• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆவணி மாத ராசி பலன் (18-08-2019 to 17-09-2019)

siddharbhoomi by siddharbhoomi
August 19, 2019
in தமிழ் மாத ராசி பலன்கள்
0
ஆவணி மாத ராசி பலன் (18-08-2019 to 17-09-2019)
9
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆவணி மாத ராசி பலன் (18-08-2019 to 17-09-2019) Aavani Month Rasi Palan

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)

பெண்களால் உதவி

உங்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் சரியான காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். உடலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

தொலைதூர பயன்களால் நல்ல ஆதாயங்கள் இருக்கும். உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படும். உறவினர்களளோடு அனுசரித்து நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகிஸ்தர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும்.

புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு சற்றுக்கு தாமதத்திற்கு பின்பு வெற்றி கிட்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். கடன்கள் அனைத்தையும் முழுவதுமாக அடைத்து முடிப்பீர்கள். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

ரிஷபம் : (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)

சுபநிகழ்ச்சி நடக்கும்.

புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசைய சொத்துக்களை வாங்கும் திட்டத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். மற்றவர்களிடத்தில் பேசும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு கடன் கொடுத்த தொகையை சற்று இழுபறியாக இருந்து பிறகு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.

உங்கள் தொழில், வியாபாரங்களை பெரிய அளவு லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டங்கள் ஏற்படாது. வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற கூடுதலான முயற்சிகளை எடுக்க வேண்டியது இருக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சிகள் சற்று காலதாமதமாகும். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும்.

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

முயற்சியில் வெற்றி.

உடல்நலத்தில் சிறிது குறைபாடு இருந்தாலும் உங்கள் மனம் மட்டும் உடல் உற்சாகத்துடன் இருக்கும். பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன்கள் சற்று தாமதமானாலும் வட்டியுடன் வந்து சேரும்.

உறவினர்களுடன் சற்று விட்டுக்கொடுத்து செல்வது அனைவருக்கும் நன்மையை தரும்.ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். பிறரிடம் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை அவசியம்.

பணியிடங்களில் சக பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள். தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் சற்று கூடுதலான உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும்.

திருமண வயது கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த முறையில் திருமணங்கள் நடக்கும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். வாகனங்கள், இயந்திரங்கள் இயக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். வீணான செலவுகளை தவிர்த்து சேமிப்பை உயர்த்துவது நல்லது.

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

சுக்கிரனால் யோகம்.

தனி நபர் மற்றும் குடும்ப பொருளாதார நிலை உயரும்.குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்கும் நிலை உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணியிடங்களில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வதால் நன்மைகள் உண்டாகும். கூடுதலான உழைப்பை தர வேண்டியிருப்பதால் உடல் மற்றும் மனதில் அசதி உண்டாகும்.

வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வரப்பெறும். திருமண வயதுள்ள பெண்களுக்கு சிறந்த வரன்கள் அமைய பெறும். வேலை தேடுபவர்கள் வேலை கிடைக்க பெறுவார்கள்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொருள், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க கூடிய சூழல் உருவாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)

அரசின் சலுகை.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடலில் அவ்வப்போது நோய்கள் ஏற்பட்டு நீங்கியவாறு இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சராசரியான லாபங்களை பெறுவார்கள்.

குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறிது பிரச்சனை இருக்கும் என்றாலும், திடீர் பணவரவு மூலம் அதை சமாளிக்கலாம். பெற்றோர்கள் வழியில் சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.

சிலருக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும்.

பெண்களுக்கு அடிக்கடி சிறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று தாமதித்து அம்முயற்சிகளை தொடங்குவது நல்லது. புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.

கன்னி :

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி உங்களுக்கு அனைத்திலும் நன்மைகள் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்லும் யோகம் ஏற்படும்.

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பும் உருவாகும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமையும். பணியிடங்களில் உயரதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது.

விவசாய தொழில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உண்டாகும். விரும்பிய பதவி உயர்வு, பணியிட மாற்றங்கள் போன்றவை கிடைக்கப்பெறும்.

துலாம் :

உடல் நிலை நன்றாக இருக்கும். பொருள் வரவில் எந்த ஒரு பாதிப்புகளும் இருக்காது. ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வழிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும்.வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள்.

நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் விரும்பியவாறு உங்களுக்கு வெற்றி உண்டாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும்.வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும்.

விருச்சிகம் :

பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் மிகவும் தாமதமாகவே கிடைக்கும்.

எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகும். கல்வியில் சிறக்க மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதியவர்களுக்கு பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபங்களை தொழிலில் பெற முடியும்.

தனுசு :

உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவியுயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும்.

உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய காரியங்களை செய்வீர்கள்.பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.வாகனங்களை ஊட்டும் போது அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மகரம் :

உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பிறருடனான பணம் கொடுக்கல் வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத் தாமல் இருப்பது நல்லது. தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் எதுவும் இருக்காது.

ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதின் மூலம் தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்க முடியும். வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும்.உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும்.

வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியிலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

கும்பம் :

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும்.

ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும்.குழந்தைகள் வழியில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும்.

அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.தொழில், வியாபாரங்களில் லாபம் கிடைக்கும்.புதிய வாகனங்கள் வாகும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள்.

மீனம் :

குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும்.

உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.பிறருடன் பேசும் போது கனமுடன் பேச வேண்டும்.தொலைதூர பயணங்களால் வீண் பொருள் மற்றும் கால விரயம் ஏற்படும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களுக்கு மனக்கவலைகள் அதிகம் ஏற்படும். அவர்களின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களோடு உங்களுக்கு பிரச்சனைகள் எழலாம். பணவரவு தாராளமாக இருக்கும்.

கொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஒரு சிலருக்கு தாமதங்களும் பிரச்சனைகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

Aavani Month Rasi Palan 2019

 

Previous Post

அப்பர் சுவாமிகள், திருமயிலை.

Next Post

அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை

Next Post
அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை

அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »