திருமுருகன் திருவடிகள் போற்றி!
ஸ்ரீமத் அருணகிரி நாதர் திருவடி போற்றி !
உண்மையான கடவுள் அனுபவம் :
நாம் அனைவரும் ஓரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும.நமது அருளாளர்கள்
அனைவரும் நமக்கு உணர்த்தும் கடவுள் அனுபவம் என்பது ஒன்று தான் ஆனால் நம் புரிதல்
தான் தவறு.
திருஞானசம்பந்தர் முதல் மாணிக்கவாசகர் வரையிலான அருளாளர்கள் அனைவரும்
சிவபெருமானை தான் கடவுள் என்று உணர்த்துகிறார்கள் என்றும்…
மகான் ஸ்ரீமத் அருணகிரிநாதர் முதல் பாம்பன் ஸ்வாமிகள் வரையிலான அருளாளர்கள்
முருகனை தான் கடவுளாக நமக்கு உணர்த்துகிறார் என்று நினைப்பது முதலில் தவறு.
அருளாளர்களை பொறுத்தவரை கடவுள் என்பது “அருட்பெரும்ஜோதி” யான பரம்பொருள் அது
ஒன்று தான் என்பதைநாம் தான் உணரால் இருக்கிறோம்.
அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் அப்போது நடைமுறையில் இருந்த கடவுள் வழிபடுகளை
மேற்கோள் காட்டி அதன் மூலமாகவே அவர்கள் நமக்கு உண்மையான கடவுள் அனுபவத்தை
உணர்த்துகிறார்கள்.
இதற்கு நாம் முதலில் நம் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் :
கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு நம் நாட்டை வட மாநிலத்தவர்கள் ஆட்சி செய்து
கொண்டிருந்தனர்.
அப்போது நம் நாட்டில் நம் கடவுள் வழிபாடுகள் மறைக்கபட்டு அவர்களின் “சமண”மதமும்
“பௌத்த” மதமும்பரவி இருந்தது. அவர்கள் புத்தரை கடவுளாக வைத்து இந்த மதங்களை
வளர்த்தனர்.
அந்த மதங்களை நேரிடையாக எதிர்க்க வந்த முதல் அருளாளர்தான் திருஞானசம்பந்தர்.
அதுமட்டுமன்றி அவர் அப்போது இருந்த வேதங்களையும் முழுமையாக எதிர்க்கிறார்.
இந்த மதங்கள் பரவுவதை தடுக்க ஒரு புதிய மதம் உருவாக்க வேண்டிய சூழ்நிலையில் தான்
“சைவ மதம்” தோன்றியது. இவரால் தோற்றுவிக்கபட்ட சைவ மதத்தை தான் திருஞானம்பந்தர்
முன்னெடுக்கிறார்.
இந்த சைவ மதத்தை வளர்க்க தான் அதோடு சிவலிங்கம் வழிபாடு இணைக்கப்பட்டது ஆனால்
பிற்காலத்தில் சிவன் வழிபாடு மட்டுமே தான் சைவ மதம் என்று மாறிவிட்டது.
இந்த சிவலிங்க வழிபாடும் சிவன் உருவமும் வட மாநிலத்தை சேர்ந்த லௌலீசரால் கிபி 2 ம்
நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டது.
இந்த கால கட்டத்தில் தான் சிவன் கோவில் அதிகமாக உருவாக்கப்பட்டன. அதன் பிறகு வந்த
மாணிக்கவாசகர், சுந்தரர் முதலான அருளாளர்களும் சிவன்கோவில்களில் சென்று பதிகங்கள்
பாடினாலும் அவர்கள் “சிவன் “என்ற குறிப்பிடுவது அருட்பெரும் ஜோதி யான கடவுளை தான்.
அடுத்த காலகட்டத்தில் வந்த மக்கள் நம் அருளாளர்களின் உண்மையான கடவுள் அனுபத்தை உணராமல், புராணங்களை மட்டும் நம்பி உண்மையான கடவுள் வழிபாட்டை மறந்தனர்.
இவ்வாறாக நம் உண்மையான கடவுள் வழிபாட்டையும் மறந்து இருந்த கால கட்டத்தில் தான் கோவில் வழிபாடுகள் அணைத்தும் வியாபாரமாக மாறியது.
அதே சமயம் நாட்டில் பாலியல் இச்சைகள் பெருகியதால் அதன் காரணமாக மக்கள் பெருபாலோர் தொழு நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
அப்போது நம் நாட்டை நல்வழிப்படுத்தவும் நாம் மறந்த பழைமையான நம் கடவுள் வழிபாடும் அருளாளர்கள் சொன்ன அருட்பெரும் ஜோதியான “சிவபரம்பொருள்” என்பதும் ஒன்றுதான் என்ற உண்மையை நமக்கு உணர்த்திய மிக பெரும் ஆளுமை தான் 14 ம் நூற்றாண்டில் வந்த மகான் ஸ்ரீமத் “அருணகிரிநாதர் “.
அப்போது அவர் பாடிய திருப்புகழில் கூட பாலியல் சம்பந்தமாக விஷயங்களை கடுமையாக சாடியிருப்பார். ஆனால் பிற்காலத்தில் புராணங்களில் அவரின் உன்னதமான வாழ்க்கை வரலாறையே தவறாக சித்தரித்து கொச்சை படுத்தி விட்டார்கள் கயவர்கள்.
அதே சமயம் அவர் பரம்பொருள் ஒன்றே என்றும் அது “முருகன்” தான் என்றும் உணர்த்தும் வகையில் தான் அவர் சிவன் கோவில்களுக்கு சென்றாலும் அங்கு சிவனை பாடாமல் சிவலிங்கத்திற்கு பின்னால் உள்ள முருகப்பெருமானை மட்டுமே பாடினார்.
ஸ்வாமிகளுக்கு பிறகு வந்த அருளாளர்கள் அனைவரும் அதை இந்த உண்மை கூற்றை அப்படியே ஏற்று முருகப்பெருமானை முன்னெடுக்கிறார்கள்.
இதில் பாம்பன் ஸ்வாமிகள் தன் கடும் தவத்தின் மூலமாக பழநி முருகன் அருள் பெற்று நம் அருளாளர்கள், சித்தர்கள், முனிவர்கள், நாயன்மார்கள். என்று அனைவரின் தத்துவங்களையும் மிக தெளிவுவாக உணர்ந்து உண்மையான கடவுள் அனுபவத்தை “தகராலய ரகசியம்” மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
“தகராலய ரகசியம் “ஒரு சிறு விளக்கம் :
இதில் பேதம் அபேதம் என்று இரண்டு விளக்கங்களை ஸ்வாமிகள் தருகிறார்.
அபேதம் என்பது குகபரம்பொருள் என்றும் பேதம் என்பது அதன் தத்துவங்களாகவும் குறிப்பிடுகிறார்
பேதம் மூன்று :
“உருவம்”
“அருவம்”
“அருவுருவம்”
இந்த மூன்றுதான் சிவ லிங்க வழிபாடு இந்த மூன்றையும் 9 தடத்த இலக்கணமாக பிரிக்கிறார் அவை:
“அருவத்திருமேனி” என்பது நான்கு அது
சிவம்,சக்தி, நாதம், விந்து.
“உருவ திருமேனி” என்பது நான்கு அது
மகேசன், ருத்ரன், மால். அயன்.
“அருவுருவம் திருமேனி” ஒன்று அது
சதாசிவம்.
இதில் பேதங்களுக்கு மேலான ஒரு பரம்பொருள் “அபேதம் “என்றும் அந்த குகபரம்பொருள் தான் ஆறுமுகனும், சிவனும் சேர்ந்த “ஆறுமுகசிவன்” என்ற முருகப்பெருமான் என்றும் மிக தெளிவாக ஸ்வாமிகள் குறிப்பிடுகிறார்.
இதன் மூலம் உணரப்படுவது என்னவென்றால் நம் ஆதி கால கடவுள் வழிபாடும். நம் அருளாளர்கள் சொன்ன அருட்பெரும் ஜோதி யான கடவுள் வழிபாடும் ஒன்று தான் அது குஹ பரம்பொருளான முருகப்பெருமான் தான்.
அருணகிரி நாதர் தொடங்கி பாம்பன் ஸ்வாமிகள் வரை பரம்பொருள் அணுபவத்தை தெளிவாக விளக்கிய போதும் சிவன் தான் பரம்பொருள் என்றும் அதற்கு மேல் தெய்வமே இல்லை என்றும் கூறுவது முற்றிலும் அறியாமையே.
திருஞான சம்பந்தரில் ஆரம்பித்த அருளாளர்கள் வரலாறு பாம்பன் ஸ்வாமிகளில் முடிகிறது எனவே பாம்பன் ஸ்வாமிகள் நூல்களை அறியாமல் நம்மால் நிச்சயம் உண்மையான கடவுள் அனுபவத்தை உணர வாய்ப்பே இல்லை.
பாம்பன் ஸ்வாமிகள் அவரின் தகராலய ரகசியம் என்னும் நூலில் திருவள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலான அணைத்து அருளாளர்களின் நூல்களையும் அதன் உண்மையான பொருள் விளக்கத்தையும் மிக தெளிவாக விளக்குகிறார்.
எனவே பாம்பன் ஸ்வாமிகளின் நூல்களை தெளிவாக அறிந்தால் புராணங்கள் மற்றும் வேதங்கள் கூறும் கடவுள்கள் அணைத்தும் குஹபரம் பொருளான முருகனுக்குள் அடங்கும் என்றும் அவை எல்லாம் கடவுள் வரலாறு அல்ல மாறாக அனைத்தும் முருகனின் தடத்த இலக்கணங்கள் என்பதும் மிக தெளிவாக புரியும்.
இந்த ஈரேழு உலகத்திற்கும் ஓரே கடவுள் தான் என்ற இந்த உன்மையை நாம் உணராமல் எவ்வளவு வழிபாடுகள் செய்தாலும் உண்மையான கடவுள் அனுபவத்தை அடைய முடியாது.
எனவே நம் எல்லா அருளாளர்களையும் பேதம் இல்லாமல் உணர்ந்து அவர்கள் நமக்கு உணர்த்தும் பரம்பொருள் ஒன்று தான் என்பதையும் அறிந்து வழிபட்டு அந்த பரம்பொருள் பேரருள் பெறுவோம்.
ஓம் சரவண பவ !










