ஸ்வாமி சங்கிலி பூதத்தார் குறித்த ஆதாரங்களும் அதிசயங்களும் :
1) திருக்குறுங்குடி கோவிலில் பூதத்தாரால் சிதைக்கப்பட்ட கோவில் கோட்டை மதில் சுவரின் ஏழு வரிசைக் கற்களை கோவில் நிர்வாகத்தினர் பல்வேறு காலகட்டங்களில் சீரமைக்க முயற்சித்தும் இன்று வரை அது முடியாமலேயே இருக்கிறது.
2) களக்காடு திருக்குறுங்குடி மலைநம்பி கோவில் சங்கிலி பூதத்தார் ஆலய திருவிழாவின் போது பூதத்தார் கோமரத்தாடிகள் ஸ்வாமி சங்கிலி பூதத்தாரால் நம்பியாற்றில் உருவாக்கப்பட்ட ஆழம் அறிய முடியாத கசத்தில் இறங்கி சங்கிலி எடுத்து வருவார்கள்
இது போன்ற கசம் சொரிமுத்தைய்யன் கோவிலில் உள்ள காரையாற்றிலும் உள்ளது.
3) சுத்த சைவ வீரரான பூதத்தாருக்கு பிரியமான நைவேத்தியங்கள் என்னவென்றால்
எலுமிச்சை மாலை ; வடைமாலை சாற்றுதல் பிரியமானது ஆகும்.
குலைவாழை ; பானகம் ; வார்ப்பு பாயாசம் ; உளுந்துவடை ; அதிரசம் ; கொழுக்கட்டை ; எள்சாதம் ; தயிர்சாதம் ; கதம்பசாதம் ; சர்க்கரைப்பொங்கல் ; மற்றும் மாவிளக்கு ( பச்சரிசியை ஊற வைத்து கையால் இடித்து மாவாக்கி சலித்து எடுத்து வெல்லம் நெய் கலந்து உருண்டை பிடித்து அதன் நடுவில் குழி தோண்டி திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் )
படைத்தல் ஆகும். காய்கறிகள் மற்றும் பழவகைகள் படைக்க்பட்ட படையல் நம்பெருமானுக்கு மிகவும் விசேஷமானது ஆகும்.
4) ஸ்வாமி சங்கிலி பூதத்தார் சுத்த சைவராக இருந்தாலும் அவர் அருள்பாலிக்கும் திருத்தலங்களில் மற்ற தெய்வங்களுக்கு நடக்கும் உயிர் பலிகள் மற்றும் அசைவ படையலை அவர் கண்டு கொள்வதில்லை.
மேலும் அவரின் பக்தர்கள் அசைவம் உண்பதை அவர் தடுப்பதும் இல்லை.அவரது பக்தர்களும் அவரின் கொடைவிழா நடக்கும் போது அசைவம் தவிர்த்து ஒரு மண்டலம் கையில் கங்கணம் கட்டி தீவிர விரதம் இருந்து பூக்குழி இறங்குகின்றனர்.
5) வள்ளியூர் முருகன் கோவில்
திருச்செந்தூர் முருகன் கோவில்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
பண்பொழி திருமலை முருகன் கோவில் போன்ற திருத்தலங்களிலும்
திருநெல்வேலி ; தூத்துக்குடி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா ஆலயங்களிலும் பூதத்தார் கருவறை நிறைந்து அருள்பாலிக்கிறார்.
அனைத்து இடங்களுக்கும் பூதத்தார் எப்படி சென்றார் என்பது குறித்த அனைத்து ஆதாரங்களும் திருத்தமாகவும் தெளிவாகவும் உள்ளது.
மேலும் பூதப்பாண்டி ; பூதத்தான் குடியிருப்பு போன்ற ஊர்களும் பூதத்தார் பெயரில் அமைந்துள்ளது.
இதில் பூதத்தான் குடியிருப்பு திருத்தலத்தில் நம்பெருமான் பூதத்தார் மனைவி மற்றும் மகனுடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்
நம்பெருமானுக்கு
” ஆழிபூதம் ” என்ற திருநாமமும்
பெருமாட்டிக்கு
” ஆழி பப்பரத்தி ” என்ற திருநாமமும் உண்டு.
சொரிமுத்தைய்யனார் கோவிலில் பூதத்தாரை ஆதாரமாக வைத்து கட்டப்பட்ட அனைத்து கோவில் திருவிழாக்களுக்கும் சொரிமுத்தைய்யன் கோவிலில் இருந்தே சங்கிலி மற்றும் தீர்த்தகுடம் எடுத்து செல்லப்படுகிறது.
6) பூதத்தார் அருள்பாலிக்கும் அனைத்து திருத்தலங்களிலும் அவரது பீடத்திற்கு கீழ்
” இரும்பு சங்கிலி ” வைக்கப்பட்டு இருக்கும்.
அவரது பக்தர்கள் அருள் வந்து அந்த சங்கிலியால் மார்பில் ஓங்கி அடித்து கொண்டாலும் வலிப்பதும் இல்லை
அந்த இடம் ஆனது கண்ணிப்போவதோ காயங்கள் ஆவதும் இல்லை.
7) சொரிமுத்தைய்யன் கோவில் செல்லும் தற்போதைய வழியான பாபநாசம் வழியே மலைப்பாதை போடப்படுவதற்கு முன்
அனைத்து ஊர் மக்களும் சிங்கம்பட்டி ஜமீனால் காட்டுப்பகுதிக்குள் அமைக்கப்பட்ட காட்டுவழி வழியாகத்தான் சென்று வந்தனர்.
இப்போதும் சிங்கம்பட்டி மற்றும் அக்கம்பக்கத்து கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரின் அனுமதியோடு இந்த வழியை பயன்படுத்தி சொரிமுத்தைய்யன் கோவில் சென்று வழிபட்டு வருகின்றனர்.
நம்பெருமான் பூதத்தார் பொதிகை மலைக்கு வந்த காட்டுப்பாதை வழியாகவே வருடா வருடம் ஆடிஅமாவாசை தோறும் நடைபயணமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கிராமத்தில் இருந்து சொரிமுத்தைய்யன் கோவிலுக்கு சாமி கொண்டாடிகளால்
” வல்லயம் ” ( வெண்கல மணிகள் பிணைக்கப்பட்டு பூண் இடப்பட்ட குத்தீட்டி அல்லது வேல்கம்பு ) கொண்டு வரப்படுகிறது.
அப்படி வரும் வேளையில் இன்று வரை எவர் கண்களிலும் எந்தவொரு மிருகமும் தென்பட்டதில்லை.
8)சிங்கம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கிலிபூதத்தார் கோவிலில் பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் ” மாசி மாத சிவராத்திரி ” மூன்று நாள் விழாவாக வருடா வருடம் சிறப்பாக நடந்து வரும் மாசி மாத மஹாசிவராத்திரி திருவிழாவிற்காக இந்த காட்டு வழியாகத்தான் சங்கிலி எடுத்து வரப்படுகிறது.
கடந்த 2010ம் ஆண்டு அவ்வாறு சங்கிலி எடுக்கச் சென்ற ” 90 வயது முதிர்ந்த சாமி கொண்டாடி ” இரவு வெகு நேரம் ஆகியும் ஊர் திரும்பாததால் காட்டினுள் சென்று தேடிப் பார்க்கலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் முடிவெடுத்து புறப்பட முயன்ற போது காட்டில் வழி தெரியாமல் தவித்த அந்த பெரியவரை ஆடு ஒன்று கோவிலுக்கு வழி காட்டி அழைத்து வந்தது.
திருவிழா முடியும் வரை கோவிலில் அமைந்துள்ள சங்கிலி பூதத்தாரின் பிரம்மாண்ட பீடத்தின் அருகே இருந்த அந்த ஆடு பின்னர் யார் கண்ணிலும் படாமல் மறைந்து போனது.
சங்கிலி பூதத்தாரே அந்த ஆடு வடிவத்தில் வந்து தங்கிச் சென்றதாக நெல்லை மாவட்ட அனைத்து தினசரி பத்திரிகை பதிப்புகளிலும் பரபரப்பான செய்தியாக அன்று வந்தது.
வேட்டையாடும் கொடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் ஆடு அலைவது என்பது ஆச்சரியம் கலந்த அதிசயம் ஆகும்.
9) ஸ்வாமி பூதத்தாரின் திவ்ய சரிதத்தின் படி
நம்பெருமான் திருக்கயிலையில் இருந்து கிளம்பி திருச்செந்தூர் வழியாக திருக்குறுங்குடி வரும் வரை அவரிடம் சங்கிலி கிடையாது.
குண்டாந்தடியைத்தான் ஆயுதமாக வைத்திருந்தார்.
மேலும் சைவச்சின்னமான திருநீறு தரித்திருந்தார்.
வைணவத் திருத்தலம் ஆன திருக்குறுங்குடி நம்பி கோவில் வந்த பூதத்தார் நம்பியாற்றின் பாறையில் தனது சங்கிலியால் ஓங்கி அடித்து கசம் ஒன்று உருவாக்கி புனித நீராடி வைணவச் சின்னமான திருநாமம் சாற்றிக் கொண்டார்.
பின் திருக்குறுங்குடியில் இருந்து காரையார் சொரிமுத்தைய்யன் கோவில் வந்த நம்பெருமான் மேல வாசலிலும்
கீழ வாசலிலும் மற்றும் அதை ஆதாரமாக கொண்ட மற்ற திருத்தலங்களிலும் திருநாமம் தரித்தே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஸர்வம் ஸிவார்ப்பணம்











