மரணத்தை தள்ளிப்போடலாமா? என்ற கேள்விக்கு அருட்தந்தையின் பதில்.
தவப்பயிற்சி செய்தாலே மரணத்தை தள்ளிப்போடலாம்.
அன்பர்களே!
உண்மை விளக்கத்தைப்பற்றி அறிந்து உங்கள் நீளாயுளை எப்படி அதிகரிக்க முடியும் என அறியுங்கள். எம்மோடு இணைந்து உலக அமைதிக்காகவும் பாடுபடுங்கள்.
கேள்வி: நமது குண்டலினி யோகம் பயின்ற ஒருவருக்கு, மூன்று வருடம் கழித்து இந்தக் காலத்தில், கிரஹ நிலைப்படி மரணம் வரும் என்று ஜோதிடரால் நிர்ணயிக்கப்படுகிறது.
அப்படியுள்ளவர் நமது நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?
வேதாத்திரி மகரிஷியின் விடை: முடியும்.
தியானம் செய்து வந்தாலே மரணத்தைத் தள்ளிப் போட்டு விடலாம். தவம் செய்யும் போது பீட்டா வேவிலிருந்து ஆல்பா வேவுக்கு மன அலை வந்துவிடுகிறது. அலை நீளம் குறைவதால் உயிராற்றல் சேமிக்கப்படுகிறது. மரணம் வெல்லப்படுகிறது.
நவக்கிரகங்களில் தவம் செய்தால் நிச்சயமாக மரணத்தைத் தள்ளிப் போட்டு விடலாம்;
ஆனால் தினம்தோறும் நவக்கிரகத்தில் இருந்து சம்யமமாகி தவம்செய்து வரவேண்டும்.
சங்கற்பம், வாழ்த்து, காப்பு இவைகளை முறையாகக் கூறி வரவேண்டும்.
எனக்கு 52 வயது தான் என்று சோதிடர்கள் கூறினார்கள்.
நான் வந்த வேலை இன்னும் இருக்கிறது. ஆகையால் எனக்கு இப்போது மரணம் இல்லையென கூறினேன்.
நமது யோக முறையினால் மரணம் வெல்லப்பட்டது. அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!










