மதுரைசாமி சித்தர் –செம்பியம் – பெரம்பூர்.
மதுரையிலிருந்து வந்த சாமியார் என்பதால், இந்தச் சித்தரை மக்கள் ‘மதுரைசாமி’ என்றே பெயர் சூட்டி அழைக்கலாயினர். அப்போது இந்த ஊருக்கு செம்பியம் கிராமம் என்று பெயர். இப்போது கோயில் இருக்கும் இடம் ஏரிக்கரை.
இங்கு ஏரிக்கரையில் சலவைத் தொழிலாளிகள் துணி துவைப்பர், இன்னொரு புறம் செங்கல் சூளை வேலை நடக்குமாம். மதுரை சாமி ஊருக்குள் சென்று வீடுவீடாக உணவை யாசகம் கேட்டு வாங்கி வந்த சாதங்களை மொத்தமாக கிளறி சலவைத் தொழிலாளிகளை கூப்பிட்டு வரிசையாய் உட்கார வைத்து உணவு பரிமாறுவாராம்.
‘அக அழுக்கை அகற்றி ஆன்மாவை வெள்ளையாக்கு என குறியீடாய் சொல்லும் குடிமக்களே உண்பீர். உங்கள் பசியில் பகவான் இளைப்பாறுவார்’ என்றபடியே தனது அன்னதான கடமையை தினந்தோறும் செய்வாராம். சாமியின் மதிப்பை சட்டெனப் புரிந்துகொண்ட அந்த ஏழைகளால், மதுரை சாமியின் கீர்த்தி பரவத் தொடங்கியது.
எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு ‘ஓம் நமச்சிவாயம்’தான். எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து சிவ திருநீறுதான் என்று சிவ மந்திரத்தை சொல்ல வைத்து அவர்கள் சொன்னதும் திருநீறு அளித்து அவர் நீக்கிய நோய்கள் ஏராளம். அவர் தீர்த்த பிரச்னைகள் தாராளம்.
ஒருநாள் எல்லோரையும் அழைத்து “என்னை சிவன் அழைக்கிறான். 6X6 குழி வெட்டுங்கள். நான் குழியில் உட்கார்ந்ததும் துணி வெளுக்க பயன்படுத்தும் சாலை என் மேல் கவிழ்த்து மண்ணை மூடிவிடுங்கள்” என்றாராம்.
அதனை உத்தரவாக ஏற்று செய்தார்களாம். அவர் ஜீவ சமாதி அடைந்தது ‘1901ஆம் வருடம், பிப்ரவரி தமிழ் சார்வரி – மாசி மீ – 8 மங்கள வாரம் காலை – அமாவாசை திதி, சதய நட்சத்திரம் கூடிய சுபதினத்தில்’ என்று கல்வெட்டு குறிப்பு சொல்கிறது.
“ஏரிக்கரையோரம் சூளை தொழில் செய்துவந்த மு.வேலு நாயக்கர் என்பவர், தனது சூளையிலிருந்து கல்கொடுத்து 1906ல் இந்தக் கோயிலைக் கட்டினாராம்” ஜீவ சமாதி அடைந்தது 1901 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி. சிவலிங்கை பிரதிஷ்டை. சென்னை செம்பியம் வீனஸ் தியேட்டார் 2 வது குறுக்குத் தெருவின் உள்ள மதுரை சுவாமி மடத்துத் தெருவில் ஜீவ சமாதிக் கோவில் உள்ளது.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!










