ரிஷப ராசி -2018ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் ரிஷப ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த 2018ஆண்டு ஆரம்பம் முதற்கொண்டே உங்களுக்கு அஷ்டம சனியின் தாக்கம் இருக்கும்.
மேலும் ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புண்டு.
இருப்பினும் ராகு கேதுவின் சாதகமான நிலையால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
உங்களிடம் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைத்துவிட்டால், எப்பாடுபட்டாவது அதைச் செய்து முடித்து விடுவீர்கள்.
அடுத்தவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருப்பீர்கள். உங்கள் பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும். உள்ளதை உள்ளபடி சொல்லி மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். இயற்கையில் நீங்கள் இரக்க சுபாவம் உள்ளவர்.
பக்குவமாகக் காரியங்களைச் செய்வதில் கைதேர்ந்தவர். வருமானத்தை பற்றியும், எதிர்கால முன்னேற்றம் பற்றியும் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.
அடுத்தவர் மன சுமைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய வழிவகுப்பீர்கள். ஆரம்பத்தில் சில குழப்ப நிலை இருந்தாலும் ஆண்டின் பிற்பகுதியில் குரு பலத்தால் வாழ்வில் ஏற்ற தாழ்வு நிலை மாறும். திருமண முயற்சிகள் கைகூடும்.
தெய்வீக காரியங்கள் மேற்கொள்வீர்கள். இதுவரை இருந்த உடல் பிணிகள் காணாமல் போகும். கடன்சுமை ஓரளவு குறையும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
கூட்டு முயற்சிகளில் லாபம் கிடைக்கும். அடிப்படை வசதி, வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள். எத்தனை தடைகள் இருந்தாலும், அவற்றில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும்.
பொதுநலத்தில் முழுமையாக ஈடுபட்டிருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்யோக முன்னேற்றம் கூடுதலாக இருக்கும். பதவி உயர்வும்,
ஊதிய உயர்வும் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும், அதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடு வாங்கும் யோகம் உண்டு. சொத்து பிரச்சனை சுமுகமாக முடியும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வருங்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
தொடர் வெற்றி ஏற்படும். பயணங்களால் பலன் உண்டு. பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வந்துசேரும்.
பல புண்ணிய தலங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். புதியதொழில் தொடங்கும் சூழ்நிலையும் அமையும். இந்த ஆண்டு அஷ்டமத்துச்சனி அலைச்சலையும்,
அதிக விரயத்தையும் ஏற்படுத்தும். கட்டுக்கடங்காத செலவுகளைக் கொடுத்து உங்களை திணற வைக்கும். உங்களுக்கு அலைச்சலை ஏற்படுத்தினாலும் ஆதாயத்தைக் கொடுக்கும்.
எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதும், வருவாய் அறிந்து செலவழிப்பதும் நல்லது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம்.
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடக்க முன்வருவர். பிறருக்கு வாங்கிக் கொடுத்தத் தொகை வந்துசேரும். வருமானம் உயரும்.
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பெற்றோர் வழியில் அன்பு அதிகரிக்கும். தாய்வழி ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடப்பர்.
ஒரு சிலருக்கு ஊர் மாற்றமும், வீடு மாற்றமும் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
தனித்து இயங்கும் முயற்சியை கைவிடுவது நல்லது. குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்தைக் கூட்டும்.
பரிகாரம் :
அஷ்டமத்துச் சனிக்கு பரிகாரமாக, சனிக்கிழமை தோறும் விரதம்இருந்து ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
முக்கிய குறிப்பு :
இந்த 2018-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.











