“கொரோனா வைரஸ்” – சீக்கிரமே குணமடைய வேண்டுவோம்..!!
“கொரோனா வைரஸ்” என்ற கொடிய நோய் சமீபகாலமாக உலகம் முழுவதும் வேகமாக பரவிவருதால், உலகில் மக்கள் எல்லோரும் தங்களின் தினசரிவாழ்க்கையில் தடுமாறிக்கொண்டு இருக்கின்றனர்…!
அவரவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையே எப்படி நடக்கும் என்று பயப்படுகின்றனர்..!!
உலகில் அனைத்து நாடுகளும் பயணத்தைத் கண்டிப்பாக தவிர்க்கச் சொல்கின்றனர்..!!
நாமும் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு நமது அனைத்து பயனத்தையும் சிறிது நாட்களுக்கு தவிர்த்து அவரவர்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு அன்றாட வேலைகளைச் செய்து கொள்வோம்..!
கண்ணீர் அஞ்சலியும் – மௌன அஞ்சலியும்
இந்த கொடிய நோயால் உலகில் பலவேறு நாட்டில் இறந்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்களை தெரிவிப்போம்…!!
சீக்கிரமே குணமடைய வேண்டுவோம்..!!
பாதிக்கப்பட்ட வர்களுக்காகவும் வருத்தங்களை தெரிவிப்போம்..!!
அவர்களும் சீக்கிரமே குணமடைய வேண்டுவோம்..!!
இதற்கு விரைவில் யாராவது ஒருவர் சரியான மருந்தைக் கண்டுபிடித்து உடனடியாக நல்லது நடக்க வேண்டும் என்றும், உலகெங்கும் இருக்கும் மக்களுக்கு இனிமேல்,
இது போல் எந்த பாதிப்பும் நிகழாமல் நன்றாக இருக்ககேண்டும் என்றும், விரைவில்
இயல்புநிலை திரும்பவேண்டும் என்றும், உலகம் விரைவில் அமைதி பெறவேண்டும் என்றும்,
நம் வாழ்க்கையில் நமக்கு எதிரி என்று யாரையும் கருதாமல், எதிரி நாடு என்று
எந்த நாட்டையும் நினைக்காமல், யாருக்கும் இது போன்ற ஒரு நிலை இனி வராமலும், எந்த நாட்டிற்கும் இதுபோன்ற ஒரு நிலை வராமலும் இருக்கவேண்டும்
என்று இறைவனை பிராத்தப்போம்…! எல்லோரையும் நேசிப்போம்..!
நாம், நமது குடும்பம் உற்றார் உறவினர்கள் சொந்தபந்தங்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், அறிந்தவர்கள் அறியாதவர்கள், வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் , சாதி இன மத மொழி நம்நாடு என்று பார்க்காமல்,
நாம் அனைவரும் சமம், அனைத்து உயிர்களும் சமம் என்ற உயர்வான சிந்தனையோடு
உண்மையான அன்புகொண்டு
இறைவனை, இயற்கையை மனம் உருகி வேண்டி
மனிதர்களைக் காப்போம்..!! மனிதநேயம் காப்போம்…!!
சிறிது நாட்களுக்கு யாருக்கும் கை கொடுக்காமல்
தோள் கொடுப்போம்..!! இனிமேல் யாருக்கும்
துயர் கொடுக்காமல் உயிர் காப்போம்..!!
கரம் குவிப்போம்..!











