தலையை மொட்டை அடிப்பது ஏன் தெரியுமா?
இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் இருக்கின்றமை யாவரும் அறிந்ததே.
அந்தவகையில் தலையை மொட்டையடித்து கொள்வது என்பது பல இந்துக்கள்
பின்பற்றி வரும் ஒரு முக்கியமான சடங்காகும்.
புனித ஸ்தலங்களில் தலையை மொட்டையடித்து, முடியை கடவுளுக்கு காணிக்கையாக கொடுப்பது கட்டாயமான ஒரு பழக்கமாக உள்ளது.
தலைமுடி என்பது பெருமையான ஒரு விஷயமாகும். அதனை கடவுளுக்கு
காணிக்கையாக அளிப்பதன் மூலம், நம் செருக்கும், ஆணவமும் நம்மை விட்டு நீங்கும்
என நம்பப்படுகிறது.
தாங்கள் வேண்டியது நடைபெற்றால், கடவுளுக்கு நேத்திக்கடன் செலுத்துவதற்காகவும்
சிலர் தங்கள் தலையை மொட்டையடித்து கொள்வதுண்டு.
சரி, தலையை மொட்டையடித்து கொள்வதற்கான காரணம் என்ன? ஏன் அதனை
இந்துக்கள் பின்பற்றுகின்றனர்?
மறுபிறப்பு :
பிறப்பு மற்றும் மறுபிறவி மீது இந்துக்களுக்கு நம்பிக்கை உண்டு. கடந்த ஜென்மத்தில்
இருந்த பந்தங்களின் தொடர்பை துண்டிப்பதற்காகவே குழந்தைகளுக்கு முதல்
மொட்டை போடப்படுகிறது.
அப்படி தலையை மொட்டை அடிப்பதால் அக்குழந்தை இந்த பிறப்பில் புதிய
வாழ்க்கையை தொடங்குகிறது. அதனால் இது ஒரு முக்கியமான சடங்காக
பார்க்கப்படுகிறது.
முழுமையாக சரணாகதி அடைதல் :
தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தை குறிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதனால் தலைமுடியை மொட்டை அடித்து கொள்வதன் மூலம், நாம் கடவுளிடம்
சரணாகதி அடைகிறோம்.
தலைமுடியை மொட்டை அடிப்பதன் மூலம் நம் தலைக்கனத்தை இழந்து, கடவுளுக்கு
அருகில் வருகிறோம். இது பணிவை எடுத்துக்காட்டும் ஒரு செயலாகும். மேலும் எந்த
ஒரு ஆணவமும், எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல் கடவுளை உணர ஒரு
சின்ன முயற்சியாகும்.
முக்கிய சடங்கு :
அதனால் இந்து மதத்தில் மொட்டை அடிப்பது என்பது மிகவும் முக்கியமான
சடங்காகும். இது பணிவை எடுத்துக்காட்டும் செயல். உங்களை ஒட்டு மொத்தமாக
கடவுளுக்கு அர்பபணிக்கும் ஒரு முயற்சி.
உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து
கொண்டு பின்பற்றுங்கள்.
கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன
சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை
நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
கடல் நீர் சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின்
அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே
இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம்
இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை
எவ்வளவு ஊறியிருக்கும்.
வெளியேறும் வழி உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே
வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான்
வெளியேற முடியும்.
ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
மொட்டை போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே
தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
நேர்த்திக்கடன்










