திருப்பதிசாரம் ”திருவாழ்மார்பன்” திருக்கோயில்
நாகர்கோவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கும் “திருப்பதிசாரம்”ன்ற ஊரில்
அருள்பாலிக்கும் அருள்மிகு ”திருவாழ்மார்பன்” திருக்கோயில்.
இது ”திருவெண்பரிசாரம்”ன்னும் அழைக்கப்படுது.
இக்கோவில் 3000 வருடங்கள் பழமை வாய்ந்தது ன்னும் ராமாயண கால பழமை
வாய்ந்ததுன்னும் சொல்றாங்க. இது 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒண்ணாம்.
இந்தகோவிலில் ராஜகோபுரம் இல்லை. நுழைவாயிலின் மேலே ஸ்ரீதேவி- பூதேவி சமேத
நாராயணன், ராமன், லட்சுமணன், கருடாழ்வார் மற்றும் நம்மாழ்வார் ஆகியோரது சிற்ப
உருவங்கள் இருக்கு. பார்க்க அழகாவும் இருக்கு.
கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும் கொடி மரம். அடுத்து ஆனந்த மண்டபம். இங்கு, ராமன்
மற்றும் கருடாழ்வார் சந்நிதிகள் எதிரெதிரே இருக்கு.
ஸ்ரீராம பட்டாபிஷேகம் முடிந்து இலங்கை திரும்பும் வழியில் இங்கு வந்த விபீஷணன், சோமலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, திருவாழ்மார்பனை வழிபட்டாராம் .
அத்துடன் ராம பட்டாபிஷேகத்தை மீண்டும் காணும் பாக்கியத்தைத் தருமாறும் பெருமாளிடம் வேண்டினாராம்.
அதை ஏற்று விபீஷணருக்கு, ராமனாக நின்ற கோலத்தில் காட்சி தந்தாராம் திருவாழ்மார்பன்! எனவே, இங்கு ராமரின் எதிரில் அனுமனுக்குப் பதிலாக கருடாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார்.
தவிர, விஷ்வக்சேனர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன .அவைகளை போட்டோ எடுக்க அனுமதியில்லை.
திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளிலும், செல்வச்செழிப்புடனும் இருக்க இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்றாங்க.
இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது.
இங்குள்ள மற்றொரு சிறப்பம்சம் திருவள்ளுவர் சந்நிதி. உள்ளே மனைவி வாசுகி மற்றும் சீடர்கள் புடை சூழக் காட்சித் தருகிறார் திருவள்ளுவர். திருக்குறள் இயற்ற, அப்பனாக இருந்து வள்ளுவருக்கு அருளியவர் ஆதலால் திருவாழ்மார்பனுக்கு, ‘திருக்குறளப்பன்‘ என்ற பெயரும் உண்டு.
திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்ய வேண்டிக் கொண்டவர்கள் , திருப்பதிக்கு போக முடியாத சூழலில் அதை இத்தல பெருமாளுக்கு செய்யலாமாம். அதற்குதான் இதற்கு ”திருப்பதியினுடைய சாரம் என்பதால் ”திருப்பதிசாரம்”ன்னு பேர் வந்துச்சாம்.
இரண்யகசிபுவை கொன்ற நரசிம்மரின் உக்கிரம் தணிந்த பாடில்லை. தன் நாயகரை நெருங்க இயலாமல் தவித்த மகாலட்சுமி, தவத்தில் ஆழ்ந்தாள். அப்போதும் நரசிம்மரின் உக்கிரம் குறைய வில்லை. தேவர்களும் செய்வதறியாது திகைத்தனர்.
அப்போது சிறுவன் பிரகலாதன் பயமின்றி பக்தி பரவசத்துடன் பெருமாளின் கீர்த்தனைகளைப் பாட… சினம் தணிந்தார் நரசிம்மர். பிறகு, திருமகள் தவம் புரியும் இந்தத் தலம் வந்து, ‘திரு‘வாகிய அவளை தன் மார்பில் ஏற்று, திருவாழ்மார்பனாக அருள் புரிந்தார்.
எனவே, இத் தலம் ”திருப்பதிசாரம்” ஆனதாகவும் ஒரு வரலாறு உண்டாம்.
”திருவெண்பரிசாரம்”ன்னு ஏன் பேர் வந்துச்சுன்னு கேள்வி கேட்டதுக்கு, ”பரி‘ என்றால் குதிரை. ஒரு முறை குலசேகர மன்னனின் பட்டத்துக் குதிரை (வெண் குதிரை) காணாமல் போய் விட. அதை, இந்தத் தலத்தின் சோமலட்சுமி தீர்த்தக் கரையில் கண்டடைந்தாராம்.
எனவே, இந்தத் தலத்துக்கு திருவெண்பரிசாரம் என்று பெயர் (திருவாழ்மார்பனை தரிசித்த மன்னர் குலசேகரன், திருக்குளப் படித்துறை உட்பட கோயிலுக்கும் பல்வேறு திருப்பணி செய்துள்ளாராம்).
வெண் குதிரையுடன் பகவான் எடுக்கப் போகும் கல்கி அவதாரத்தின் சாரமாக திகழும் தலம் ஆதலால், ‘திருவெண்பரிசாரம்‘ எனப் பெயர் வந்ததாகவும் அங்கிருந்த பெரியவர் விளக்கம் கூறினார்.
கோவிலின் வெளிபிரகரத்தை வலம்வந்து, மூலவருடைய கோபுர தரிசனம் முடிந்து, ஆனந்த மண்டபத்தின் கலை வேலைப்பாடுகளையும், தூண்களில் உள்ள சித்திரங்களையும், அனுமன் சிலையையும் வணங்கி











