ஸ்ரீ தத்தாத்ரேயர் – 5 – தத்தாத்திரேய காட்சியின் தத்துவம்.
தத்தாத்திரேயர் தன்னுடன் வைத்துக் கொண்டு உள்ள சில பொருட்களின் சிறப்பை எப்படி எனக் கூறுவது?
கேட்ட அனைத்தையும் தந்தபடி உலகையும் தர்மத்தையும் காப்பதை குறிக்கும் விதத்தில் காமதேனுப் பசு.
ஆன்மீகத்தின் மூல நூல்களான நான்கு வேதங்களும் என் காலடில்தான் என்பதைக் குறிக்கும் விதத்தில் நான்கு நாய்கள்.
தான் என்ற அகந்தையை அழிப்பதைக் குறிக்கும் திரிசூலம்.
அறியாமையை அழித்து ஒருவனுடைய மனசாட்சியை தட்டி எழுப்புவதைக் குறிக்க கையில் குடுகுடுப்பை.
முக்காலத்தையும் கடந்து நிற்பவர். அனைத்து காலத்தையும் இயக்குபவர் மற்றும் ஆரம்பமும் முடிவும் அட்ட்றவர் என்பதைக் காட்டும் சுதர்சன சக்கரம்.
ஆத்மாவை, மனசாட்சியை தட்டி எழுப்ப சங்கு.
வைராக்யத்தையும் , பிறந்த எதற்கும் அழிவு நிச்சயம் என்பதைக் காட்டும் வீபுதி.
நமக்கு உள்ளத்தில் எதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் பிட்ஷைப் பாத்திரம்.
எப்போதுமே பகவானின் நாமத்தையே ஜெபித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க ஜெபமாலை.
இப்படிப்பட்ட ரூபங்களைக் கொண்டவர் யுகயுகமாக பல்வேறு ரூபங்களை எடுத்துக் கொண்டு அனைவரையும் ரட்சித்து வருகிறார். பூமியிலே என்றெல்லாம் அதர்மம் தோன்றுகிறதோ, தர்மம் உருக் குலைந்து போகத் துவங்குகிறதோ அப்போதெல்லாம் தெய்வீக அவதாரங்கள் தோன்றி உலகை காப்பாற்றுகின்றன.
இதைதான் கண்ணபிரான் அர்ஜுனனுக்கு உபதேசித்து இப்படியாகக் கூறினார்:-”யதாயதாஹி தர்மஸ்ய கிலானிர்பவதி பர்தா, அப்யுத்தானம் தர்மஸ்ய ததாத்மான் சுருஜான்மயஹம் பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனாத்யாய சம்பவாமி யுகே யுகே”. அதனால்தான் பூமியிலே துயரங்களை துடைத்து மனித மேம்பாடு நிலவ தத்தாத்ரேயர் என்ற உருவிலே மும்மூர்த்திகள் அவதரித்தனர்











