• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

‘நம் பிராப்தம் இதுதான்’

siddharbhoomi by siddharbhoomi
September 25, 2018
in ஆன்மிகம்
0
‘நம் பிராப்தம் இதுதான்’
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

‘நம் பிராப்தம் இதுதான்’

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகத்தை, இன்பத்தை, சந்தோஷத்தை, பொன்,

பொருளை, சொத்துகளை தேடி நாம் முயன்றுகொண்டே இருக்கிறோம். ஆனால் பூரண

சாஸ்வத இன்பமான மன அமைதி தரும் சந்தோஷத்தை தேடுவதில்லை.

நாடுவதில்லை. ஆணவம், அகங்காரம், போட்டி, பொறாமை போன்றவற்றால்

பீடிக்கப்பட்டு துன்பம் அடைகிறோம்.நாம் எவற்றால் துன்பம் அடைகிறோம்?

வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் துன்பம் அடைகிறோம்.

வேண்டியது நமக்கு கிடைக்காமல் வேறொருவனுக்கு கிடைக்கும்போது இன்னும் அதிக

மன உளைச்சல், துன்பம் அடைகிறோம்.

இப்படி எல்லாவற்றிலும் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் நமக்கு ஏற்படும் மன

உளைச்சல் பொருமலாக ஆரம்பித்து, பொறாமையாக உருவெடுத்து, குரோதமாக

வெடிக்கிறது. விளைவு உடல்நலம் பாதிப்பு. மனநலம் பாதிப்பு. இதனால் ஏற்படுவது

நாசம் மட்டுமே.

ஒப்பிட்டுப் பார்த்தல் என்பது எல்லோருடனும் நிகழ்வதில்லை. நமக்கு மிகவும் தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்கள், குடும்ப நண்பர்கள், உற்றார் உறவினர், ரத்த சொந்தங்கள் என நாம் அறிந்தவர்களோடு மட்டுமே இந்த ஒப்பிட்டு பார்த்தல் நிகழ்கிறது. ‘நான்’ எனும் ஆணவ அகங்கார மமதையே இதற்கு முக்கிய காரணம். அது மட்டுமின்றி, விடை தெரியாத சில கேள்விகளும் காரணமாக இருக்கிறது.

மனதை குழப்பும் கேள்விகள்
* தவறே செய்யாதவன் தண்டிக்கப்படுகிறான். தவறு செய்தவன் தண்டனையில் இருந்து தப்பிவிடுகிறான். தர்ம நியாயப்படி நடப்பவன் பல துன்பங்களுக்கு ஆளாகிறான். பாவம் செய்பவர்கள் சுகமாக இருக்கின்றனர். எந்த தீய பழக்கமும் இல்லாதவன் கொடிய நோய் தாக்கி மரணமடைகிறான். எல்லா தீய பழக்கங்கள் உள்ள ஒருவன் நிம்மதியாக சாகிறான். இது ஏன்?

* பணம் இருந்தும் அமைதி இல்லை. பணம் இல்லாதவன் நிம்மதியாக இருக்கிறான். பணக்காரன் சாப்பிட முடிவதில்லை. ஏழைக்கு சாப்பாடு இல்லை. ஒருவனுக்கு சொத்து ஏராளம். மற்றொருவன் ஒதுங்கக்கூட இடமில்லை. குழந்தை இல்லையே என ஏங்குவோர் ஒருபுறம். இந்தக் குழந்தைகள் ஏன் பிறந்தன என வாடுவோர் மறுபுறம். ஏன் இந்த வித்தியாசம்?

* இறைவனை தரிசிக்க செல்பவர்களும் சுப விசேஷங்களுக்கு செல்கிறவர்களும் விபத்துக்குள்ளாகி மரணமடைகின்றனர். இது ஏன்?

இத்தனை விஷயங்களுக்கும் நம் வினைப்பயனே காரணம். சுக துக்கங்கள் பூர்வ கர்மங்களின் விளைவுகளேயன்றி. இப்போது செய்யும் செயல்களால் அல்ல. கடந்துபோன பல்வேறு பிறவிகளின் பயன்களாலேயே ஒருவனுக்கு எல்லாம் கிடைக்கிறது. அதேபோல பற்பல பிறவிகளில் செய்த பாவ கர்மங்களால் ஊழ்வினை காரணமாக துன்பப்படுகிறான்.

ஆகையால், ‘அவனுக்கு இது கிடைக்கிறதே.. இவனுக்கு அது கிடைக்கிறதே’ என்று எண்ணி பொறாமை, பொருமல் அடையாமல் ‘நம் பிராப்தம் இதுதான்’ என்று நினைத்து பக்தி மார்க்கத்தில் மனதை திருப்புவதே சிறந்த உபாயம். ஆணவம், அகங்காரம், ‘நான் செய்தேன்’ என்ற ஆணவ பேச்சு ஆகியவற்றை விட்டுவிட்டு, ‘என் செயல் ஆவது ஏதுமில்லை’ என்று பகவானை சரணாகதி அடைந்தால் நம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உறுதி . அவர் காட்டிய வழியில் பக்தி செலுத்தி, மனப் பக்குவம் அடைந்து நல்வாழ்வு பெறுவோம்.

Previous Post

குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

Next Post

ஓம் முருகா ஓம் 

Next Post
ஓம் முருகா ஓம் 

ஓம் முருகா ஓம் 

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »