தில்லை பெருமானால் உபதேசிக்கப்பட்ட நவபுலியூர் தரிசனம்
(மோட்ச யாத்திரை)
தென்னாட்டுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறiவா போற்றி!! போற்றி!!!
அன்பார்ந்த ஆன்மீக பெருமக்கள் யாவரும் மிகுந்த நற்பலன்களை அடையவும், முன்ஜென்ம
வினைகள் தீரவும் எங்கும் நிறைந்த பரம்பொருளின் பெருங்கருணையைப் பெற்று உய்யவும்
ஆடல்வல்லான் ஆன ஆனந்த நடராஜ பரம்பொருளால் ஸ்ரீவியாக்ரபாத முனிவருக்கும்
ஸ்ரீபதஞ்சலி முனிவருக்கும் உபதேசிக்கப்பட்ட இந்த நவபுலியூர் தரிசனமானது மிகவும்
பழமையானது ஆகும்.
சித்தர் பெருமக்களாலும் மண்டூக மகரிஷி என்னும் ரிஷியாலும் மேற்கொள்ளப்பட்டு பயன்
பெற்ற யாத்திரையாகும். திருச்சிற்றம்பலம் என்னும் ஸ்ரீ சிதம்பரத்தில் ஸ்ரீ வியாக்ரபாத
முனிவரும், ஸ்ரீ பதஞ்சலி முனிவரும் மோட்சத்தை வேண்டி நின்ற பொழுது எம்பெருமான்
தில்லை நடராஜன் அவர்களை இந்த நவபுலியூர் யாத்திரை மேற்கொண்டு கடைசியாக அதை
ஸ்ரீரங்கத்தில் முடித்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார். ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கராஜனும்,
சிதம்பரத்தில் உள்ள நடராஜனும் ஒரே பரம்பொருளின் இரு வடிவங்கள் தான் என்பதை ஆன்மீக பெருமக்களுக்கு உணர்த்திய யாத்திரை இதுவாகும்.
11, 12-ம் நூற்றாண்டுக்கு முன்பாக இந்த நவபுலியூர் யாத்திரை அனைவரும் அறிந்த, ப்ரஸித்தி பெற்றதாகவே இருந்தது. அதன் பின் ஏற்பட்ட சிவ வைணவ பிரிவினையால் இந்த யாத்திரையின் முக்கியத்துவம் மறைந்தது. பின்பு சைவ பெருமக்களால் அது பஞ்சபுலியூர் தரிசனமாயிற்று. ஆனால், இன்று சனாதனதர்மத்தை கடைபிடிக்கும் யாவரும் நம்முடைய பிரிவினைகளை மறந்து பரம்பொருளின் இரு வடிவங்களையும் தரிசித்து நற்பயன்களை பெறவேண்டும்.
இது மோட்ச யாத்திரை என்று ஏன் அழைக்கப்படுகிறது என்றால், இந்த யாத்திரையின் முடிவில் நாம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்ழூர்த்திகளையும் தரிசிக்கிறோம். பின்பு சதாசிவ தத்துவமான ஸ்ரீ ஆனந்த நடராஜ பெருமாளுடன் கலந்து விடுகிறோம். ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அநூக்ரஹித்தல் ஆகியவைகளை பரம்பொருள் ஒன்றே வௌ;வேறு வடிவம் தாங்கி நடத்தி வருகிறது. இது தான் சனாதன தர்மமான நமது இந்து மதத்தின் கோட்பாடாகும். இதில் உயர்வு தாழ்வு பார்ப்பது நமது அறியாமையின் வடிவமேயாகும்.
இப்;புவியை நடத்த இறைவன் எடுத்த வடிவங்கள் தான் எத்தனை எத்தனை. ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையை அடையும் போது இந்த உண்மை நன்றாகவே புலப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் நமது உட்பிரிவுகளை மறந்து நமது இந்து தர்மத்தின் முக்கிய கோட்பாடான ஏக இறைவனை துதித்து நம் கர்ம வினைகள் தீர இறைவனாலேயே வடிவமைக்கப்பட்ட நவபுலியூர் யாத்திரையை மேற்கொண்டு பயன் பெறுவோமாக.
நவபுலியூர் யாத்திரையின் 9 புலியூர்களையும் தரிசிப்பது நவக்கிரஹ அருளையும் பெறுவதாகும். நமது விதியின் பயனானது நவக்கிரகங்கள் வழியாகவே செயல் வடிவம் கொடுக்கப் பெற்று நமக்கு அவற்றை அனுபவிக்கும்படியாக எண்ணங்களாகவும் செயல்களாகவும் மாற்றப்படுகிறது. நாம் வெறும் நவக்கிரகங்களை தொழுவதால் மட்டும் நம் வினைப்பயன்;களை மாற்ற இயலாது. அக்காலத்தில் வினைப்பயன்கள் தீர,
“தீர்த்தயாத்திரை” என்னும் சேஷத்ராடனம் வழியாக சிலபல திருத்தலங்களை தரிசிப்பதே சிறந்த பரிகாரமாக அமைந்தது. இன்றும் எத்தனையோ ஹோமங்களாலும் பலர் பலன் அடையாமல் கருமவினை தீர வழிதெரியாது திகைத்து நிற்கிறார்கள். முன்னை வினையிரண்டும் வேர் அறுத்து முன் நிற்கும் பேரருளாளனை யாத்திரை ழூலமாக தரிசிப்பதே சிறந்த பரிகாரமாகும்.
சோழ நாட்டில் புண்ணிய பலன்களைப் பெற்றுத்தரும் இந்த நவபுலியூர் யாத்திரையை மேற்கொண்டு ஆன்மீகப் பெருமக்கள் யாவரும் நற்பலன்களை அடைய எல்லாம் வல்ல ஆடலரசனையும், அரங்கனையும் பிராத்திக்கிறோம்.
9 நவபுலியூர் அமைவிடம் மற்றும் தரிசனம் செய்யும் முறை பற்றி நாளை முதல் அடுத்தடுத்த நாட்களில் பார்க்கலாம்:
October – 16









