செந்தில் ஆண்டவா போற்றி…!
ஷஷ்டியின் நாயகா போற்றி….!
சேவற்கொடி வேந்தே போற்றி…!
முருகா…!
உன் சேவடிகள் தேடி
அடியவர்கள் கூட்டம்
ஆடி வருகுதய்யா கந்தா…!
பக்தர்கள் கூட்டம்
பாடி வருகுதய்யா முருகா…!
அன்பர்கள் கூட்டம்
நாடி வருகுதய்யா குமரா…!
சிந்தை மயக்கும்
செந்திலைக்கான
கடல் அலையும்
துள்ளி வருகுதய்யா…!
கருணை புரிவாய் கருணாகரனே
ஓம் முருகா சரணம்…











