• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தாமிரபரணி மகா புஷ்கரம்

siddharbhoomi by siddharbhoomi
October 3, 2018
in ஆன்மிகம்
0
தாமிரபரணி மகா புஷ்கரம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தாமிரபரணி மகா புஷ்கரம்:-

நேரம் என்று? எப்போது? எங்கே? எனும் விவரங்கள்…
என் மேன்மைமிகு நண்பர்களே! தனிப்பட்ட முறையில் அழைக்க இயலாது. உங்கள் தாமிரபரணியின் சகல ஐஸ்வர்யங்களும் பெற ஓடோடி வாருங்கள்.

12 ராசிகள் = 12 புண்ணிய நதிகள்…
ஒவ்வொரு ஆண்டுக்கும் குரு அந்தக் காலகட்டத்தில் எந்தெந்த ராசியில் உள்ளார் என்பதை பொறுத்து கணக்கிடப் படுகிறது…

அந்த ராசியில் குரு சஞ்சரிக்கும் கால நேரத்தில் புஷ்கரம் நடைபெறுகிறது.

கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்வது கும்பாபிஷேகம் என்று பெயர்.

நதிகளுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்வது புஷ்கரம் என்று பெயர்.

புண்ணிய நதியின் மகத்துவத்தை உணர்ந்த நம் இறைவன் நம் நதிகளை தேடி தானே நதிக்கரைகளுக்கு விரும்பி வந்ததை நம் மன்னர்கள் திருக்கோவில்களாக நமக்காக வடிவாக தந்து உள்ளனர்.

2006 ஆண்டு நமது தாமிரபரணி அமைப்பு ஏற்பட்ட பிறகே சுத்தமல்லி ராமசுப்ரமணிய ராமாயணீயர் அவர்களால் புஷ்கரத்தின் மகா வல்லமையை நான் உணர்ந்து தமிழகத்தில் பல பல நூற்றாண்டுகளாக நின்று போன தாமிரபரணி புஷ்கர விழாவை முதல் முதலாக தொடங்கினேன்.

குரு பகவான் தாமிரபரணி தாயின் விருச்சிக ராசிக்கு 04.10.2018 வியாழக்கிழமை பெயர்ச்சி ஆகிறார்.

12 ஆண்டுகள் நிறைவாகி இப்போது நம் தாமிரபரணி மாதாவுக்கு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக வரும் மகா புஷ்கரமாக மீண்டும் நடத்த உள்ளோம்.

குரு பகவானின் சக்தியையும், தாமிரபரணி தாயின் மகா புஷ்கர யாக சக்தியையும் பெற வடக்கு நோக்கி பாயும் உத்திரவாஹிணிகளான பாண தீர்த்தம், பாபநாசம், திருப்புடை மருதூர், சிந்துபூந்துறை தாமிரபரணி புஷ்கரம் பூஜையை உங்கள் தாமிரபரணி அமைப்பு நடத்துகிறது.

இது தமிழகத்தில் மகத்தான நிம்மதிக்கு வழி வகுக்கும் புஷ்கரம் யாகமாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

திருக்கோவில்களை மாத்திரம் சிந்திக்கும் நாம் புண்ணிய நதிகளின் பெருமைகளை அறவே சிந்திக்காமல் இப்போதும் இருப்பது மிகவும் வெட்கக்கேடானதுதானே!!.

குரு பகவான் மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது “கங்கை நதியிலும்”

குரு பகவான் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது “நர்மதை நதியிலும்”

குரு பகவான் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது “சரஸ்வதி நதியிலும்”

குரு பகவான் கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது “யமுனை நதியிலும்”

குரு பகவான் சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது “கோதாவரி நதியிலும்”

குரு பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது “கிருஷ்ணா நதியிலும்”

குரு பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது “காவிரி நதியிலும்”

குரு பகவான் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது தற்போது “தாமிரபரணி நதியிலும்”

குரு பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது ” சிந்து நதியிலும்”

குரு பகவான் மகரம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது ” துங்கபத்ரா நதியிலும்”

குரு பகவான் கும்பம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது ” பிரம்மபுத்ரா நதியிலும்”

குரு பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது ” பிரநீதா நதியிலும்”

பெயர்ச்சி ஆகிறார்.

அன்று பிரம்மாவின் கமண்டலமான தீர்த்த ராஜனின் முழு சக்தியும் குரு பகவானுக்கு கிடைக்கும்.
குரு பெயர்ச்சி தாமிரபரணி தாயின் விருச்சிகம் ராசிக்கு வருகை தருவதால் குரு பெயர்ச்சி அன்று தாமிரபரணி அம்மாவின் சர்வ வல்லமையை நாம் பெற வேண்டிய புண்ணிய நாள் 04.10.2018 வியாழக்கிழமை மற்றும் 05.10.2018 வெள்ளிக்கிழமை.

பாபநாசம்:

ஸ்ரீ ரஜீனீஸ்வர சுவாமி அவர்களோடு பூஜையில் கலந்து கொள்வோம். 04.10.2018 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு வர வேண்டுகிறேன்.இரவு 11.30 வரை நடைபெறும்.கோ பூஜை, அஸ்வ பூஜை,கஜ பூஜை நடைபெறும்.

திருப்புடைமருதூர்:

அவளூர் சித்தர் ஸ்ரீ சிவராஜ் சுவாமி
அவர்களோடு நாமும் பூஜையில் கலந்து கொள்வோம்.
04.10.2018 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு வர வேண்டுகிறேன்.இரவு 11.30 வரை நடைபெறும்.

சிந்துபூந்துறை:

தண்ணீர் சித்தர் ஸ்ரீ தங்க முருகன் சுவாமி அவர்களின் மழை வேண்டுதலோடு நாமும் பூஜையில் கலந்து கொள்வோம்.
குட்டத்துறை பாலசுப்ரமணியர் திருக்கோவில் 04.10.2018 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு வர வேண்டுகிறேன்.
விநாயகரை தொடர்ந்து வேல் விருத்தம்,மயில் விருத்தம் நடைபெறும்.
அதன் பிறகு தாமிரபரணி வேத மந்திரங்கள் தொடங்கும்.
இரவு 11.30 வரை நடைபெறும்.
தினமலர் அலுவலக்கத்திற்கு பின் புறம் குட்டத்துறை முருகர் கோவில் உள்ளது.

பாணதீத்தம்:

சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தாதிபதி முருகதாஸ் ஐயா அவர்களோடு நாமும் பூஜையில் கலந்து கொள்வோம்.
சொரிமுத்து ஐயனார் திருக்கோவிலுக்கு 05.10.2018 வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு வர வேண்டுகிறேன். மதியம் 1.30 வரை நடைபெறும்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில்:

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் முற்பிறவி மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட தாமிரபரணி தேவியின் உற்சவமூர்த்தி உள்ளது. தற்கால வரலாற்றில் நம் தாமிரபரணி அமைப்பு மூடிக் கிடந்த தீர்த்தவாரி மண்டபத்தை செப்பனிட்டு தாமிரபரணி தாயை தாரை தப்பட்டை முழங்க யானையோடு அங்கு கொண்டு போய் ஆராட்டு விழா நடத்தினோம்.

அதே போல் 04.10.2018 வியாழக்கிழமை தாமிரபரணி உற்சவ மூர்த்தி தாய்க்கு திருக்கோவிலிலேயே மாலை 07.30 க்கு கோலாகலமாக அபிஷேகம் நடைபெறும்.

அன்று முதல் 48 நாட்கள் தாமிரபரணி தாய்க்கு யார் வேண்டுமானாலும் மண்டல பூஜை செய்து நீராடி போற்றி ஆனந்தமாக வழிபடலாம்.

அனைவரும் வருக. எல்லா ஐஸ்வர்யங்களும் வளமாக பெறுக.

என்னை தாலாட்டிய நம் தாமிரபரணி தாய் உங்களையும் அன்போடு தாலாட்ட பாதம் தொட்டு அழைக்கிறேன்.

ஓம் தாமிரபரணி…ஜெய் தாமிரபரணி.

Previous Post

அருகம்புல்லும் பிள்ளையாரும்!

Next Post

தோல்வியே இல்லாத பயணம்

Next Post
தோல்வியே இல்லாத பயணம்

தோல்வியே இல்லாத பயணம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »