ஸ்ரீ அக்கா பரதேசி சுவாமிகள் (Sri Akka Paradesi Swamigal) புதுச்சேரியில் வாழ்ந்த ஒரு #மகான் ஆவார். அனைத்துப் பெண்களையும் சகோதரிகளாகக் கருதி “அக்கா” என்று அழைத்ததால், இப்பெயரால் அன்போடு அழைக்கப்பட்டார். இவரது #ஜீவசமாதி #புதுச்சேரி, முத்தியால்பேட்டை வாழைக்குளத்தில் அமைந்துள்ளது.
சிறுவயதில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, களிமண்ணால் #விநாயகர் சிலை செய்து பூஜித்து மகிழ்ந்தார். அவருடைய விநாயகரை ஒரு பெண்ணும் வழிபட்டுள்ளார்.
தன்னுடைய பிள்ளையாரை வணங்கும் அப்பெண்ணின் செயலைக் கண்டு மகிழ்ந்து அப்பெண்ணின் கைகளில் முத்தம் தந்தார். அப்பெண்ணோ ” அக்கா வயதுடைய பெண்ணிற்கு முத்தம் கொடுத்தல் தகுமோ ” எனக் கூறினாள்.
அதனை நினைத்துச் சிறுவனாக இருந்த அக்கா சாமியார் வருந்தினார். பின் பெண் இன்பத்திலிருந்து தன்னை விலக்கி அனைவரையும் அக்கா என அழைக்கலானார்.
இவர் அனைவரையும் அக்கா என அழைத்துவந்தமையால் அக்கா சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
பின்னர் சுவாமிகள் புதுவைக்கு வந்தார்.
சுவாமிகளுடன் கண்பார்வை பறிபோனவரும் புதுவைக்கு புறப்பட்டு வந்தார். ஒவ்வொரு நிமிடமும் தான் செய்த பெரும் பிழையை நினைத்து நினைத்து வருந்தினார். இப்படியே சில காலம் சென்றது. ஒரு நாள், சுவாமிகள் திடீரென்று “ அதோ தெரியும் திருமுருகனைப்பார்’’ என்று குருடரிடம் சொன்னார். “பார்வையில்லையே-எப்படிப்பார்ப்பது” என்றார் குருடர்.”
நன்றாகப் பார் தெரியும் ” எனச் சுவாமிகள் சொல்ல -அப்படியே முருகனின் உருவத்தை ஆழ்ந்து நோக்க கண் பார்வை வந்தது.
இவர் 1872 -ஆம் ஆண்டு ஜீன் மாதம் ஜீவ சமாதி அடைந்தார். ஜீவ சமாதிக் கோயிலில் அக்கா சுவாமிகளின் பிரதான சீடரான நாராயண சுவாமிகள் சன்னதியும் அமைந்துள்ளது. இவரது 110-ஆவது குருபூசை 2015 -ஆம் ஆண்டு நடந்தது. அந்நாளில் புதுச்சேரி முதல்வரான ரங்கசாமியும் கலந்து கொண்டார்.
#சுவாமிகள் தன் கையினால் செய்து பூஜித்து வந்த விநாயகர் #புதுவை, கந்தன் தியேட்டர் (வணிக வளாகம்) அருகில், 45 அடி ரோடு திருப்பத்தில் அமைந்துள்ளது. மிகவும்
சக்தி வாய்ந்த அந்த விநாயகரை “சாலை விநாயகர்” என்று அழைக்கிறார்கள். மண் பிள்ளையார் சிறுகச் சிறுக வளர்ந்து வருவதாக வயதான பெரியவர்கள் சொல்கிறார்கள்.










