வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள
காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர் காரகன்” என்கிறோம்.
சந்திரனை “மாதுர் காரகன்” என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா
மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.
சூரியன் – சந்திரன்
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர்.
சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த
அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.
இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய்
இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.
ஆடி அம்மாவாசை விரதம் என்றால் என்ன….அம்மாவாசை என்பது சூரியனும்
சந்திரனும் ஒன்றாக இணையும் காலம் எனப்படும்..மாதுர்காரனாகிய சந்திரனும்
பிதுர்காரனகிய சூரியனும் இந்து கலாச்சாரத்தில் வணங்ககூடியவர்கள்..
சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள்..சூரியன் என்றால் தந்தை
மற்றும் தந்தை வழி உறவினர்கள்..இவர்கள் இருவரும் இணையும் அம்மாவாசை
தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற ,
தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த
தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.அதனால் தான்
அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற
கடைபிடிக்கப்படுகிறது..
அம்மாவாசை அன்று மட்டும் அல்ல , தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம்
உண்ணுதல் வேண்டும்..அம்மாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது
மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்..
திருமணத்தடை , குழந்தை பிறப்பு தாமதம் , வறுமை , நீடித்த நோய் தொல்லை
போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை
செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்..நமது முன்ஜென்ம பாவங்கள்
அனைத்தும் ஆடி அம்மாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும் என்பது நம்பிக்கை
இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு , நேரத்திற்கு உண்பது போன்றவை நமது
முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அம்மாவசை போன்ற
காலங்களில் வணங்குவது சாலசிறந்தது..
இயற்கையாக முறையில் இறக்காமல் துர் மரணம் மூலமாக இறந்து ஆன்மா
சாந்தியடையாமல் இருக்கும் ஆன்மாக்களை சரியான பித்ருபூஜைகள் மூலம் சாந்தம்
கொண்டு அந்த வம்சத்திற்கு ஆசிகள் வழங்கும் என்பதால் அன்றைய தினத்தில்
பித்ருபூஜை செய்வது சாலசிறந்தது
பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல..காய்கறிகள் தானமாக
தரவேண்டும் , குறிப்பாக பூசணிக்காய்..ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக
பண்டைய நூல்கள் கூறுகின்றன.
பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க
வேண்டும்..அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள்
மனதார வாழ்த்துவார்கள்..முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி
அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
முன்னோரை கஷ்டப்படுத்தினால் இறைவன் கூட நம்மை கண்டுகொள்ள
மாட்டார்..எனவே சிரமம் பார்க்காமல் ஆடி அம்மாவசை அன்று மறக்காமல்
முன்னோருக்கு உங்களால் முடிந்த எளிய தர்ப்பணம் செய்து அவர்கள் அருளை
பெறுங்கள்..
அதன் மூலம் தடைப்பட்ட பல காரியங்கள் எளிதாக முடிவதை காணலாம்..
ராமேஸ்வரம் , பவானி , திருச்செந்தூர் திருவையாறு போன்ற நீர் நிலைக்கு சென்று
பித்ருதர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்ற முதியோருக்கு உணவிட்டு
ஏதேனும் காணிக்கை தந்து அவர்களை மகிழ்ச்சியாய் நம்மை வாயார மனதார
வாழ்த்தினால் போதும்..











