புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர்
கண்ணுக்கு தெரியாத எதிரியால் இவ்வுலகத்துக்கு இன்னல்கள் வரும் இக்காலத்தில்
எல்லாம் வல்ல முத்தொழிலும் புரிகின்ற அங்கயற்கண்ணி நாயகனே!
தன் திருநீற்றால் சகல பிணிகளையும் துரத்தி அடிக்கும் வைத்தியநாதனே!
தன்னை சரணடைந்தோரை சங்கடத்திலிருந்து அகற்றும் சண்முகனின் தந்தையே!
அனலாக இருந்தாலும் அன்போடு உம்மை அழைத்தால் அரணாக அரவணைக்கும் அண்ணாமலையானே!
அருட்பெரும் சுடராகி பரம்பொருளாய் நின்று
ஊருக்கு ஒரு சித்தனாய் இப்பிரபஞ்சத்தை காத்தருளும் பித்தனே!
நீ படைத்த ஒவ்வொரு உயிர்களும் தன் உயிருக்காக போராடிகொண்டிருக்கிறது.
விரைவில் அனைவரையும் நலமுடன் குணமாக்கிட வேண்டுகிண்றோம்.
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம்பெண்ணுரு ஆணாய் போற்றி!
புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதனே போற்றி











