பணத்தைச் சம்பாதிப்பதற்கான அடிப்படைகள்:
வரைமுறையோடு வாழ்பவர்கள், வரைமுறையற்ற பணத்தைச் சேர்க்கமுடியாது.
வாழ்ந்து முடிப்பதற்குள் செலவழிக்க இயலாத அளவிற்குப் பணத்தைச் சேர்க்க முயற்சிப்பது வீண் வேலை!
உங்கள் பணமே உங்களுடையதல்ல, அதை நீங்கள் செலவு செய்யும்வரை! (செலவழிக்காமல் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் உங்களுடையதல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்!)
இளம் வயதாக இருக்கும்போது, உங்களுடைய ஆரோக்கியத்தைப் பணயம் வைத்துப் பணத்தைச் சேர்க்கிறீர்கள். வயதான பிறகு அதே பணத்தை வைத்து உங்கள் ஆரோக்கியத்தைத் திரும்பப்பெற முயற்சி செய்கிறீர்கள்.
அது முடியாத நிலையில் நீங்கள் தொலைத்த ஆரோக்கியம் மட்டுமே, உங்களை அல்லும் பகலும் படுத்தி எடுக்கும்.
மகிழ்ச்சி என்பது உங்கள் கையிருப்பை வைத்தல்ல. குறைந்த அளவு உங்கள் கைத்தேவை என்ன என்பதைவைத்துத்தான்! அதை உணருங்கள்.
தன் உறவுகளோடு (மனைவி மக்களோடு) கூடிக் குலாவுவதற்கு நேரம் இல்லாத ஒருவன், அவர்களுக்காகப் பொருள் ஈட்டுவதற்குக் கடுமையாக அந்த நேரத்தைப் பயன்படுத்துவது பயனற்றது. அதாவது வீண்வேலை!










