• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

குகாலயத்தில் ஜீவசமாதி (29.12.1948)

siddharbhoomi by siddharbhoomi
August 12, 2018
in சித்தர்கள்
0
குகாலயத்தில் ஜீவசமாதி (29.12.1948)
15
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிராகச ஸ்வாமிகள் அதிர்ஷ்டானம்.

கந்தகுரு கவசம் அருளிய ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளின் குருநாதர்.

நாமக்கல் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், சேந்தமங்கலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க தத்தாத்ரேயர் குகாலயம் அமைந்துள்ளது. முன்பு, சன்னியாசி கரடு என்று அழைக்கப்பட்ட இது,

தற்போது தத்தாகிரி ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. பக்தி, தியானம் மூலமாக ஆத்மஞானம் பெற்ற பல முனிவர்கள், இங்கு தவத்தில் இருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இத்திருக்கோயிலின் குகாலயத்தில் ஜீவசமாதி (29.12.1948) அடைந்த ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள் சன்னிதானம் உள்ளது.

குகாலயத்திற்கு மேல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்களை உள்ளடக்கிய தத்தாத்ரேயர் விக்கிரகம் 29.5.1931ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளின் மையத்தில், சிவபெருமான் உருவம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள், விழுப்புரம் மாவட்டத்தில் கல்பட்டு அக்ரஹாரத்தில் ராமசாமி சாஸ்திரி-

ஜானகியம்மாள் தம்பதியினருக்கு 1817ம் ஆண்டு 4வது மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே ஆத்மஞானம் பெறும் நோக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் இருந்தது.

பின்னர் தஞ்சாவூர் அருகில் ஆடுதுறையில் காவேரி கரையில் தவம்புரிந்தார். திருவிடை மருதூரில் பள்ளிக்கல்வியை பயின்று, நாராயண சாஸ்திரி என்பவரிடம் வேதம் படித்தார்.

அதன் பிறகு காசி மாநகரில் சுமார் 3 ஆண்டுகள் தங்கியிருந்து, வேதங்களை பயின்றார். அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பி, மதுரை மாநகரை சேர்ந்த சதாசிவ பிரேம்மானந்தர்,

சரஸ்வதி அவதூத சுவாமிகளின் செயல்பாடுகளால் கவரப்பட்டு நெரூரை அடைந்து ஜட்ஜ் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். பின்னர் திருவண்ணாமலை, சேலம் வழியாக சேந்தமங்கலம் குகாலயத்தை வந்தடைந்தார். சுவாமிகள் அவதூத கோலத்தை தனது 28 வயதில் ஏற்றார்.

பிறகு சேந்தமங்கலம் குகாலயத்தில் தீவிர தவத்தில் இருந்து, சமுதாயம் உய்வதற்கான நெறிமுறைகளை மக்களுக்கு போதித்து வந்தார். சைவம், வைணவம் என்ற பேதங்களை போக்கும் விதமாக இந்த குகாலயத்தில் தத்தாத்ரேயர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து (29.5.1931) ல் கும்பாபிஷேகம் நடக்க வைத்தார்.

குருவின் தீவிர சீடரான சாந்தானந்த சுவாமிகள், இக்கோயிலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரியவேண்டும் என்ற நோக்கத்தில் குகாலயத்தில் 20.1.1983ல் தமிழ்க்கடவுளான முருகன் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்தார்.

அன்று முதல் இத்திருத்தலம் தத்தாகிரி முருகன் குகாலயம் என்று அழைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இத்திருத்தலத்தில் ஆன்மீக பணியாற்றிய சாந்தானந்த சுவாமிகள் 28.1.1985ல் சபா மண்டபத்தை அமைத்தார்.

சபா மண்டபத்தில் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, ஐயப்பன், கருப்பண்ண சுவாமி, தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், வன துர்க்கை ஆகிய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார். சபா மண்டபத்திற்கு வலப்புறம் குருநாதர் பல மாதங்கள் தவம் புரிந்த குகை உள்ளது.

நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.

நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-

சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!

உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!

+91-7305018180

Previous Post

அரிகேசபர்வதம் எனும் கன்னிவாடி மலை..!

Next Post

ஆவணி மாத ராசி பலன்கள் 2018

Next Post
ஆவணி மாத ராசி பலன்கள் 2018

ஆவணி மாத ராசி பலன்கள் 2018

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »