நவபுலியூர் யாத்திரையின் 7வது ஸ்தலம் அத்திப்புலியூர்
இறைவன்: சிதம்பரேசர்
இறைவி : சிவகாமசுந்தரி
சிறுபுலியூரிலிருந்து நன்னிலம் வழியாக திருவாரூரை அடைந்து அங்கிருந்து அத்திப்புலியூரை அடையலாம். ஆதிபுலியூர் எனும் அத்திப்புலியூர் சுக்ரபரிகாரதலமாகும். நாகப்பட்டினம் அருகிலுள்ள கீவளுர் என்னும் இடத்திற்கு அருகில் உள்ளது.
பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாத முனிவருக்கும் உமாமகேஸ்வரராக கல்யாண சுந்தரராக திருமணக்கோலத்தில் தரிசனம் கொடுத்த இடம். திருமணக்காட்சி மூலவர் பின்னால் உள்ளது. அகத்தியருக்கும் திருமணக்காட்சி கொடுத்த இடம்.
தொடர்புக்கு: திரு.விஸ்வநாத குருக்கள்- 97511 95622, 99435 96849
நாளை நவபுலியூர் யாத்திரையின் 8வது ஸ்தலம் பற்றி பார்க்கலாம்…










