உன் வாழ்க்கையில் நேரத்தை திட்டமிடாத வரை,
நீ சென்று கொண்டிருக்கும் பாதை
உனக்கு தெளிவாக புலப்படாது.
உனது வாழ்வில் வரவு,செலவு கணக்கு வைக்காத வரை உனது ஆபத்தான நேரத்தை
நீ கண்டறிவது கடினம்.
உன்னிடம் கவனம் இல்லாதவரை யார் உனக்கு நண்பன்,யார் உனக்கு எதிரி என பகுத்தறிவது கடினம்…
இறைவனிடம் பயம் இல்லாத வரை உன்னிடம்
நேர்மை என்பது உன் நிழலில் கூட புலப்படாது.
நாளை என்று சொல்லும் வரை நீ எதையும் சாதிக்கப் போவதில்லை.
நம்பிக்கை இல்லாத வாழ்வில் எந்தவொரு முன்னேற்றம் இல்லை.
இரக்கமும்,கருணையும் இல்லையென்றால்
உன்னிடம் அன்பு உற்பத்தியாக முடியாது.
மனத்தூய்மை இல்லையென்றால் பிறரின்
உணர்வுகளை உன்னால் கண்டறியமுடியாது.
கடும் வார்த்தைகளை பேசுபவனின் மனம்
கடும் சுமையால் நிறைந்திருக்கும்.
அவமரியாதை செய்பவன் மரியாதையற்ற
மரணத்தை அடையவேண்டியது இருக்கும்.
இவற்றை ஒருவர் ஆராய்ந்து அறிந்து
விலக்கி வாழ்வில் ஒளியேற்றி உலகில் உன்னதமாக பிரகாசிக்கவேண்டும்.!
அன்பேசிவம்









