1.என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிடடதுண்டு, ஆனால் நான் ஒருபோது முயற்சியை கைவிட்டதில்லை.
2.எடுத்த முயற்சியை கைவிடும்போது நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதை உணராதவர்கள் தோல்வியடைகிறார்கள் .
3.உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால் வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
4.உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்ட விரும்பினால் விட முயற்சியை உங்கள் நண்பனாக்குங்கள்.
5.மது அருந்தவேண்டும் என்று விரும்புகிறவன் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் இன்ஜினில் மண்ணை வைப்பதுபோல தன மூளையை பாழ்படுத்துகிறான்.
6.சில சமயம் முட்டாக காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.
7.வியாபாரத்தில் துணிவுதான் முதலாவது.பிறகு இரண்டாவது, மூன்றாவது எல்லாம் அதுவேதான்.
8.வெற்றி என்பது என்ன.ஒரு சதவிகிதம் சிந்தனையும், தொன்னூற்றுஒன்பது சதவிகிதம் உழைப்பும் சேர்ந்ததுதான்.
9.பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல . அது உயர்ந்த பண்பின் அறிகுறி.
10.கவலைக்கு நிவாரணமாக விஸ்கியை விட வியர்வையை சிந்தி உழைப்பதே மேல்.
11.வெற்றி பெறுவதற்கு மிகவும் சிறந்த வழி , எப்போதும் மற்றுமொரு முறை முயற்சிப்பதே.
12.நான் தோல்வி அடையவில்லை . வெற்றி அடையமுடியாத பத்தாயிரம் வழிகளை கண்டு பிடித்திருக்கிறேன்.
13.தோல்விகள் பாடங்கள் மட்டுமே அல்ல. அவை கற்றுத்தரும் படிப்பினை விட வேறு எதனாலும் கற்றுத்தர முடியாது.
14.வியாபாரம் என்பது அங்கிகரிக்கப்பட்ட ஒரு ஏமாற்று வேலை.
15.நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் மதிப்பு இருக்கிறதே தவிர நீங்கள் எதை வைத்துள்ளீர்கள் என்பதில் இல்லை.
16.நான் ஒருபோது கொல்லுவதற்கான ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை என்பதில் உண்மையில் எனக்கு பெருமை.
17.மனிதரின் சங்கடங்களுக்கெல்லாம் செயல்புரியாமல் சோம்பியிருப்பதுதான் முக்கிய காரணம்.
18.என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் உழைப்பினால் வந்ததே தவிர எதிர்பாராத விபத்துகளினால் வந்ததல்ல.
19.ஒரு செயலை சிறப்பாக செய்வதற்கு சிறந்த வழி அதனை தேடிக்கண்டறிவதே.
20.மிக பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் இல்லை. விடா முயற்சியினால்.










