நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி ஓரளவிற்கு அறிந்திருப்பார்கள் என்பது மிகப்பெரும் இரகசியம்.
அதேபோல நம்மை நாமும் அறியத் துவங்கிவிட்டால், அறியத்துவங்கிய பின் வாழும் வாழ்க்கையின் நிலையே வேறு மாதிரியாக இருக்கும்.
அதை அனுபவித்துப் பார்க்கும் பொழுது தான் தெரியும் எனென்றால் அதன் பூரணத்துவத்தை நிரப்ப தமிழில் வார்த்தைகள் இல்லையென்றே நினைக்கிறேன்.
ஒரு ஓவிய நிகழ்ச்சி பார்த்ததும் ஓவியத்தின் மீது ஈர்ப்பு வருவது மிகவும் இயல்பு. நீங்கள் ஓவியம் கற்கலாம் என்று நினைத்து ஓவிய வகுப்பிற்குச் செல்ல முற்படுவீர்கள், அதுவும் ஒரு வித தற்காலிக ஈர்ப்பு தான்.
ஆனால் அவ்வாறு செல்லும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் பெற்றோரோ, நண்பர்களோ, உடன்பிறப்போ, தெரிந்தவரோ நம்மைப் பார்த்து, நீ ஓவியம் செல்ல வேண்டாம், இசை கற்றுக் கொள்ளச் செல்! என்பார்கள்.
இங்கு தான் உண்மையின் சூட்சமம் புதைந்து கிடக்கிறது. அங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று மறைந்தும் இருக்கிறது. அதாவது உங்கள் குரல் நன்றாக இருக்கிறது என்பதே இது நாள் வரையில் நீங்கள் அறியாத ஒன்றாக இருந்திருக்கிறது என்பது தான் அந்த இரகசியம்.
ஆக, நாம் யார் என்று நமக்குள் தேடத் துவங்கிவிட்டால் போதும் ஒவ்வொருக்கும் ஒரு தனித்திறமை என்பது உண்டென்பது மறுக்க முடியாத பேருண்மை. பெரும்பாலானோர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நம்மை நாம் அறிவதற்கு கடுந்தவம் புரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அதுவும் இருக்கலாம் தான் அதில் நான் எந்தக் கருத்தும் கூற விழையவில்லை, ஏனென்றால் அது எனக்குத் தெரியாத ஒன்றும் கூட. ஒரு சிறிய சுய ஆய்வுக்கு உங்களை நீங்கள் உட்படுத்திக் கொண்டாலே போதும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள்
உங்களை கால்வாசி அளவிற்கு மத்திப்பிட்டு வைத்திருப்பார்கள். ஆனால் வியப்பு என்னவென்றால் அவர்களுக்கும் அவர்களைப் பற்றித் தெரியாது.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு. நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்- சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..! உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..! +91-7305018180











