“நவகண்ட யோகம் செய்த பாடகச்சேரி சுவாமிகள்”:
‘நவ’- ஒன்பது. கைகள், கால்கள், தொடைகள், தலை, மார்பு, வயிறு என்று உடலை 9 துண்டுகளாக பிரித்து தவம் செய்யும், ஒரு ஆபத்தான, மர்மமான யோகப்பயிற்சிதான் ‘நவகண்ட யோகம்’ ஆகும். இதில் ரத்தம் சிந்தாது. இதை ‘கண்ட சித்து’ என்றும் அழைப்பர். இதை செய்த பல சித்தர்களுள் சிலர்:
1. ஸ்ரீ சாய்பாபா, ஷீரடி, மகராஷ்ட்ரா.
2. ஸ்ரீ இராமலிங்க வள்ளலார்,வடலூர்.
3. ஸ்ரீ ல ஸ்ரீ மானூர் சுவாமிகள், கோதைமங்கலம், பழனி,
4. ஸ்ரீமத் ஓத சுவாமிகள், மலைக்கோட்டை, திண்டுக்கல்.
5. ஸ்ரீ வீரராகவ சுவாமிகள், திருவொற்றியூர், சென்னை.
6. ஸ்ரீ கோடி சுவாமிகள், புரவிபாளையம், பொள்ளாச்சி.
இந்த வரிசையில் நமது பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளும் அடங்குவார். சுவாமிகள் பாடகச்சேரிக்கு வந்த புதிதில் பித்து பிடித்தவர் போல் திரிந்திருக்கிறார். இவரை எப்படி எடுத்துக் கொள்வது கொள்வது என்று மக்களுக்கு தெரியவில்லை.
ஒருநாள் இரவு, நாச்சியார் கோவில் கிராம அதிகாரியின் அலுவலகத்தில் படுத்துவிட்டார். காலையில் அதிகாரி வந்து பார்க்கும்போது உடல் 9 பாகங்களாக பிரிந்து கிடந்தன. அதிகாரியும் மக்களும் பதறிப்போய் விட்டார்கள். இவரை பிடிக்காத யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்று தீர்மானித்து, அதிகாரி கொலை வழக்கை பதிவு செய்ய முயன்றபோது, எந்த சேதமும் இன்றி சுவாமிகள் வெளிய வர, அனைவரும் திகைத்துப் போயினர்.
பாடகச்சேரி அருகே பட்டம் எனும் கிராமத்தில் பண்ணையார் கிளாக்குடையார் என்பவர், சுவாமிகளுக்கு மாடு மேய்க்கும் வேலையை கொடுத்துள்ளார். சுவாமிகளும் அந்த வேலையை தட்டவில்லை. ஒரு நாள் மேய்ச்சலுக்கு போன மாடுகளை தேடி, பண்ணை வேலையாள் சென்றபோது, சுவாமிகள் 9 துண்டுகளாக பிரிந்து கிடந்ததைப் பார்த்து அலறியடித்து திரும்பிவிட்டார். பின், கிராம மக்களுடன் காட்டிற்கு சென்றபோது சுவாமிகள் சர்வ சாதாரணமாக மாடுகளுடன் எதிரில் வந்து கொண்டிருந்தார்.
இவ்வாறு பல அதிசய ஆற்றல்கள் பெற்றவரே நமது குருநாதர். மகான் பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் பொற்பாதம் வணங்குவோம்.










