வீட்டில் நிம்மதியின்மை,
சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள்,
தூக்கமின்மை,
கணவன் மனைவி மத்தியில் வாக்குவாதங்கள்,
கண் திருஷ்டி,
எதிர் மறை சக்திகள்
போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது
சாம்பிராணி தூபம்.
- வெண்கடுகு 250 கிராம்.
- நாய்க்கடுகு 250 கிராம.
- மருதாணி விதை 250 கிராம்.
- சாம்பிராணி 250 கிராம்.
- அருகம்புல் பொடி 50 கிராம்.
- வில்வ இலை பொடி 50 கிராம்.
- வேப்ப இலை பொடி 50 கிராம்.
ஆகியவற்றை பொடியாக செய்து வீட்டில் தூபம் போட்டு வந்தால்
மேற்கண்ட எதிர்மறை சக்திகள்,
எதிர்மறை எண்ணங்கள்,
கண்திருஷ்டி,,
போன்றவை எளிதாக மறைந்து விடும்….!!
மேற்கண்ட பொருட்களுக்குரிய தெய்வங்கள்……!!
வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது….!!
மருதாணி விதை திருமகளுக்குரியது.
அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும்.
வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது.
மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது
பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் துணை நிற்கும்..!
எனவே வீட்டில் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வந்தால் ,
தெய்வ கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்…..!!
தூப பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்…..!!!
அனைத்தையும் பொடித்து சிறிது சாம்பிராணியுடன்,
தூபம் தினசரி தொடர்ந்து 48 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும்……!!
மேற்கண்ட முறையை பயன்படுத்தி
எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.










