• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

இஸ்திரிப் பெட்டி – மாறிப் போனவைகள்.

siddharbhoomi by siddharbhoomi
April 4, 2020
in பொது
0
இஸ்திரிப் பெட்டி – மாறிப் போனவைகள்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

இஸ்திரிப் பெட்டி – மாறிப் போனவைகள்.

இஸ்திரிப் பெட்டி என்கிற சொல் கூட இப்போது அந்தப் பெட்டியோடு காணாமல் போய் விட்டது இந்த நாட்களில் .இஸ்திரி அல்லது அயர்ன் பண்ண நிலைமைகள் தலைகீழாய் மாறிவிட்டன.

இந்தப் தீவின் படத்திலிருக்கிற இஸ்த்ரிப் பெட்டிகள் எங்கள் பள்ளி நாட்களில் உயிரோடு இருந்தன .பெரும் பாலும் எங்கள் தெருவிலிருந்த தையல் காரர் வீட்டில் இந்த ஜாதியில் ஒரு பெட்டி இருந்தது . எங்களால் ஒரு கையால் தூக்க முடியாத அளவிற்கு .தடுமாற வைக்கும் .

அப்பொழுதெல்லாம் துணிகளை அயர்ன் பண்ண வெவ் வேறு உத்திகளை நாங்கள் கையாளுவோமாக்கும். துவைத்து பதமாய் காய வைக்கப்பட்ட துணிகளை, சர்ட்டோ பேண்ட்டோ உதறி கட்டிலின் மேல நீட்டி வைத்து கையால் அழுத்தமாய் நீவி நீவி விட்டு

அவைகளை கட்டிலின் படுக்கையின் கீழ் ஒரு நியூஸ்பேப்பரை விரித்து துணிகளை வைத்து மறுபடி பேப்பரால் மூடி விடுவோம் .அடுத்தநாள் எடுத்துப் பார்த்தால் சுருக்கமெல்லாம் நீங்கினதைப்போல இருக்கும் .

ஆனால் அண்ணா என்றுதான் நினைக்கிறேன் ,தன மெலிசான சட்டைகளின் சுருக்கம் போக்க இப்படி ஒரு உத்தியை கையாளுவார். சற்றே உயர்த்தி வைத்த பெரிய அகலமான மரப் பெட்டியின் மேல் மடிக்கப்பட்ட பெட்ஷீட் விரிப்பார்.

(அந்தப் பெட்டியின் சொல்லில் அடங்காத பயன்பாடுகளைப் பற்றி ஒரு கவிதை எழுதலாம் .அண்ணாவின் அநேக ரகசியங்களை , எழுதுகிற கதைகளிலிருந்து கடிதங்கள் வரை தன் பெரிய வாயைத் திறந்து உள்வாங்கியிருந்தது ,நாங்கள் எதிர்பார்த்திரா ஆச்சர்யங்களை உள் ஒளித்து வைத்திருக்கும் )

அகல அடிப்பாகமுள்ள ஒரு பித்தளை சொம்பு வினோத வடிவத்தில் இருந்தது.அதில் கொதிக்ககொதிக்க வெந்நீர் ஊற்றி அதன் வாய்ப்பகுதியை சிறு துண்டால் சுற்றி அதை கையால் லாவகமாகப் பிடித்துக் கொண்டு சூடான அதன் அடிப்பகுதி கொண்டு துணியின் சுருக்கங்களை தேய்த்து நீக்குவார்.

இந்த மகா வித்தையை நானும் என் தங்கையும் பார்த்து பிரமிப்போம், சூடாக இருக்கிற சொம்பையும் அதனுள் இருக்கிற கொதி நீர் வெளியில் சிந்தாமலும் காரியத்தை முடிப்பதுதான் சாகசம்.

இந்த இஸ்திரிப்பெட்டி கொஞ்சம் குறைய எங்கள் உதகை மக்களின் பனிக்காலங்களில் தோழனாய் இருக்கும் சிகிரி அடுப்பின் சகோதரி தான். அதை போலவே பெட்டியின் அடிவயிற்றுப் பகுதியில் காற்று போய்வர மீன் செதில்கள் போல குட்டி ஜன்னல்கள் இருக்கும். பெட்டியின் உட்புறம் இந்த ஜன்னல்களைத் தொட்ட மாதிரி இருக்கும் இஸ்திரி பெட்டியின் வடிவிலேயே ஒரு ஸ்ட்ரைனர் இருக்கும்.

அதன் ஓட்டைகள் வழியே எரிந்த கரியின் திருநீர் போலிருக்கிற பறக்கிற வெண் சாம்பல் படர்ந்து தங்கி இருக்கும் இந்தப் பேட்டியளித்த திறக்க முதலை வாயைப் போல இரும்புப் பற்களுடன்.

மூடி வாயைத் திறந்து 135 டிகிரி கோணத்தில் பின் சாய்ந்து கொண்டாலும் பெட்டி கவிழாது, பெட்டியின் சூடு .தெரியாமலிருக்க கனத்த மர உருளைக் கைப்பிடி.சூடாகும் பெட்டி ஓய்வெடுக்க, வைக்க கனத்த இரும்பு வளையம் காத்திருக்கும்.

இந்த இஸ்திரி பெட்டிகளை பற்ற வைப்பது லேசுப்பட்ட காரியமில்லை , முன்பு சொன்ன தையல் காரரின் மகன் தான் இதை பற்ற வைப்பான் . அதை ஒரு சம்பிரதாயம் போலச் செய்வான் . புகை வராத குச்சிக் கரித் துண்டுகளை கண்டறிகிற ரகசியத்தை அவனும் அவன் அப்பாவும் சொன்னதே இல்லை,

விரல் நுனிகளின் அனுபவத் தொடல்களில் இந்த வித்தையைச் செய்தாலும் , அதிலிருந்தவைகளில் சிலது கருப்பு ஆடுகளைப் போல பற்றவைத்து சில பல நிமிடம் கழித்து வெண் புகையை கசிய விட்டு மூக்கை எரிக்கும் ஆயினும் அடுத்த நொடிகளில் மின்னல் வேகத்தில் அவற்றை லாவகமாக பிடித்து வெளியில் போடுவான்,

பார்த்திருக்கும் நாங்கள் ஜுவாலையினூடாக புகுந்து எழுந்த விரல்கள் என்னவானதோ என்று பதறி உஷ்ஷ்ஷ்ஷிட ..புன்னகைத்து ஏதுமாகாத விரல்களை எங்களிடம் மாயப் புன்னகையுடன் காட்டுவான் .

அடுப்புக் கரித் துண்டுகளை அசத்தலாய் சிறு பறவைக் கூடு போல அந்த இஸ்திரி பெட்டிக்குள்
அமைத்து உள்ளே கெரோசின் நனைத்த துணிச் சுருளை கூடு கலையாதபடி கரித்துண்டுகளின் இடுக்குகளில் செருகி தன்தலையை சரித்து சாய்த்து சரிபார்த்து ‘பெப்பரப்பே ‘ என்று பார்த்திருக்கும் எங்களிடம் மீண்டும் ஒரு புன்னகையை தள்ளிவிட்டு பற்ற வைப்பான்.

மஞ்சளும் நீலமுமாய் எரியத் துவங்குகிற ஜுவாலைகளின் நாக்குகளில் கறுப்புக் கரி சிவந்து ஒளிரும் வரை அதையே பார்த்திருப்பான் ,நகரும், ஆடும் திடீர்ர்ர் வெளிச்சத்தில் வித்தியாசமாய்த் தெரியும் அவன் முகம்.

சற்று நேரத்தில் எல்லா கரித் துண்டுகளும் சிவப்பானதற்குப் பிறகு அந்தப் பெட்டி மூடப்படும். அதன் முதலைப் பற்கள் அதற்குரிய இடத்தில அமர்ந்தவுடன் மூடி திறக்காமல் இருக்க, கொக்கியில் பூட்டப்படும்.

கவனமாய் சூடான பெட்டியைத் தூக்கி தூபம் காட்டுவது போல ஆட்ட ,முதல் சாம்பல்கள் கொஞ்சம் வெளியே பறக்கும் .இஸ்திரி போட தயாரான பெட்டியுடன் தன் அப்பாவைப் பார்க்க அவரும் புன்சிரிப்பாய் தலை அசைக்க வெளியிலிருந்து பெட்டி தையல் காரரின் மேஜைக்குப் போகும்

மின்வசதி தாராளமாக வந்ததும் இந்தப் பெட்டிகள் எங்கோ ஒளிந்து கொண்டன லாண்டரிகளில் இருந்த பெட்டிகள் மறைந்து போய் .நீண்ட வயர் வாலுடன் கனமான உடலுடன் .இஸ்திரி போடும் மேஜைக்கு பெட்டிகள் வந்தன. வீடுகளிலும் சின்ன அயர்ன் பாக்ஸ்கள் தலை காட்டின.

இவைகளால் அயர்ன் செய்தால் சரியாக நிற்காது, . புடவைகளுக்கு இதிலே முடியாது, தண்ணீர் தெளித்து அயர்ன் பண்ணும் போது ஷாக் அடித்து விடும் என்றெல்லாம் பலரும் பேசினாலும் பயனில்லாமல் அந்த பழைய இஸ்திரி பெட்டிகள் பரணிலும் , பலரின் நினைவுகளில் மட்டும் தங்கி விட்டன .

இன்றைய நாட்களில் அயர்ன் பாக்ஸ் எத்தனையோ வடிவமெடுத்து விட்டது .பெரியவர்கள் மட்டுமே போடமுடியமென இருந்த கனத்த எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ் தன் மோஸ்தரை இழந்து போனது.

சிறியவரும் போட வசதியான கனம் குறைவான துணிகளில் ஒட்டாத ‘நான்ஸ்டிக்கிங் ‘வகை வந்து விட்டது பயணங்களில் எடுத்துக் போகிற கையடக்க , நம் பையடக்க வகையறாக்கள் வந்து விட்டன .

ஜீன்ஸ் அலை வந்து எல்லோரையும் மூட நம் பிள்ளைகள் துவைப்பதும் அயர்ன் செய்வதும் அருகிப் போனது . பற்றாக் குறைக்கு சுருக்கம் வராத ஆடைகள் , சுருக்கமே விழாத துணிகள் வந்து விட எல்லாம் மாறிப்போயின .அதைவிட இன்றையத் தலை முறையினர் அயர்ன் செய்வதென்பது ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே என்றான பின் என்னதான் செய்ய முடியும் ?

அந்த நாட்களில் நாங்கள் அயர்ன் பண்ணுவதற்கான ஆயத்த அனுபவங்களை, சிரமங்களை சொல்ல அவர்கள் புருவமுயர்த்தி புன் சிரிப்புடன் புரிந்தும் புரியாமலும் கடந்து போகக் கூடும்.

Previous Post

மரியாதைக்குரிய பியூலா ராஜேஷ் வாழ்த்துக்கள்.

Next Post

ஆணும் பெண்ணும் சமம் அல்ல!

Next Post
ஆணும் பெண்ணும் சமம் அல்ல!

ஆணும் பெண்ணும் சமம் அல்ல!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »