• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அஷ்டமங்கலம் – அட்டமங்கலம்

siddharbhoomi by siddharbhoomi
November 4, 2018
in ஆன்மிகம்
0
அஷ்டமங்கலம் – அட்டமங்கலம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அஷ்டமங்கலம் – அட்டமங்கலம் .

அன்புடையீர் ,வணக்கம் .

இப்பதிவிற்கு, ஆகம சித்திரங்கள் -என்னும் நூல் மிகவும் துணைபுரிந்தது.

அன்னாருக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இலங்கை [ஸ்ரீலங்கா ] ஆயிரம் ருபாய் நாணயம் ஒன்றை அன்பர் ஒருவர் அடியேனிடம்

காட்டினார்.2000-ஆம் ஆண்டு வெளிவந்த ,இலங்கை மத்திய வங்கியின் ஐம்பதாவது ஆண்டு

விழாவின் பொருட்டு வெளியிடப்பட்ட வெள்ளி நாணயம்.

[புழக்கத்தில் இல்லாதவகை Non circulating coin]

அதில் அந்தநாட்டின் அஷ்டமங்கலச் சின்னங்கள் ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்தன .

அஷ்டமங்கலம் என்றால் என்ன ?

அஷ்டமங்கலம் சின்னங்கள் இந்தியாவில் சுப காரியங்களின் போது பயன்படுத்தப் படுகின்றன

எட்டுவகையான மங்கலப் பொருள்கள் என்பது பொருளாகும் .

உத்தர காமிக ஆகமத்தில் ,[72] ஆவது படலமான கரண லக்ஷண முறையில்,

சிவப்பரம்பொருளின் அட்டமங்கலங்கள் குறிக்கப்பட்டுள்ளன .

அவை:
1) தர்பணம்[ கண்ணாடி ]
2)பூரணகும்பம்
3) ரிஷபம்
4)இரட்டைச்சாமரம்.
5). ஸ்ரீவத்சம்.
6)ஸ்வஸ்திகம்
7)சங்கு
8) தீபம் .

சனாதன தர்மத்தின் படி ,தேவிக்கு [உமாதேவி] வழக்கில் உள்ள அஷ்டமங்கலப்பொருள்கள்:
1)தாலி
,2)சக்தி ஆயுதம்,
3)பூரணக்கும்பம்,
4)கைவளையல்கள்,
5)தாமரை,
6)இரட்டை சாமரம்,
7)கண்ணாடி,
8)தீபம்.

சனாதன தர்மத்தின் படி ,கணபதிக்கு வழக்கில் உள்ள அஷ்டமங்கலப் பொருள்கள்:

1)சத்ரம்[குடை]
2)ரத்னக்கும்பம்
3)மூஷிகம்,
4)கார்முகம் [வில் ]
5)தந்தம்
6)அங்குசம்
7)கட்வாங்கம்.
8)பத்மம் [கமலம்]

தேவர்களுக்குரிய அஷ்டமங்கலப்பொருள்கள்:

1)தர்பணம்[ கண்ணாடி ]2)பூரணகும்பம். 3)அந்தந்த தேவர்களுக்குரிய வாகனம். 4)இரட்டைச்சாமரம் 5)ஸ்ரீவத்சம் .6)ஸ்வஸ்திகம் 7)சங்கு 8)தீபம் .

திருக்கோயில்களில் நடைபெறுகின்ற மகோற்சவத்தின் கொடியேற்றத்தின் போது கொடிச் சீலையில் அந்தந்தத் திருக்கோயிலின் தெய்வத்திற்குரிய அஷ்டமங்கலப்பொருள்கள் இடம்பெறும்.

அஷ்டமங்கலப்பொருள்களைத் தாங்கும் தேவ கன்னியர்கள்:

1)கண்ணாடியை ஏந்தும் ஊர்வசி.

2)பூரணக்கும்பத்தை ஏந்தும் மேனகை.

3)ரிஷபத்தை ஏந்தும் ரம்பா.

4)இரட்டைச் சாமரத்தை ஏந்தும் திலோத்தமா.

5)ஸ்ரீவத்சம் தாங்கும் சுமுகீ.

6)சுவஸ்திகத்தைத் தாங்கும் சுந்தரி.

7)சங்கை ஏந்தும் காமுகீ.

8)தீபத்தை ஏந்தும் காமவர்த்தனி.

” சங்க காலச் சமயம் புதிய ஒளி” என்னும் கட்டுரையில் தொல்பொருள் ஆய்வாளர் முனைவர் இரா.நாகசாமி அவர்கள் குறிப்பிடும் செய்தி:

”யானை பொறிக்கப்பட்டுள்ள சில பாண்டியர்கள் காசுகளில், யானையின்மேல் ஸ்வஸ்திகம், பூர்ணகலசம், ஸ்ரீவத்சம், மீன், சந்திரன், சங்கம் முதலிய அஷ்டமங்கலம் என்னும் சின்னங்கள் காணப்படுகின்றன.

இவை முற்றிலும் சமயச்சின்னங்களாம். இவை தவிர இன்னும் ஒரு சின்னமும் காணப்படுகின்றது. நிற்கின்ற யானையின் முன்னர் ஒரு திரிசூலம் காணப்படுகிறது. அதன் தண்டத்தில் ஒரு பெரிய மழுவாளும் உள்ளது. இடையில் ஒரு கொடியும் உள்ளது. திரிசூலமும் மழுவாளும் சிவபெருமானின் படைக்கலங்கள் என்பது யாவரும் அறிவோம்.

புறநானூறு சிவபெருமானை “ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங்கணிச்சி மணிமிடற்றோன்” என்றும் “சீற்றம் நிறைந்த கூற்றம்”என்றும், “ஒரே கணை கொண்டு முப்புரத்தை எரித்து அமரர்க்கு வெற்றி தந்த கறைமிடற்று அண்ணல், என்றும் கூறுகிறது. [புறம்–54-55].

சங்க இலக்கியங்களிலேயே மிகவும் தொன்மையானவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவை புறநனூற்றுப் பாடல்கள். அவற்றில் சிவபெருமான் புகழப்பட்டுள்ளது அறியத்தக்கது,”

என்னும் செய்தியின் மூலம் ஸ்வஸ்திகம், பூர்ணகலசம், ஸ்ரீவத்சம், மீன், சந்திரன், சங்கம் ,யானை[அங்குசம்],கொடி ஆகியன அஷ்டமங்கலச் சின்னங்களாக இருந்துள்ளன என்பது தெரிகிறது.

காரணாகமத்தின் படி ,அரசர்களுக்குரிய அஷ்டமங்கலச் சின்னங்கள:

1)பேரிகை.2)எருது,3)யானை,4)இரட்டைச் சாமரம்,5)சிங்கம்,6)குதிரை,.7)கொடி,8)குத்துவிளக்கு.

அஷ்டமங்கலம் சனாதன தர்மம் ,பௌத்தம் ,சமணம் ஆகியவற்றில் சிற்சில மாறுபாடுகளில் வழக்கில் உள்ளன .

திபெத்திய பௌத்தம் கீழ்க்கண்ட அஷ்டமங்கலச் சின்னங்களைப் பயன்படுத்துகிறது:

1)சங்கு,2)திருமறுஸ்ரீவத்ஸம்,)3)கயல்மீன் ஜோடி (கௌர மச்சம்) 4)கொடிதுவஜம்
5)தாமரை, 6)குடை, 7)குடம்கலசம்,8)தர்மசக்கரம்.

நேபாள பௌத்தம் கீழ்க்கண்ட அஷ்டமங்கலச் சின்னங்களைப் பயன்படுத்துகிறது.

1)ஸ்ரீவத்ஸம்,2)தாமரை,3)துவஜம்,4)தர்மசக்கரம் அல்லது சாமரம்,5)பொற்குடம்,6)தங்க மீன் ஜோடி,7)குடை,8)சங்கு.

சீன பௌத்தம் கீழ்க்கண்ட அஷ்டமங்கலச் சின்னங்களைப் பயன்படுத்துகிறது.

1)தர்மசக்கரம் 2)சங்கு,.

3)துவஜம்,.4)குடை,.

5)தாம்ரை,.6)பொற்குடம்,

7).தங்க மீன் ஜோடி,.8)ஸ்ரீவத்ஸம்.

சமண மதத்திலும் அஷ்டமங்கலச் சின்னங்கள் குறிப்பிடப்படுகின்றன:

1.ஸ்வஸ்திகம்,2.ஸ்ரீவத்ஸம்,3.நந்தவர்த்தம்,4.வர்ந்த மானகம் (உணவு பாத்திரம்),5.பத்திராசனம்,6.கலசம்,7.கண்ணாடி.8.மீன் ஜோடி.

மற்றுமொரு செய்தியைக் குறிப்பிடவேண்டும் .கேரளாவில் அஷ்டமங்கள பிரசன்னம் என்னும் சோதிடமுறை உள்ளது.

எட்டுவகையான மங்கலப் பொருள்களைக் கொண்டு பார்க்கப்படும் இச்சோதிடம் தேவகாரியங்களுக்கும் பயன்படுகிறது .

அஷ்டமங்கலம் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம் என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்.

புகைப்படங்கள்:

1-சிவப்பரம்பொருளின் அட்டமங்கலங்கள் .

2-தேவிக்கு [உமாதேவி] வழக்கில் உள்ள அஷ்டமங்கலப்பொருள்கள்.

3-கணபதிக்கு வழக்கில் உள்ள அஷ்டமங்கலப்பொருள்கள் .

4,5-அஷ்டமங்கலப்பொருள்களைத் தாங்கும் தேவ கன்னியர்கள்.

6-அரசர்களுக்குரிய அஷ்டமங்கலச் சின்னங்கள்.

7,8,-கொடிச் சீலையில் அந்தந்தத் திருக்கோயிலின் தெய்வத்திற்குரிய அஷ்டமங்கலப்பொருள்கள் இடம்பெறும்.

9-அஷ்டமங்கலச் சின்னங்கள் அச்சிடப்பட்ட இலங்கை நாணயம் .[ பௌத்தம் ]

10,11-அஷ்டமங்கலச் சின்னங்கள் அச்சிடப்பட்ட பூட்டான் நாணயங்கள் .[ பௌத்தம் ].

12,13-பல்வேறுவகை அஷ்டமங்கலங்களைக் காட்டும் படங்கள் ,ஓவியங்கள்

14-கேரளாவில் அஷ்டமங்கல பிரசன்னம் என்னும் சோதிடமுறை.

 

Previous Post

நெல்லையில் பதினாறு ஷோடச விநாயகர்

Next Post

சபரிமலை ஐயப்பன் 18 – பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம்  உண்டு.

Next Post
சபரிமலை ஐயப்பன் 18 – பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம்  உண்டு.

சபரிமலை ஐயப்பன் 18 - பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம்  உண்டு.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »