அவர்களும் அந்நாளில் வந்தபோது , சுவாமிகள் மூன்று கோட்டை சுண்ணாம்பைக் கொண்டுசெல்லும்படிக் கூறி உள்ளனர்.
அவர்களோ …..
” சுவாமி ! தாங்கள் கோபுரம் கட்ட நூறு கோட்டை சுண்ணாம்பு அல்லவா தருவதாகக்
கூறினீர்கள் ? நாங்களும் அதை நம்பி அல்லவா வந்தோம் ” என வினவி உள்ளனர்.
சுவாமியும் தயங்காமல்
“அப்படியா கூறினேன் ? சரி நீங்கள் மற்றொரு நாளில் வாருங்கள்”
எனக் கூறி ,தானே தனி ஆளாய் சுண்ணாம்புக் காளவாய் அமைத்து , நூறு கோட்டை
சுண்ணாம்பையும் கோவில் கோபுர பணிக்குக் கொடுத்து இருக்கிறார்கள்.
நாளும் இறை பணியிலும் , இறை நினைவிலும் காலம் கழித்த சுவாமிகளிடம் , அவரது
மனைவி வந்து ” நாளும் இறை நினைவிலேயே இருந்தால், நம் உணவிற்கு என்ன வழி ? இன்று சமைக்கக் கூட ஒன்றும் இல்லை ”
எனக் கூறி வருந்தி உள்ளார்.
சுவாமியோ
” அடடா நீ என்ன இப்படி கூறுகிறாய் ? சமையல் அறை சென்று பார் , சமயல் முடிந்து பதார்த்தங்கள் எல்லாம் தயாராக இருக்கின்றனவே ”
எனக் கூறியுள்ளார்கள்.
அவர் மனைவியும் சமையல் அறைக்குள் சென்றுப் பார்த்தால் , அப்போதுதான் சமைத்து இறக்கியதுப் போலே உணவு வகைகள் எல்லாம் சுட சுட இருந்துள்ளன. தன் தவறை உணர்ந்து அவர் சுவாமியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இன்றளவும் தன்னை நம்பி வருவோரின் துயர் தீர பல வழிகளிலும் அருள் புரிகின்றார்கள் ” என பக்தியோடுக் கூறினார்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180.











