• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

செவியுணர்ந்த சாமிகள் சித்தர்

siddharbhoomi by siddharbhoomi
July 3, 2026
in சித்தர்கள்
0
செவியுணர்ந்த சாமிகள் சித்தர்

செவியுணர்ந்த சாமிகள் சித்தர்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

செவியுணர்ந்த சாமிகள் சித்தர்

செவியுணர்ந்த சாமிகள் தஞ்சை மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்ட சாமிகளின் இயற்பெயர் நமச்சிவாயம். சிறுவயது

முதலே இறை பக்தியோடு திகழ்ந்தார். இறையாற்றல் மிகுந்திருந்த சாமிகள் எதையும் கேட்டு உணரக்கூடியவராக இருந்ததால்

சாமிகளுக்குச் ‘செவியுணர்ந்த சாமிகள்’ என்று பெயர் வந்ததாம்.

தவத்தில் இருந்த சாமிகளுக்கு வயலூர் முருகன் காட்சி கொடுத்து திருச்சிக்கு வருமாறு அழைத்தார்.அழைப்பை ஏற்று திருச்சி வந்த

சாமிகள் வயலூர் முருகனைத் தரிசித்துள்ளார்.தரிசனத்திற்குப் பின் வயலூரிலேயே தங்கிவிட்டார்.

செவியுணர்ந்த சாமிகள் வள்ளலாரது சுத்த சன்மார்க்க கொள்கைகளைச் சார்ந்து வந்த சீடர்களுள் ஒருவராக வாழ்ந்துள்ளார்.

செவியுணர்ந்த சாமிகள் சில மூலிகைகளைக் கொண்டு நோயுற்றோருக்கு மூலிகை வைத்தியங்கள் செய்து வந்தார்கள்.அத்துடன்

பல்வேறு மூலிகைகளைக் கொண்டு ரசவாதம் செய்து பொன் செய்து அதனை விற்று அப்பணத்தைக் கொண்டு அன்னதானங்கள்

செய்துள்ளார்கள்.

தன்னை வெளியுலகத்தில் வெளிப்படுத்திக் கொள்ளாத சித்தர் ஆவார். தான் சித்தி அடையும் போது கூட அதனை வெளியே

சொல்லாது தனது சீடரான சாது பரமசிவம் ஒருவருக்கு மட்டும் தெரிவித்து விட்டு சித்தியாகி உள்ளார்.

அதன் பிறகு அவரது அடியார்களுக்கு உணர்த்திய பிறகு அவர்கள் செவியுணர்ந்த சாமிகளுக்கு ஜீவ பீடம் அமைத்து வழிபட்டு

வருகின்றனர். செவியுணர்ந்த சாமிகள் வாழ்ந்த காலத்தில் வயல்வெளிகளுக்கு நடுவில் திடீரென ஜோதி வடிவில் காட்சி கிடைத்தது.

அருகில் சென்று பார்த்தபோது அவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதையுண்டு கிடந்தது.

அவ்விடத்தில் முன்பு சிவாலயம் ஒன்று இருந்துள்ளது. அந்நியர்கள் படையெடுப்பினால் சிவலிங்கமும், திருக்கோவிலும் அழிக்கப்பட்டு

சிவலிங்கம் மண்ணுக்குள் புதைந்தது. பதினெட்டு சித்தர்கள் வழிபட்டு வந்த சிவபெருமான் செவியுணர்ந்த சாமிகளுக்கு ஜோதி

வடிவில் காட்சி கொடுத்ததால் ஜோதி லிங்கேஸ்வரர் என்று பெயரிடப்பட்டு பிரதிஷ்டை செய்தார்.

தவத்திரு செவியுணர்ந்த சாமிகள் கிணறு தோண்டும் போது அக் கிணற்றில் பர்வத #வர்த்தினி அன்னையின் கற் சிலையின் பாதி

பாகம் மட்டும் கிணற்றுக்குள் கிடந்ததது.

அதனை கண்டெடுத்த சாமிகள் இன்னொரு பகுதியில் எங்கு உள்ளது என்று அறிய சாமிகள் தவத்தின் போது அன்னையிடம் கேட்க

சிலையின் மறுபாதி முள்ளிக் கரும்பூர் என்னும் ஊரிலுள்ள வயலில் கிடப்பதாக அன்னை இருந்த இடத்தை உணர்த்தினார்கள்.

செவியுணர்ந்த சாமிகள் கண்டெடுத்த இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்துச் சிலையைப் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

இங்குள்ள நந்தி சிலையும் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆற்று மணலில் கிடைத்த நந்தி இரண்டு முன்னிரு கால்களையும் உள் மடக்கி

தவம் கோலத்தில் இருந்த நிலையில் கிடைத்துள்ளது. அந்த நந்தியை சிலையைக் கண்டெடுத்த அன்பர் தனது வீட்டில் வைத்துக்

கொள்ள அன்றிலிருந்து அவ் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நலம் குன்றியது.

அதனைத் தொடர்ந்து அந்த நந்தி சிலையை எடுத்து வந்து இத் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். பதினெட்டு சித்தர்கள் வந்து

வழிபட்டதால் இந்த இடம் ‘சித்தத்தூர்‘ என்றும் ‘சித்தர் காடு’ என்றும் அழைக்கப்படுகிறது.

தம் தவப்பயனால் சாமிகளுக்குப் பரமன் ஜோதி வடிவில் காட்சி கொடுத்தும், பர்வத வர்த்தினி அன்னையும் தாம் புதையுண்டு

இருக்கும் இடத்தை உணர்த்தியும் கோவில் கொண்டு எழுந்தருளினர்.

தவத்திரு செவியுணர்ந்த சாமிகள் 40 வருடங்களுக்கு முன் 1975ம் ஆண்டு தை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜீவ முக்தி

அடைந்தார்கள்.

தவத்திரு செவியுணர்ந்த சாமிகளின் மற்றொரு சீடரது சமாதி பீடம் குருநாதரின் சமாதி பீடத்தின் இடதுபுறம் பக்கவாட்டில்

அமைக்கப் பட்டுள்ளன.

தவத்திரு செவியுணர்ந்த சாமிகளின் சீடரான சாது பரமசிவன் சாமிகளுக்கு இங்கு குருநாதரின் எதிரே மண்டபத்திற்குள் ஜீவபீடம்

அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவரது #குருபூஜை நடந்து வருகிறது. மாதந்தோறும் வரும் கார்த்திகை

நட்சத்திரத்திலும், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

திருச்சியில் இருந்து 8 தி.மீ தொலைவில் உள்ள வயலூர் செல்லும் வழியில் வயலூருக்கு முன்னால் அரை கிலோ மீட்டர் முன்னதாக

அமைந்துள்ளது.

அல்லது சோமரசம் பேட்டையிலிருந்து வயலூர் செல்லும் சாலையில் இடுகாட்டிற்கு எதிரில் சமாதிக் கோவில் அமைந்துள்ளது.

Previous Post

ஸ்ரீ அக்கா பரதேசி சுவாமிகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

செவியுணர்ந்த சாமிகள் சித்தர்

செவியுணர்ந்த சாமிகள் சித்தர்

July 3, 2026
ஸ்ரீ அக்கா பரதேசி சுவாமிகள்

ஸ்ரீ அக்கா பரதேசி சுவாமிகள்

July 2, 2026
விக்கிரம ஆண்டு

விக்கிரம ஆண்டு

July 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »