வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவி
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அன்பர்கள்
வாழ்க பகைவர்கள் வளமோடு திருந்தி
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க
வாழ்க அறநெறி வாழ்க மெய்ஞானம்.










