ரமண ஆசிரமத்தில் உள்ள அனுராதா அம்மா பகவானிடம் வட இந்தியாவில் உள்ள சிவ
ஸ்தலத்திற்குப் போவதாகக் கூறினார்கள். உடனே பகவான் அனுராதா அம்மா அவர்களைப்
பார்த்து, What is the abode of Siva? என்று கேட்டார்கள்.
உடனே அனுராதா அம்மா அவர்கள் The abode of Siva is Kailash என்று சொன்னார்கள். பகவான் உடனே, “பகவான் ரமண மகரிஷி The abode of Siva is Arunachala Hill” என்று கூறினார்கள் என்று சொன்னார்கள். The Arunachala Hill is in the form of Lingam என்றும் கூறினார்கள்.
அப்போது திருவண்ணாமலை மலையைப் பற்றிசேஷாத்திரி சுவாமிகள், லலிதானந்த சுவாமிகளிடம் கூறியதைப் படித்தது எனக்கு ஞாபகம் வந்தது. சேஷாத்திரி சுவாமிகள் கிரிவலம் வந்து கொண்டு இருந்தார்களாம்.
அப்போது லலிதானந்த சுவாமிகள் சேஷாத்திரி சுவாமிகளிடம், உன் அப்பா, அம்மா யார் என்றும், எப்படி சாப்பிடுகிறாய் என்றும், உன் வேலை என்ன என்றும் கேட்டார்களாம்.
சேஷாத்திரி சுவாமிகள், “என் அப்பா அம்மா அண்ணாமலை, உண்ணாமலை என்றும், இஷ்டப்பட்டால் உணவு என்றும் கிரிவலம் வருவது என் வேலை என்றும் இதுவரை 50,000 தடவை வந்துவிட்டதாகவும் இன்னும் 58,000 தடவை வர வேண்டும்;
இது தான் என் சங்கல்பம் என்றும் சேஷாத்திரி சுவாமிகள் கூறி, லலிதானந்த சுவாமிகளையும் கிரிவலம் வரச் சொன்னார்களாம். லலிதானந்தா சுவாமிகள் பல தடவைகள் கிரிவலம் வந்தும் வித்தியாசம் தெரியாததால்,
சேஷாத்திரி சுவாமிகள் ஈசான மூலை அருகில் கிரிவலம் வரும்போது, இந்த கிரிவலத்தின் மகிமை என்னவென்று கேட்டார்கள்.
உடனே சேஷாத்திரி சுவாமிகள் லலிதானந்த சுவாமிகள் போட்டிருந்த துண்டை எடுத்து, அவரின் கண்களை மூடி, அதன் பிறகு அண்ணாமலையைப் பார் என்று கூற, லலிதானந்த சுவாமிகள்
“அண்ணாமலைப் பார்த்தால் ஆயிரம் சூரியன் சேர்ந்தால் என்ன பிரகாசம் கிடைக்குமோ அந்த அளவிற்கு அண்ணாமலையே சிவலிங்க வடிவில் தோற்றம் அளித்தது” என்றாராம்.
உடனே லலிதானந்த சுவாமிகள் அண்ணாமலைக்கு அரோகரா என்று சப்தம் போட்டு சேஷாத்திரி காலில் விழுந்தார்களாம். அப்போது துண்டும் விழுந்துவிட்டது.
அண்ணாமலை சாதாரண மலையாக அவரது புறக்கண்ணிற்கு அப்போது தோன்றியதாம்.
இப்போது பகவான் யோகி ராம்சுரத்குமார் கூறிய The abode of Siva is Arunachala Hill என்று கூறியது என் புத்தியில் பட்டது.










