திருவுள்ளதைப் பூர்த்தி செய்கிறது.
உனது வேலையிலும், எல்லா நேரத்திலும் நீ நேர்மையுடனும், அன்னைக்காக திறந்திருந்தும் இருப்பாயானால் எது தேவையோ அது தானே வரும்.
‘அன்னை’ என்பவர் ஒரு மானுட உருவம் தாங்கிய தெய்வீக அவதார புருசர் என்பதுடன், அன்னை அந்த அவதாரத்திற்கு அப்பாற்பட்டும் ஒரு தெய்வீக சக்தியாக இருக்கிறார்.
அன்னையின் வாழ்நாளில் அவருடன் பழகியவர்கள், அவருக்கு சேவை செய்தவர்கள், அவருடைய சிஷ்யர்கள், பக்தர்கள், அவருடைய பூத உடலில் தெய்வீக அவதாரத்தையும், சக்தியையும் தரிசித்தவர்கள்.
அன்னை சமாதியடைந்த பின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டாலும், அவருடைய சூக்கும உடல் சமாதியிலும், ஆசிரமத்திலும், புதுவையைச் சுற்றிலும், அவர்களுடைய அன்பர்களின் உள்ளத்திலும், வாழ்விலும் நின்று நிரந்தரமாகச் செயல்படுகிறது.
அன்னை பூத உடல் தாங்கி இருந்த காலத்தைவிட இன்று அவர்கள் சூக்கும உலகில் தான் யோகத்தை பெரிய அளவில் தொடர்வதால், முன் எப்பொழுதையும் விட இப்போது அவர்களுடைய அருள் மிக மேலாகவும், விரைவாகவும் செயல் படுகிறது.
அத்துடன், உண்மை, தூய்மை, பவித்திரம், விஸ்வாசம், கற்பு, திறன், சுறுசுறுப்பு, அறிவின் உயர்வு, உணர்வின் செறிவு, செயலின் நுட்பம் உள்ள இடங்களை அன்னையின் சூக்கும உடல் தேடிப்போய் இறைவனின் திருவுள்ளதைப் பூர்த்தி செய்கிறது.











