• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வைகாசி மாத ராசி பலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)

siddharbhoomi by siddharbhoomi
May 20, 2019
in தமிழ் மாத ராசி பலன்கள்
0
வைகாசி மாத ராசி பலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வைகாசி மாத ராசி பலன் 2019

(15.5.2019 முதல் 15.6.2019 வரை)

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)

குரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நற்பலன் கொடுக்க முடியாது. ஆனால் அவரது 7-ம் இடத்துப் பார்வையால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது.

சுக்கிரன் ஜூன்6ல் மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு மாறினாலும் நற்பலன் கொடுப்பார். ராகு மற்றும் செவ்வாயால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதன் மே29 வரை உங்கள் ராசிக்கு 2ல் இருப்பதால் செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன்பின் அவர் 3-ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பான நிலையல்ல.

குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். அவரால் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர் உதவிகரமாக இருப்பர். சுக்கிரனால் சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என செல்வீர்கள். ஜூன்3க்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும்.  சமூக மதிப்பு கூடும்.

மனதில் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த செயல்களில் வெற்றி காணலாம். மே29க்கு பிறகு  அக்கம்பக்கத்தினரால் தொல்லை வர வாய்ப்புண்டு. அவர்களிடம் நெருக்கத்தை தவிர்க்கவும்.  போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. இடமாற்ற பீதி மறையும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.

மே29க்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் அக்கறையுடன் வேலை செய்யவும். இருப்பினும் ஜூன்4க்கு பிறகு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் கிடைக்கும். மே24,25ல் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும்.

வியாபாரிகளுக்கு ராகுவால் தொழில் விருத்தி உண்டாகும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை அடைவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் அடையும்.

பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். மே29க்கு பிறகு வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே15, ஜூன்11,12ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

கலைஞர்கள் சிறப்பான வருமானத்தை பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஜூன்4க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி கிடைக்க பெறுவர்.

மாணவர்கள்  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். இருப்பினும் மே18 வரை குரு சாதகமாக இருப்பதால் ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

விவசாயிகள்  மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். புது சொத்து வாங்கும் எண்ணம்  நிறைவேறும்.

பெண்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். செவ்வாயால் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். மே29க்கு பிறகு உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் கூட இணக்கமாக வருவர். ஜூன்5,6ல் ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப்பெறலாம். மே16,17,18, ஜூன் 13,14 சிறப்பான நாட்களாக அமையும்.

* நல்ல நாள்: மே 15,16,17,18,24,25,26,27,28,31 ஜூன் 1,5,6,11,12,13,14
* கவன நாள்:  மே 19,20, ஜூன் 15 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்:
● சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள்தீபம்
● குலதெய்வத்தை வழிபட்டு பயறு தானம்
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)

குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

உங்கள் ராசியில் இருக்கும் சூரியன், புதன் நற்பலனை கொடுக்க மாட்டார்கள். அதே போல்  2-ல் உள்ள செவ்வாய், ராகு, 8-ல் உள்ள கேது, சனி ஆகியோரால் நன்மை கிடைக்காது. வீண்விரயம் ஏற்படலாம். சிக்கனமாக இருக்கவும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீட்டினுள் பிரச்னை ஏற்படலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றத்தைச் சந்திப்பர்.

குருவால் மே18க்கு பிறகு குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும்.  சுக்கிரன் ஜூன்3க்கு பிறகு சாதகமான இடத்திற்கு செல்வதால் சகோதரவழியில் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்களால் மேன்மை கிடைக்கும். ஜூ2,3,4ல் பெண்களால் முன்னேற்றம் காணலாம்.

பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும், பளுவும் அதிகரிக்கும். பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆனால் மே28க்கு பிறகு குருவின் பலத்தால் வேலையில் இருப்பவர்கள் மேன்மை  காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். மே 26,27,28 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஜூன்3க்கு பிறகு தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் வகையில் மனக்கசப்பு ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். மே18க்கு பிறகு வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.  மே16,17,18, ஜூன்13,14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க பெறுவர்.

கலைஞர்களுக்கு  முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மே 29க்கு பிறகு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். மே18க்கு பிறகு குரு பலத்தால் கல்வியில் சிறப்படைவர். நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல கல்வி நிறுவனங்களில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகலாம். மே18க்கு பிறகு  கேழ்வரகு, மஞ்சள், பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம்  கிடைக்காது. வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு அன்னியோன்யமான சூழ்நிலை இருக்காது. அவ்வப்போது குடும்பத்தில் பிரச்னை வந்து மறையும். மே18க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவர்,
குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர்.

வேலையில்  மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தைக் காணலாம். ஜூன்7,8ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். மே19,20, ஜூன்15ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

சகோதரர்கள் வகையில் பணஉதவி கிடைக்கும். மே29,30ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன்9,10ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.

உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.

* நல்ல நாள்: மே 16,17,18,19,20,26,27,28,29,30 ஜூன் 2,3,4,7,8,13,14,15
* கவன நாள்: மே 21,22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: மஞ்சள்,வெள்ளை

வழிபாடு:
● குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பழம்
● காலையில் நீராடியதும் சூரியவழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

ராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும்.

ஆனால் அவரது 9-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும். இதனால் மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சரணடையும் நிலை ஏற்படும். சுக்கிரன் ஜூன்4 வரை நன்மை கொடுப்பார் மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் நன்மையை எதிர்பார்க்க முடியாது.

குடும்பத்தில் சுக்கிரனால் பண வரவு இருக்கும். சொந்தபந்தங் களின் வருகை இருக்கும்.  மாதத் தொடக்கத்தில் குருவால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். மே28க்கு பிறகு புதனால் குடும்பத்தில் பிரச்னை வரலாம்.

அண்டைவீட்டார் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சிலருக்கு பணஇழப்பும் ஏற்படலாம். மே15, ஜூன் 11,12ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அதே நேரம் மே31, ஜூன்1ல் உறவினர்கள் வகையில் நன்மை கிடைக்கும். அவர்களால் முன்னேற்றம் காண்பீர்கள்.

ஜூன்5,6,  ஜூன்14ல் பெண்களால் அனுகூலம் கிடைக்கும். சகோதரவழியில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு உயரும். அதிகாரி களின் கருணை பார்வை கிடைக்கும். மே 18க்கு பிறகு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாகும். சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். சூரியன் உங்கள் ராசிக்கு 12-ல் இருப்பதால் இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.

மே29,30ல் உங்களின் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகளுக்கு மாதத் தொடக்கத்தில் குருபகவானால் வெற்றி கிடைக்கும்.  தொழிலில் அமோக லாபம் கிடைக்கும்.
மே18க்கு பிறகு எதிரிகளால் தொல்லை வரலாம்.முயற்சியில்  தடைகள் வரலாம்.

மே19,20, ஜூன்15ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஜூன்2,3,4,7,8ல் சந்திரனால் பண விரயம் ஆகலாம். சிலருக்கு சூரியன் உங்கள் ராசிக்கு 12-ல் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படும். சனி, ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். கவனம் தேவை கலைஞர்கள் தொடர்ந்து ஸ்திர தன்மையில் இருப்பர்.

சுக்கிரனால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஜூன் 3க்கு பிறகு காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம்.அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மே16,17,18,  ஜூன்13,14ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.  மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.

மே18க்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.  விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. கிழங்கு வகைகள், நிலக்கடலை, மஞ்சள், பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. கால்நடைகள் மூலம் வருவாய்  கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மே18க்குள் கைகூட வாய்ப்பு உண்டு. அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும்.

வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. ஜூன்9,10ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.  மே 21,22,23ல் சிறப்பான பலன் கிடைக்கும்.  ராகுவால் உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம்.

* நல்ல நாள்: மே 19,20,21,22,23,29,30,31 ஜூன் 1,5,6,9,10,15
* கவன நாள்: மே 24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்: மஞ்சள்,  வெள்ளை

* பரிகாரம்:
● காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
● வெள்ளியன்று ராகுகால துர்கை வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

குருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது  அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம்.

11-ம் இடமான ரிஷபத்தில் இருக்கும் சூரியன் நற்பலன் கொடுப்பார். புதன் மே28 வரை நன்மை கொடுப்பார். சுக்கிரன் ஜூன்3க்கு பிறகு  நற்பலன் தருவார். ராசிக்கு 12-ல் உள்ள ராகு, செவ்வாய் ஆகியோரால் எந்த நன்மையும் கிடைக்காது.  ஆனால் 6-ம் இடமான தனுசு ராசியில் இணைந்திருக்கும் சனி,கேது  நற்பலன்களைத் தருவர். உங்களுக்கு வரும் இடையூறுகள் அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.

குடும்பத்தில் சூரியன், புதனால் பொருளாதார வளம் மேம்படும். சமூக மதிப்பு அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ஜூன் 3க்கு பிறகு சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஜூன்2,3,4ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே16,17,18, ஜூன் 13,14ல் உறவினர் வகையில் சிறு பிணக்குகள் வந்து மறையும்.  ஜூன்7,8ல் சகோதரிகளால் அனுகூலம் கிடைக்கும். மே15, ஜூன்11,12ல் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.

அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். புதன், சூரியன் சாதகமான இடத்தில் இருப்பதால் தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  வேலைப்பளு சற்று குறையும். இடமாற்ற பீதி  மறையும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். மே18க்கு பிறகு சகபெண் ஊழியர்கள்  ஆதரவுடன் இருப்பர். மே31, ஜூன்1ல்  எதிலும் வெற்றி காணலாம். பணியிடத்தில் உங்களின் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகளுக்கு பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. தொழிலில் லாபம் அதிகரிக்கும்  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். சனி, சூரியனால் பொருளாதார வளம் சிறக்கும். புதிய  வியாபார முயற்சியில் ஈடுபடலாம்.

உங்களிடம் வேலைபார்ப்பவர்கள் நன்றியுடன் இருப்பர்.  அரசின் சலுகை கிடைக்கும். வங்கியில் விண்ணப்பித்த கடன்  கிடைக்கும். ஜூன் 5,6,9,10ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே21,22,23ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். செவ்வாயால் அலைச்சல் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்த தொல்லை, முயற்சியில் இருந்த தடை முதலியன ஜூன்3க்கு பிறகு மறையும். அதன்பின் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். மே19,20, ஜூன்15ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். குருவால் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு  கிடைக்க பெறுவர். விவசாயிகள் பசுவளர்ப்பு மூலம் வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.

பெண்கள்  கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக  செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். புதிய பதவி தேடி வரும். சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மே15, ஜூன்11,12ல்  பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். மே24,25ல் சிறப்பான பலன்களைக் காணலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.

உடல்நிலை சிறப்பாக இருக்கும். மே28க்கு பிறகு அக்கறை கொள்வது நல்லது.

* நல்ல நாள்: மே 15,21,22,23,24,25,31 ஜூன் 1,2,3,4,7,8,11,12
* கவன நாள்: மே 26,27,28 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,3,7
* நிறம்: சிவப்பு, கருப்பு

பரிகாரம்:
● வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
● புதன்கிழமையில் குலதெய்வத்திற்கு விளக்கு

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)

ராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை தருவார்கள். புதன் மே29ல் 11-ம் இடத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். ஜூன்4 வரை சுக்கிரன் மஷேத்தில் இருந்து நற்பலன் தருவார்.

ஆனால் 5-ல் உள்ள சனி,கேது ஆகியோரால் எந்த பலனும் பெற முடியாது. தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு மே 18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. அவர் மனஉளைச்சல், உறவினர் வகையில் வீண் பகையை தருவார்.

குடும்பத்தில் பொன், பொருள் சேரும். மனதில்  மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சூரியனால் எடுத்த காரியம் சிறப்பாக முடியும்.
சமூகத்தில் மதிப்பு உயரும். சுக்கிரனால் பொருளாதார வளம் கூடும். சகோதரிகளால் நன்மை கிடைக்கும்.

புதன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். பெண்களால் நற்சுகம் உண்டாகும். குறிப்பாக ஜூன்9,10ல் அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன்5,6ல் விருந்தினர் வருகையும் அதனால் மனதிற்கு புதிய உற்சாகமும் பிறக்கும்.

ஆனால் மே 19,20, ஜூன் 15ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு புதனால் நற்பலன் கிடைக்கப் பெறலாம். பணியிடத்தில் நற்பெயரும், மதிப்பும் கிட்டும். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். பாதுகாப்பு தொடர்பான பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவி தேடி வரும்.

ஜூன்2,3,4ல் சிறப்பான பலனை காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.

வியாபாரத்தில் லாபத்திற்கு எந்த குறையும் இருக்காது.  வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.

மே28க்கு பிறகு  பங்கு வர்த்தகத்தில் அதிக வருவாயை பெறலாம். அதே நேரம் மே15, ஜூன்7,8,11,12ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே24,25ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். சனிபகவானால் மனதில் இனம் புரியாத வருத்தம் இருக்கலாம். இருப்பினும் கேதுவால் அதனை எளிதில் முறியடிப்பீர்கள்

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று சிறப்பு நிலையை அடைவர். ஜூன்4க்கு பிறகு எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். மறைமுகப் போட்டிகள் அதிகமிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். பாசி பயறு, நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.  கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் வரும்.

பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம்  கைகூடும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். உங்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள்  ஆதரவுடன் இருப்பர்.
சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு வேலையில் நிம்மதி கிடைக்கும், சிலருக்கு புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது.

மே16,17,18 ஜூன்13,14ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம். மே26,27,28ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். ஆனால் பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்: மே 16,17,18,24,25,26,27,28, ஜூன் 2,3,4,5,6,9,10,13,14
* கவன நாள்: மே 29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,7,9
* நிறம்: பச்சை,சிவப்பு

பரிகாரம்:
● சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை
● வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்
● வெள்ளிக்கிழமை நாகதேவதை வழிபாடு

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2)

ரிஷபத்தில் இருக்கும் புதன் மே29ல் மிதுனத்திற்கு மாறி நற்பலன் தருவார். மற்றும் சுக்கிரன் ஜூன் 4ல் 11-ம் இடத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்.

தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இதுவும் சுமாரான இடம் தான்.    சூரியனால் மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. வீண்விவாதங்களைத் தவிர்க்கவும்.

குடும்பத்தில் சுக்கிரனால் வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். மே28 வரை சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். சண்டை சச்சரவுகள் அடியோடு மறையும்.

வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெண்கள் வகையில் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். குறிப்பாக மே15, ஜூன் 11,12ல் அவர்களால் நன்மை கிடைக்கும். மே21,22,23ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம் கவனம். அதே நேரம் ஜூன்7,8 ல் அவர்கள் வருகையால் நன்மை கிடைக்கும்.

பணியாளர்களுக்கு மாதத் தொடக்கத்தில் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும் வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து மே28க்கு பிறகு விடுபடுவர். அதன்பின் சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.

தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். மேலதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஜூன்5,6ல் எதிர்பாராத நன்மைகளை கிடைக்கப் பெறலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்

வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்  மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும்.  பெண்கள் வகையில் இருந்த தொல்லைகள்  மே28க்கு பிறகு அடியோடு மறையும்.

மே26,27,28ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். மே16,17,18, ஜூன்9,10,13,14ல் உங்களின் முயற்சியில் சிறு தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம்.

ஜூன்3க்கு பிறகு பொருளாதார வளம் கூடும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பாராட்டு, புகழ் தானாக வரும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள் குருவின் பார்வையால் கல்வியில் சிறப்படைவர். அதிக மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி போன்றவை கிடைக்கும். மே28க்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். மே28க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும்.வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். ஆடம்பர பொருட்கள் கிடைக்க பெறுவர். மே28க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். குருவின் பார்வையால்  தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். செவ்வாயால் அக்கம்பக்கத்தினரால் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. மே19,20 ஜூன்15ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். மே29,30 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.
அவர்களால் பண உதவி கிடைக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய்கள் வரலாம்.

* நல்ல நாள்: மே 15,19,20,26,27,28,29,30 ஜூன் 5,6,7,8,11,12,15
* கவன நாள்: மே 31, ஜூன் 1 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 5,7
* நிறம்: வெள்ளை,  பச்சை

பரிகாரம்:
● சனியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
● தினமும் காலையில் நீராடி சூரிய வழிபாடு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் அபிஷேகம்

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3)

உங்கள் ராசிக்கு 3ல் உள்ள சனி, கேது மாதம் முழுவதும்  நற்பலன் கொடுப்பார்கள். புதன் மே29வரை 8-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தருவார். ஜூன்4 முதல் சுக்கிரன் ரிஷப  ராசிக்கு வந்து  நற்பலன் தருவார்.

குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது அவரால்  சிறப்பான பலன்கள் கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

குடும்பத்தில் புதனால் நன்மை காண்பீர்கள். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.

மே28க்கு பிறகு மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் இருக்கவும், விட்டுக் கொடுத்து போகவும். ஜூன்3க்கு பிறகு சுக்கிரனால் வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர்.   பொருளாதார வளம் கூடும். மே16,17,18, ஜூன்13,14ல் சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர்.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும்.

ஜூன்7,8ல் பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம் மே28க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. ஆனால் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

வியாபாரத்தில் லாபம் குறையாது. ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும்.  மே15,19,20, ஜூன்11,12,15ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே29,30ல் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.

மே28க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போகவும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஜூன்3க்கு பிறகு மறையும்.

அதன் பின் அதே பெண்கள்  தவறை உணர்ந்து  உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் சீரான பலனை காண்பர். விடாமுயற்சியால் சிலருக்கு  பதவி கிடைக்கும். மே26,27,28ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள்  சீரான நிலையில் இருப்பர். போட்டிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு. மே29க்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம். கவனம் தேவை. இருப்பினும் குருவால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்.  ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.

விவசாயிகள்  மஞ்சள், கேழ்வரகு, சோளம் பயறு வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். மே28க்கு பிறகு புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்த குடும்பத்தினர் உங்களின் அன்பை உணர்ந்து அனுகூலமாக நடப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். வியாபாரம் செய்யும்  பெண்களுக்கு  லாபத்துக்கு குறைவிருக்காது.

மே21,22,23ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.

மே31, ஜூன்1 சிறப்பான நாட்களாக அமையும்.  விருந்து, விழாவுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

* நல்ல நாள்: மே 16,17,18,21,22,23,29,30,31 ஜூன் 7,8,9,10,13,14
* கவன நாள்: ஜூன் 2,3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: மஞ்சள்  சிவப்பு

பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

இந்த மாதம் 2ம் இடத்தில் இருக்கும் குருவின் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. இதனை கண்டு அஞ்ச வேண்டாம். காரணம் புதன் மே29 முதல் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். கேது, செவ்வாய், சுக்கிரன், சூரியன், சனி, ராகுவால் நற்பலன் கிடைக்காது.

மாத தொடக்கத்தில் குருவால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். தேவையான வருமானம் இருக்கும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. மே18க்கு பிறகு அவரால் கலகம், விரோதம் ஏற்படலாம். ஆனாலும் அவரது பார்வை பலத்தால் பிரச்னையை முறியடித்து வெற்றி காணலாம்.

குடும்பத்தில் மாத முற்பகுதியில் புதனால் பிரச்னை வரலாம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு ஏற்படலாம். இதற்கு காரணம் புதன் 7-ம் இடத்தில் இருப்பதே. ஆனால் மே28க்குப் பிறகு மனதில் அமைதி நிலவும். முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் சேரும். பெண்கள் மிகவும் அனுகூலமாக இருப்பர் குறிப்பாக மே19,20, ஜூன்15ல் அவர்களால் கூடுதல் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.  மே15,ஜூன் 11,12ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும்.

பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். மே28க்கு பிறகு புதனால் பதவி உயர்வு வந்து சேரும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். ஜூன்9,10ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகள் அடிக்கடி வெளியூர் பயணம் செல்வர். எதிரிகளால் பிரச்னை வரலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டியதிருக்கும்.

கேதுவால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே16,17,18,21,22,23, ஜூன்13,14ல் சந்திரனால்  தடைகள் வரலாம்.

மே31, ஜூன்1ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.  பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். மே18க்கு பிறகு குருவின் பார்வையால் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜூன்3க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் ஏற்படலாம்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. மே29,30ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் குருவால் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு உதவும்.

மே28க்கு பிறகு கல்வியில் சிறப்படைவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு வருமானம் குறையாது. மஞ்சள், பாசிப்பயறு, கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க  சில காலம் பொறுத்திருக்க நேரிடும்.

பெண்கள்- வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். மே18க்கு பிறகு குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மே24,25ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். ஜூன்2,3,4 சிறப்பான நாட்களாக அமையும்.

கேதுவால் மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள்  கவனமாக இருக்க
வேண்டும். உடல்நிலை சீராக இருக்கும். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும்.

* நல்ல நாள்: மே 15,19,20,24,25,31,ஜூன் 1,2,3,4,9,10,11,12
* கவன நாள்: ஜூன் 5,6 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,7
* நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்:
● தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு
● வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1)

இந்த மாதம் சூரியன் 6ம் இடத்தில் நின்றும், சுக்கிரன் 5ம் இடத்தில் நின்றும் நற்பலன் கொடுப்பார்கள். புதன் மே29 வரை நன்மை தருவார். உங்கள் ராசியில் இருக்கும் சனி, கேது, குரு,7ல் இருக்கும் செவ்வாய், ராகுவால் எந்த பலனையும் பெற முடியாது.

தற்போது உங்கள் ராசியில் இருக்கும் குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இதுவும் சுமாரான இடம் தான். அவரால் தொல்லைகள் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.

முக்கிய கிரகமான சூரியன், சுக்கிரன் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். லாபம் அதிகரிக்கும்.

மனதில் பக்தி உயர்வு மேம்படும். குடும்பத்தில் புதனால் எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். மே28க்கு பிறகு கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

மே21,22,23ல்  பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே16,17,18, ஜூன்13,14ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே29,30ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.

பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.

மே28க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். மே15, ஜூன்11,12ல் அனுகூலமான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகள் முக்கிய பொறுப்புகளை மற்றவர் வசம் ஒப்படைக்க வேண்டாம். பொருளாதாரம் சீராக இருக்கும். கூட்டாளி களிடையே ஒற்றுமை ஏற்படும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.

மே19,20,24,25, ஜூன்15ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன்2,3,4ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மே 26க்கு பிறகு அலைச்சல் ஏற்படலாம். வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதிபடலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜூன்3க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். பிரதி பலனை எதிர்பாராமல் பாடுபட நேரிடும். மே31 ஜூன்1ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காணலாம். மே28க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால்  சிரத்தை எடுத்து படிப்பது அவசியம்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். நெல், சோளம் பழ வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சுற்றுலா செல்வர் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.
மே26,27,28ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருட்கள் வந்து சேரும். ஜூன்5,6ல் விருந்து விழா என செல்வர். சகோதர வகையில்  உதவி கிடைக்கும். தொழிலில் ஈடுபடும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். கேதுவால் அக்கம்பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே அப்போது சற்று விலகி இருக்கவும்.  சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஆரோக்கியம் மேம்படும்.

* நல்ல நாள்: மே 15,16,17,18,21,22,23,26,27,28, ஜூன் 2,3,4,5,6,11,12,13,14
* கவன நாள்: ஜூன் 7,8 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
● ராகு காலத்தில் துர்க்கை, பைரவர் வழிபாடு
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு விளக்கு
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

பெரும்பாலான கிரகங்கள் சாதகமான இடத்தில் இருப்பதால் அதிக முன்னேற்றங்களை காண்பீர்கள். அபார வளர்ச்சியும்,  முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். தனுசு ராசியில் இருக்கும் குரு மே18ல்  அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிக உயர்வான நிலை. அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும்.

ராகு, செவ்வாயால்  அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.  சுக்கிரனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். ஜூன்3க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

குடும்பத்தில் பண வரவுக்கோ, மகிழ்ச்சிக்கோ குறை இருக்காது. புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். மே26க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். மே24,25ல் பெண்கள்  உதவிகரமாக இருப்பர். மே19,20, ஜூன்15ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மே31, ஜூன்1ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைப்பளு குறையும்.

அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் மே 28 வரை அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும். அதன் பிறகு பதவி உயர்வு கிடைக்கும். வேலை விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர்.

மே16,17,18, ஜூன்13,14ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். மே28 வரை அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். யாரையும் நம்பி பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ ஒப்படைத்து விட வேண்டாம். மே 21,22,23,26,27,28ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன்5,6ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.  ஜூன்3 க்கு பிறகு கோயில், புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.

கலைஞர்கள் வாழ்வில் சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சககலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ஜூன்2,3,4ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு குருவால் கல்வி சிறப்பாக அமையும்.

ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். மே28க்கு பிறகு  புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், கோதுமை, சோளம், மஞ்சள், காய்கறி  மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். மே28க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.  புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. பக்கத்து நிலத்துக்காரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். மே28க்கு பிறகு சுபவிஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும்.

மே29,30ல் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப் பெறலாம். ஜூன் 7,8ல் சிலருக்கு விருந்து, விழா என செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். ஜூன்3க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர்.  சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். விரிவாக்கம் செய்ய வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

* நல்ல நாள்: மே 16,17,18,19,20,24,25,29,30, ஜூன் 5,6,7,8,13,14,15
* கவன நாள்:  ஜூன் 9,10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
● புதன்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு
● சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை
● வெள்ளியன்று மகாலட்சுமிக்கு அர்ச்சனை

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

மே 29 வரை புதன் அனுகூலமான பலன்களை தருவார். சுக்கிரன் ஜூன்4ல்  இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். சனி, கேது மாதம் முழுவதும் நன்மையளிப்பர். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் சுபபலன் கொடுப்பார்.

தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. குரு பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். இருப்பினும் இந்த காலத்தில் அவரின் 5-ம் இடத்துப்பார்வை மூலம் கெடுபலன் குறைந்து நன்மை சேரும்.

குடும்பத்தில் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆற்றல் மேம்படும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். சுக்கிரனால் தம்பதியிடையே அன்பு, பாசம் மேலோங்கும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புதன் 4-ம் இடத்தில் இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.

மே26,27,28ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். பணஉதவி கிடைக்கும். மே21,22,23ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன்2,3,4ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

ஜூன் 3க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.

பணியாளர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சூரியனால் பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம்.

சற்று ஒதுங்கி இருக்கவும். மே21க்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். மே19,20, ஜூன்15ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வியாபாரம் வளர்ச்சி முகமாக இருக்கும். பழைய கடன்கள் அடைபடும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.

மே28க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். மே24,25,29,30ல் சந்திரனால்  தடைகள் வரலாம். ஜூன்7,8ல் எதிர்பாராத வகையில்  பணம் கிடைக்கும்.

கலைஞர்கள் சுக்கிரன் பலமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டு வந்து சேரும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு  கிடைக்கும்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர்.  எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மாணவர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறுவர். ஆனாலும் மே28க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

விவசாயிகள் கால்நடை வளர்ப்பில்  எதிர்பார்த்த லாபம் காண்பர். மஞ்சள், எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.

பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மே28க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள்  பொறுமையும், நிதானமும் தேவை. அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும்.

ஜூன்3க்கு பிறகு உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். நல்ல பணப்புழக்கத்தை காண்பீர்கள்.

மே31, ஜூன்1ல் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்: மே 19,20,21,22,23,26,27,28,31, ஜூன் 1,7,8,9,10,15
* கவன நாள்: மே 15, ஜூன் 11,12 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: சிவப்பு, கருப்பு

பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை
● தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
● சுவாதியன்று லட்சுமிநரசிம்மர் வழிபாடு

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

சூரியன் 3-ம் இடத்தில்  நின்று குடும்பத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்வார். சுக்கிரன் ஜூன் 4ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். மேலும் புதன் மே 28க்கு பிறகு நற்பலன் கொடுப்பார்.

10-ம் இடத்தில் இணைந்திருக்கும்  சனி, கேது, 4-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகுவால் நன்மை எதிர்பார்க்க முடியாது.  தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

இது மிகவும் உயர்வான நிலை. அவரால் மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும்.  ஆடம்பர வசதிகள் கிடைக்கும். சுக்கிரனால் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மே28க்கு பிறகு பொன், பொருள் சேரும். ஜூன்3க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின்9-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.  பெண்களால் மேன்மை கிடைக்கும். குறிப்பாக மே29,30ல் அவர்களால் அனுகூலம் காணலாம்.

மே24,25ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.   அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். மே28க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.

அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம்.
மே21,22,23ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.  புதனால் ஏற்பட்ட பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு  மே28க்கு பிறகு மறையும்.  விண்ணப்பித்த வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

கலைஞர்கள் உற்சாகமான பலனைக் காண்பர். சக கலைஞர்களின் மத்தியில் பாராட்டு கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பரிசு போன்றவை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே விரும்பிய பதவி கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். மே18க்கு பிறகு சிலர் மேல் படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்வர். விவசாயிகள்  பழவகைகள், கீரை வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவர். மே28க்கு பிறகு ஆடு, மாடு மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும். பால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்க விடாமுயற்சி தேவைப்படும்.

பெண்கள் வாழ்வில் குதூகலம் அதிகரிக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர்.  ஜூன்2,3,4ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்க பெறலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம். மே15, ஜூன்11,12 சிறப்பான நாட்களாக அமையும்.

சகோதர வழியில் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே18க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

* நல்ல நாள்: மே 15,21,22,23,24,25,29,30, ஜூன் 2,3,4,9,10,11,12
* கவன நாள்: மே 16,17,18, ஜூன்13,14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:3,9
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:

● ராகு காலத்தில் துர்க்கை, பைரவர் வழிபாடு
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை
● திங்கட்கிழமை சிவனுக்கு வில்வார்ச்சனை.

Previous Post

தாமதாமாக உண்ணுவது

Next Post

பிரபஞ்சம் என்றால் என்ன?

Next Post
பிரபஞ்சம் என்றால் என்ன?

பிரபஞ்சம் என்றால் என்ன?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »