ஸ்ரீ நவபிருந்தாவனம் ( ஸ்ரீ பாதராஜமடம் ) சந்நியாசிமடம் ,பள்ளிபாளையம் ,
எத்தனையோ சித்தர்களும் மகான்களும் , யோகிகள் வாழ்ந்த புண்ணிய பூமி நம்பாரத பூமி . அந்தவகையில் அண்மை கண்ட அழகிய அமையான ஜீவசமாதியை உங்களுடன்பகிர்வதில் பெருமகிழ்வுருகிறேன் .
அமைவிடம் :
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து சேசாயி பேப்பர் மில் செல்லும் சாலையில்வசந்தநகர் என்ற இடத்தில் இருந்து காவிரிக்கரையின் கிழக்கு புறத்தில்கரைகாண முடியாத பல அற்புதங்கள் கொண்ட நவ பிருந்தாவனம் ஸ்ரீ பாதராஜ மடம்அமைந்துள்ளது .
இப்பகுதிமக்களால் சந்தியாசி மடம் என்றும் முளபாகல் மடம்என்றும் அழைக்கப்படுகிறது .
காலம் :
கி.பி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது அல்லது 300வருடங்களுக்கு முற்பட்டது என்பது ஆய்விற்குரியது .
ஸ்ரீபாதராஜர் :
ஸ்ரீ பாதராஜ மடத்தின் நிறுவனர் ஸ்ரீ பாதராஜர் ஆவார் ,இவர்கர்நாடக மாநிலம் அப்பூரை சேர்ந்தவர் , லட்சுமி நாராயணன் என்பது இவர் இயற்பெயராகும் .
சேஷகிரியாச்சார் கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்த இளம்வயதிலேயே தெய்வ அருட் குழந்தையாக வளர்ந்தார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முளுபாகல் என்ற இடத்தில் இவரின் மூல பிருந்தாவனம்அமைந்துள்ளது கி.பி 1486 ல் பிருந்தாவனஸ்தரானார் .
இவ்விடம் நரசிம்மதீர்தம் என அழைக்கப்படுகிறது . இந்த முளபாகல்மடம் தான் நாம் பார்க்கஉள்ள நவபிருந்தாவனத்தின் தலைமை இடமாக கருதப்படுகிறது
பாதராஜமடத்தின் 36 வது மடாதிபதியாக 1987 முதல் 23 ஆண்டுகாலம் நிர்வாகம் செய்தவர் ஸ்ரீவிக்ஞான நிதி தீர்த்தர் ஆவார் . இவர் பொறுப்பேற்ற பின்னரே நவபிருந்தாவனத்தில் அன்றாட பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்புற நடைபெறுகிறது.
ஸ்ரீ விக்ஞான தீர்த்த சுவாமிகள் 95வது வயதில் கர்நாடக மாநிலம்முளுபாகலில் உள்ள நரசிம்ம தீர்த்ததில் பிருந்தாவனஸ்தராகி (ஜீவசமாதி)விட்டார் . பள்ளிபாளையத்தில் நவபிருந்தாவனத்தில் அருள்பாலிக்கிற நவநாயகர்கள் :











