1.எலும்புகளின் உறுதி… நமக்கான ஊன்றுகோல்… எலும்புகளை வலிமையாக வைத்திருக்கச் சில பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. அப்படிச் சிலவற்றைப் பார்ப்போம்.
2.ஜிம்மிற்குக் கூட போகவேண்டிய அவசியமில்லை. படிக்கட்டுகளில் ஏறிஇறங்குவதும்கூட நம்முடைய உடலைக் கட்டுடலாக மாற்றும்.
3.நேரம் கிடைக்கும்போது சைக்கிள் ஓட்டலாம். இது உடல்நலத்தோடு மனநலத்தையும் மேம்படுத்தும்.
4.தகுந்த நிபுணரின் ஆலோசனையுடன் எலும்புகளுக்கான யோகாசனங்களைச் செய்யலாம்.
5.வாக்கிங், ரன்னிங், மெது ஓட்டம் மூன்றுமே எலும்புகளை உறுதியாக்குபவை.
6.கயிற்றை வைத்துச் செய்யும் ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகள் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் சிறந்தவை.
7.ஏரோபிக்ஸ் செய்யலாம். கிட்டத்தட்ட நடனம்போல இருப்பதால் போர் அடிக்காது.
8.ஜூம்பா பயிற்சியை உடல் பருமனான குழந்தைகள், இளம் பருவத்தினர் செய்யலாம்.
9.நீச்சல் பயிற்சி எலும்புகளை மட்டுமின்றி, உடல் முழுவதையும் உறுதியாக்கக் கூடியது.











