் குவிந்து கிடக்கிறது.
பிறகு ஏன் ஒருவன் செல்வச் செழிப்பிலும், ஒருவன் வறுமையிலும் வாழ்கிறான், என்று எண்ணுகிறீர்கள்தானே? காரணம் சொல்கிறேன்…
வறுமையில் வாழ்கிறவன் இந்தப் பிரபஞ்சக் கதவை தட்டுவதும்; இல்லை, கேட்பதும் இல்லை. அப்படியே தட்டிக் கேட்டாலும் அவன் கோரிக்கை என்னவாக இருக்கும் தெரியுமா? ‘கடவுளே அடுத்த மாதம் எம் பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன். குறைந்த பட்சம் இரண்டு லட்சமாவது தேவைப்படும்,
யாரிடம் போய் கடன் கேட்பது,’ என்று கடன் வாங்குவது பற்றியே அவனது மனம் எண்ணிக் கொண்டிருக்கும். அவனது எண்ண அலைகள் பிரபஞ்ச கதவை இடைவிடாமல் தட்டுகிறது. இறுதியில், கடன் வாங்கும் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. ஆனால்,
பணக்காரன் எதைப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருப்பான் தெரியுமா? அவன் செய்து வரும் தொழிலை விரிவுபடுத்தி மேலும் மேலும் பணம் சம்பாதிப்பது பற்றியே எண்ணிக் கொண்டிருப்பான். இறுதியில், அவனது ; கோரிக்கையும் நிறைவேற்றப்படுகிறது. இதைத்தான் எண்ணம் போல் வாழ்வு என்று மெய்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தை யார் தெரியுமா?.. யார் என்று யோசிக்கிறீங்களா… யோசிக்க வேண்டாம். நானே சொல்லி விடுகிறேன். நாம் வாழும் இந்த பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தை. அப்போ நாம் யார்?
இந்தப் பூமியோட குழந்தைகள். இப்ப சொல்லுங்க இந்தப் பிரபஞ்சத்துக்கும் நமக்கும் உள்ள உறவு முறை என்னவென்று, நான் சொல்லத் தேவையில்லை நீங்களே புரிந்திருப்பீர்கள்.
உங்கள் அப்பாவிடம் கேட்டு கிடைக்காத ஒரு பொருளை, உங்கள் தாத்தாவிடம் கேட்டுப்பாருங்கள்; நிச்சயமாக நீங்கள் விரும்பிய பொருள் கிடைக்கும். கண்டிப்பாக இந்த அனுபவம் அனைவருடைய வாழ்விலும் நடந்திருக்கும்.
எப்படி உங்கள் தாத்தாவிடம் கேட்ட பொருள் கிடைக்கும் வரை அழுது அடம்பித்து நம்பிக்கையோடு கேட்டுப் பெறுகிறீர்களோ, அதுபோலவே இந்த பிரபஞ்சத்திடம் நம் தேவைகளைக் கேட்டுப் பெறலாம்.
தொடர் சிந்தனை, எண்ணம், தியானம் போன்றவைகள் மூலம் நாம் வேண்டியதை இந்த பிரபஞ்சத்திடம் கேட்டு பெறலாம். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இந்த பிரபஞ்சம் காத்துக்கொண்டிருக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தில் பூமியைப் போன்று நாம் அனைவருமே தனித்தனி கிரகங்;கள்தான். அதனால்தான,; அண்டத்தில் உள்ளதே இந்தப் பிண்டத்திலும் உள்ளது என்கிறார்கள் ஆன்மீகப் பெருமக்கள்;.
எனவே, முழு நம்பிக்கையோடும், மன உறுதியோடும், துளியும் சந்தேகமின்றி இந்தப் பிரபஞ்சத்திடம் மனமுருக வேண்டுங்கள,; அவை நிச்சயம் நிறைவேற்றப்படும். 100 பேர் கலந்து கொள்ளும் ஓட்டப்பந்தயத்தில் நாமும் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில் நம்மால் வெற்றி பெற முடியும் என்று நம்ப வேண்டும்.
பின்னர் மன உறுதியுடன்; தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எனவே, நம் எண்ணம் அனைத்தும் வெற்றிக் கோப்பை பற்றியே சதாக்காலமும் இருக்க வேண்டும். இப்பொழுது வெற்றி கோப்பை உங்கள் கையில்.











