• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஶ்ரீ அபிராமி அமுதம்

siddharbhoomi by siddharbhoomi
April 30, 2020
in ஆன்மிகம்
0
ஶ்ரீ அபிராமி அமுதம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஶ்ரீ அபிராமி அமுதம்

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே!!”

நிரந்தமில்லாத பல வஸ்துக்கள் நிரம்பிய இந்த உலகிலே, நிரந்தரமான துணை ஒன்று உண்டு என்பதை அறிந்து கொண்டேன்!!

நேர்மாறிலாத உறவோடு, நண்பர்கள், நெய்வாசக்கூந்தல் மனையாள், பெயர் மாறும் நாளில் வரமாட்டார்கள் என்பதை அறிந்து, எக்காலமும் துணையாய் இருப்பவள் அபிராமவல்லியாகிய பராசக்தி ஒருத்தியே என்பதை தெரிந்து கொண்டேன்!!அதனால் அவளே நிரந்தரமான துணையாம், நான் தொழக்கூடிய தெய்வமும் அவளே!!

என்னைப் பெற்ற தாயும் அவளேயாம்!! இப்பிறவி ஈறாக அத்தனை பிறவிகட்கும் தாயுண்டு!! இனி பிறக்கும் பிறவிகட்கும் தாய்களுண்டு!! ஆயின் எத்தனை பிறவி இருப்பினும், அத்தனை பிறவிகட்கும் உயிர்க்கு தாயாய் விளங்குபவள் பராசக்தியாகிய அபிராமவல்லி ஒருத்தியேயாம்!!

ப்ரம்மம் முதல் புழு வரையுள்ள அனைத்து ஜீவராசிகட்கும் தாயாராய் விளங்குபவள் பராசக்தி ஒருத்தியே!! அவளிடமிருந்தே ஸமஸ்த ப்ரபஞ்சங்களும் தோன்றியது!! மீள அவளிடமே ஒடுங்கவும் போகிறது!! ஆதலால் அன்னையெனும் சொல் குறிப்பதும் அவள் ஒருத்தியையேயாம்!!

ஆதலில் உயிர்க்கு துணையாகவும், தொழுந்தெய்மாயும், பெற்ற தாயாகவும் விளங்கும் அபிராமவல்லி, ச்ருதி எனப்படும் வேதங்களில் கூறப்பட்ட வேள்வி முதற்கொண்ட தொழில்களாகவும், அவ்வேதங்களின் கொழுந்தாகவும், வேதங்களின் வேராகவும் விளங்குகினறாள்!!

அபிராமவல்லியாகிய பராசக்தி, நான்மறைகளில் கூறப்பட்ட பொருள்களாகவும், அவ்வேதங்களின் உச்சியாகவும், மறைக்கூட்டங்களின் வேராகவும் விளங்குகின்றாள் என்பது கருத்து!! அபிராமவல்லியாகிய பராசக்தியே வேதங்களின் பொருளாகவும், வேதங்களின் அக்ஷரக்கூட்டங்களாகவும், வேதங்களால் சுட்டப்பட்ட ப்ரம்ம வடிவாகவும் விளங்குகின்றாள் என்பதேயாம்!!

பனி போல் குளிர்ந்த மலரம்புகளும், கரும்பாலான வில்லும் ஏந்தியிருப்பவள் அந்த அபிராமவல்லி!!

அதிமதுரசாப ஹஸ்தாம் அபரிமிதமோத பாண சௌபாக்யாம்!!”

மிகவும் தித்திப்பான வில்லை கையில் ஏந்தினவள்!! ஸௌபாக்யம் அளிக்கக்கூடிய பாணங்களையும் ஏந்தினவள்!!”

அவளே பாசம் அங்குசம் ஆகியவற்றை மேலிரு கரங்களில் ஏந்தினவள்!! அவளே அழகிய அங்கங்களை உடையவளும், “ராமா” “ரமணலம்படா” எனும்படி ரமணீயமானவளும், தர்சிப்போரின் மனதில் நீங்காது உறைபவளும், காமேச்வரனை தன்னை விட்டு அகலாதபடி வலதுபாகத்தில் கொண்டவளுமான பராசக்தி.

பூவாளியையும், கரும்புவில்லையும், மாவெட்டியையும், பாசத்தையும் நான்கு கைகளில் ஏந்தினவளுமான திரிபுரசுந்தரியாகிய லலிதாம்பிகையே அனைத்துமானவள் என அறிந்துகொண்டேன்!!

திரண்ட கருத்து :

நான்மறைகளின் பொருளாகவும், அவற்றின் முடியாகவும், வேர்களாகவும், வேதங்களால் கூறப்படும் ப்ரம்ம வடிவினளாகவும் விளங்குபவள் அபிராமி!! அந்த அபிராமியே நான்கு கரங்களில் பாசம், அங்குசம், கரும்புவில், புஷ்ப பாணங்கள் ஆகியவற்றைத் தாங்கிய மஹாத்ரிபுரஸுந்தரியாகிய லலிதாம்பிகை.

அவளே ராஜராஜேச்வரி!! அத்திரிபுரசுந்தரியாகிய அபிராமி ஒருத்தியே என் உயிர்க்குத் துணையானவள் என்றும், நான் தொழக்கூடிய தெய்வம் என்றும், என்னைப் பெற்ற தாய் என்றும் கண்டுகொண்டேன்!!

Previous Post

திருவுள்ளதைப் பூர்த்தி செய்கிறது.

Next Post

மாசி மக பெருவிழா

Next Post
மாசி மக பெருவிழா

மாசி மக பெருவிழா

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »